Skip to main content

இளையராஜாவை வரைதல் - 1


ஒன்று

‘ராஜாவின் காதல் கீதங்கள்’ - ‘ராஜாவின் அம்மா பாடல்கள்’ என்ற இரண்டு பாடல் தொகுப்புகள் இல்லாத ராஜா ரசிகன் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை. 

‘அட, ஆமா’ என்பவர்களுக்கு ஒரு அறிவிப்பு - இந்தக் கட்டுரை உங்களைப் பற்றியது தான்.

‘இல்லயில்ல’ என்று சொல்பவர்கள் தொடர்ந்து கட்டுரையைப் படியுங்கள், இது உங்களுக்காகத் தான் எழுதப்படுகிறது.

‘ஆமா, இல்ல!’ என்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி -  இந்தக் கட்டுரையை நாம் தான் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

*

‘ராஜா பாடல்கள்’ என்பது ஒரு வெகுஜன கலை வடிவம். இதை உருவாக்கியது இளையராஜா இல்லை, அவரது ரசிகர்கள்! எனவே காப்புரிமை பிரச்சினைக்கெல்லாம் அப்பாற்பட்டது அது.

வெவ்வேறு திரைப்படங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக இளையராஜாவால் உருவாக்கப்பட்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்து,  அவரது ரசிகர்கள் ஏறக்குறைய ஒரு புதிய வகைக் கலைப்படைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  அதற்குத் தான் ‘ராஜா பாடல்கள்’ என்று பெயர்.   

இந்தத் தொகுப்புகளை உருவாக்குவதற்கோ அல்லது கேட்பதற்கோ, அவை எந்தத் திரைப்படங்களில், எந்த நடிகர்களுக்காக, எந்தப் பாடகர்களால் பாடப்பட்டன என்ற விபரமெல்லாம் உங்களுக்குத் தேவைப்படுவதில்லை.   கொஞ்சம் காதும், கொஞ்சமே கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தால் போதுமாக இருக்கிறது.

இது ஒரு வித்தியாசமான சூழலை நமக்குக் காட்டுகிறது. வழக்கமாய், இளையராஜாவின் பாடல்கள் திரைப்படங்களுக்கு உயிரூட்டுகின்றன என்று சொல்லித் தான் கேள்விப்பட்டிருக்கிறோம். நிஜத்தில் எல்லாமே தலைகீழாய் இருக்கிறது. ராஜா பாடல்கள் கலகத்தன்மையோடு வெளிப்படுகின்றன. அது ஒரு எதிர்க்குரல். தங்களது திரைப்படங்களைத் தாங்களே நிர்மூலமாக்கும் ஆக்ரோஷம் கொண்டவை.

பொதுவாக, வெளியான வேகத்தில் ஓடி முடித்து விடுபவை இந்தியத் திரைப்படங்கள். ஈசலைப் போல. இதற்குக் காரணமாக, அதன் கதம்ப குணத்தைத் தான் சொல்ல வேண்டும்.  

கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் காமம், கொஞ்சம் வீரம், தூக்கலாக அழுகை என்ற கதம்பகுணம் இந்தியத் திரைப்படங்களை உள்ளிருந்தே அழிக்கக்கூடியது. இதனால், வெளியான கொஞ்ச நாட்களிலேயே ஒரு திரைப்படம் துண்டு துண்டாக கழன்று கொள்ளத் தொடங்குகிறது.  பிடித்த நடனம், பிடித்த வசனம், பிடித்த பாடல், பிடித்த ஆடை, பிடித்த ஆபரணம் என்ற பெயரில் வெளியேறும் இத்துணுக்குகள் பின்பு தனித்தனியே வெகுஜன சூழலில் வலம் வர ஆரம்பிக்கின்றன.

வரி கட்ட மாட்டேன் என்று கட்டபொம்மன் சொல்கிற ‘சுதேசி’ வசனம் இப்படியொரு சிதறிய துணுக்கு. பராசக்தியில் சிவாஜிகணேசன் பேசிய நீதிமன்ற வசனம் கூட அப்படியானது தான்.  வடிவேலுவின் ஏராளமான நகைச்சுவை வரிகள் இந்த வகையைச் சார்ந்தவை. எம்ஜியாரின் மூக்குறிதல், சிவாஜிகணேசனின் உதட்டுப் பிதுக்கல், கமலஹாசனின் முத்த முயற்சிகள், ரஜினிகாந்தின் பாரிசப் படியிறங்கல் எனக் கழன்று விழும் துண்டுகளுக்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.  அப்படியானவொரு துண்டு தான் ‘ராஜா பாடல்கள்’.  

ஆனால், பிற துணுக்குகளை விடவும் இசைத் துணுக்குகள் வலிமையானவை.  

ஏனென்றால், வடிவேலுவின் துண்டு துண்டு நகைச்சுவைகள் செய்யாத வேலையை, ராமராஜனின் கண்ணைப்பறிக்கும் வண்ணச் சட்டைகள் செய்யாத வேலையை ராஜா பாடல்கள் செய்ய ஆரம்பிக்கின்றன.  தனித்தனியே கழன்று வந்த ராஜா பாடல்கள் திரைப்படங்களுக்கு வெளியே புத்தம் புதிய தொகுப்புகளாக இணையத் தொடங்குகின்றன. இது பிற துண்டுகளிடம் நடைபெறுவது இல்லை. 


திரைப்படம் என்ற ஒழுங்கை கவிழ்க்கிற பாடல்கள், தங்களுக்குள் வேறொரு ஒழுங்கையும் ஏற்படுத்திக் கொள்கின்றன.  இதற்கு சில காரணங்கள் இருக்க முடியும்.  கவனித்துப் பார்த்தால், திரைப்படம் என்ற பெருங்கதம்ப ஒழுங்கை சிதைக்கும் பாடல்கள் கூட தத்தம்மளவில் ஒரு கதம்ப ஒழுங்கோடு இருப்பதை நம்மால் உணர முடியும். கவிதை, இசை, காட்சி என்ற மூன்றும் கலந்த கதம்பம். திரையிசைப் பாடல்கள் திரைப்படங்களைக் கொல்வது கலகக்குணத்தால் அல்ல; ஒரு ஒழுங்கு இன்னொரு ஒழுங்கை விழுங்கி விடுகிறது.  

(இன்னும் வரும்)

Comments

Popular posts from this blog

கபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்? - Uncut

வெற்றிமாறன்இயக்கி, தனுஷ்நடித்துசமீபத்தில்வெளியாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படம்சிலபுதியவிவாதங்களைஏற்படுத்தியிருக்கிறது.  
அசுரன்ஒருநவயுகப்படம்.  அண்மைக்காலமாக, சாதியால்ஒடுக்கப்பட்டவர்களைக்கதாநாயகர்களாகக்கொண்டுதிரைப்படங்கள்வரத்தொடங்கியிருக்கின்றன.  இதுவொருபாராட்டத்தக்கமுயற்சி.  பா.ரஞ்சித்தின்திரைப்படங்கள்இதற்கானத்தொடக்கப்புள்ளிஎன்றுசொல்லமுடியும்.  
திரைப்படவரலாற்றறிஞர்கள்இதைமறுக்கக்கூடும்.  ரொம்பகாலத்திற்குமுன்னாடியேஇது

ஜல்லிக்கட்டும் இந்தியக் காலனியமும்

(ஜல்லிக்கட்டு பற்றி முக நூலில் எழுதிய ஒரு சிறு குறிப்பிற்குப் பின் நடைபெற்ற உரையாடல் இது.  ஒரு ஆவணப்படுத்தலுக்காக இங்கே பதிந்து வைத்துக் கொள்கிறேன்.  என்னோடு உரையாடிய ஆ. செல்லபெருமாள், மானிடவியல் அறிஞர்; பகத் வீர அருண், மானிடவியல் முனைவர் பட்ட ஆய்வாளர்; பிலவேந்திரன், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்; புஷ்ப நந்தினி, நாடகத்துறை ஆய்வாளர்; ஏர் மகாராசன், ஆசிரியர்.)

மாடும்மாதொருபாகனும்! பெருமாள்முருகனின்மாதொருபாகனுக்குஎன்னநடந்ததோஅதுதான்இன்றைக்குஜல்லிக்கட்டிற்கும்நடக்கிறது. பல்லைக்கடித்துக்கொண்டு, இரண்டையும்ஆதரிப்பதுதவிரஎனக்குவேறுவாய்ப்புகள்இருக்கவில்லை. ஆனால்இதில்வேடிக்கைஎன்னவென்றால், மாதொருபாகனுக்குஎதிர்ப்புதெரிவித்தவர்கள்தான்இன்றைக்குஜல்லிக்கட்டிற்குஆதரவுதெரிவிக்கிறார்கள்.
இதுதான்முக நூல் பதிவு.  இனி வருவது அது சார்ந்த உரையாடல்:


. செல்லபெருமாள்: 
மாதொருபாகனில்வெளிப்பட்டதுசுயநலநுண்அரசியல். ஜல்லிக்கட்டில்