Skip to main content

Posts

Showing posts from April, 2016

‘தாய்மொழி’ என்ற ஏமாற்று வேலை

நேற்றைய சென்னைப் பல்கலைக்கழக கருத்தரங்கம், ஒரு சுவராஸ்யமான தகவலோடு ஆரம்பித்தது.  Endangered Languages என்ற பதத்தை எப்படி தமிழ் படுத்தினார்கள் என்ற கதையை ஒரு பேராசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார்.  முதலில், ‘அழிமொழி’ என்று தான் யோசித்தார்களாம், ஆனால், அது வினைத்தொகையாக இருக்கிறது என்பதால் ‘அழிநிலை மொழி’ என்று மாற்றி விட்டனர்.  வினைத்தொகைகள் எப்பொழுதுமே விபரீதமானவை - பேராசிரியர்களைப் போல. அந்த விபரீதம் பற்றியே நான் மதியத்தில் பேசுவதாக இருந்தேன். சந்ரு, தனது கலை பற்றிய பார்வைகளை செப்பனிட்டுக் கொள்வதற்கு பழங்குடி மக்கள் எவ்வளவு தூரம் அனுசரணையாய் இருந்தார்கள் என்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.  ஒரு பழங்குடியின பெரியவர், யானைக்கூட்டத்தைக் காட்டி, ‘அது எங்க பாட்டி தான்’ என்று சொன்னதை, தான் ஓவியமாக வரைந்ததை பற்றி பேசினார்.  ஒரு பழங்குடியினத்தின் மொழி அழிகிறது என்றால், அதன் ‘லேண்ட்ஸ்கேப்’ அழிகிறது என்றார்.  இந்த விஷயம் எனது மதிய பேச்சுக்கு நெருக்கமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, பேராசிரியர் கல்யாணி, இருளர் பழங்குடியினரோடு தான் மேற்கொண்டிருக்கும் மனிதவுரிமைப் பாதுகாப்பு அனுபவங்களை ப

எனக்குள்ளிருக்கும் ராஜதந்திரியைக் கொல்வது எப்படி?

எனக்குள்ளிருக்கும் ராஜதந்திரியைக் கொல்வது எப்படி? 2016 தேர்தலின் ஆகப்பெரிய பிரச்சினையே ‘சூழ்ச்சி’ தான் என்று மாறிவிட்டிருக்கிறது.     திமுக தலைவர் கருணாநிதியைச் சொன்னது போக, நம் எல்லோருக்குள்ளும் ஒரு ‘ராஜதந்திரி’ ஒளிந்து கொண்டிருக்கிறானோ என்று இப்பொழுது சந்தேகம் வருகிறது. வழக்கமாய் இந்தத் தேர்தல் சூழ்ச்சிகளை திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளே செய்து வருவதாகப் பேச்சிருக்கும்.  ஒருவரை ஒருவர் சேறு வாரி இறைப்பதற்கும், சிக்கலில் மாட்டி விடுவதற்கும், அதன் மூலம் பலவீனப்படுத்துவதற்கும் சூழ்ச்சிகள் நடப்பதாக விளக்கங்கள் சொல்லப்படும் (விளக்கங்கள் மட்டும் தான் சொல்லப்படும்!).  புலனாய்வுப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தான் நமக்கு இந்தத் தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பவை.  நாம் சூழ்ச்சிக் கதைகளின் வாசகர்களாக மட்டுமே தான் இருந்தோம்.    ஆனால், இந்த முறை, சூதாட்டத்தில், வாக்காளர்களாகிய நாமும் ஒரு கையாகச் சேர்ந்திருக்கிறோம். வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் பணம் எந்த வழிகளில் பயணம் செய்கிறது; யார் யார் எவ்வளவு பணத்தை செலவு செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்; ‘மாற்று அணியை’ உருவ