Skip to main content

Posts

Showing posts from February, 2015

சங்கப் பேச்சு - நற்றிணையின் எருமை உழவன்

சங்கப்பனுவல்களில் கேட்கும் குரல்கள் யாருடையவை ? அவை ஏன் குரல்களாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன ? அக்குரல்கள் யாரிடம் பேசுகின்றனவோ அல்லது எதைப்பற்றி பேசுகின்றனவோ அவர்களை / அவைகளைப் பற்றிய விவரணைகளெல்லாம் துல்லியமாக வெளிப்படும் போது , குரல்களைப் பற்றிய விவரங்கள் மட்டும் பூடகமாக இருப்பது ஏன் ? இக்குரல்கள் இன்னொரு குறிப்பிட்ட மனிதரிடமே (தோழி , அம்ம , ஊரன்) பேசுகின்றனவே ஏன் ? அதாவது , இன்றைய கவிதைகளில் காணப்படுவது போல் கற்பனையான வாசகரிடம் பேசாமல் நிஜமான மனிதரிடம் பேசுகிறதே ஏன் ? சங்கப்பனுவல்களில் வெளிப்படுவது உரையாடலா?   அதில் பதிவு செய்யப்பட்டுள்ள குரலிற்கு முந்தைய பிந்தைய பேச்சுகளை நம்மால் கற்பனை செய்ய முடியுமா ? சங்கப்பனுவல்களில் உருவாகும் சூழல் , பொதுவான பண்பாட்டுச் சூழல் ( cultural context) என்றும் உரையாசிரியர்களே கூடுதல் விவரங்களை சேர்த்து அவற்றிற்கான தனித்த சூழ்நிலைகளை (துறை போன்ற) ( context of situation) உருவாக்குகிறார்கள் என்று சொல்ல முடியுமா ? அதாவது , உரையாசிரியர்களின் பங்களிப்பு ,   பண்பாட்டுக் கதாபாத்திரங்களை கவித்துவ கதாபாத்திரங்களாக உருமாற்றியது எ