Skip to main content

Posts

Showing posts from July, 2016

தலித் அரசியல் தலைவர்கள் யானைப் பாகன்களா?

'நான் ஏன் தலித்தும் அல்ல?' -  நூல் உரையாடல் - 1 1.  கவசத்தை இழக்க முடியுமா ? - டி. தருமராஜிடம் சில கேள்விகளை முன்வைத்து .... ‘ நான் ஏன் தலித்தும் அல்ல ’ என்ற நூலுக்கான ஏற்புரையில் டி . தருமராஜ் இத்தலைப்பு ஏன் வைக்கப்பட்டது என இப்படி விவரிக்கிறார் . இந்நூல் நட்பும் காதல் பற்றி விவரிப்பதாகவும் , நட்புக்காக ஏங்குவதாகவும் , நட்பு கொள்பவருக்கு தன்னுடைய தலித் அடையாளம் தொந்தரவாக இருப்பதாகவும் , அதனால் என்னுடைய கடைசி ‘ கவசமான ‘ தலித் என்ற அடையாளத்தை இழப்பதற்கும் தயாராக இருப்பதாகவும் என கூறி நட்புக்கு அழைப்பு விடுக்கிறார் . அதனடிப்படையில் தான் தலைப்பு வைக்கப்பட்டது என விளக்கிறார் . இதில் என்னுடைய கேள்வியெல்லாம் ஒருவர் தன் தலித் அடையாளத்தை இழக்க முடியுமா என்பது தான் . தலித் என்ற அடையாளம் நட்பு கொள்பவரை தொந்தரவு செய்கிறதோ இல்லையோ , என்னை தொந்தரவு செய்வதாக உணர்கிறேன் . பொதுவெளியில் எந்த வேடமேற்றிருந்தாலும் , என்ன செய்தாலும் , எங்கு சென்றாலும் , நட்பு , காதல் போன்ற எந்த உறவேற்க விரும்பினாலும் தலித

T Dharmaraj's speech