Skip to main content

Posts

Showing posts from November, 2019

தமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்

(விரைவில் வெளிவரவிருக்கும் 'ஜல்லிக்கட்டு: கொந்தளிப்பின் அரசியல்' என்ற நூலின் ஒரு அத்தியாயம் இந்தக் கட்டுரை.  நவம்பர் 7ம் தேதி, இந்து தமிழ் திசையில் வெளியானது.  அதன் முழுமையான வடிவம் இங்கே.) புதுமைப்பித்தன் கேலி பேசிய ‘தமிழ்க் குரங்கு’ போல இது என்ன ‘தமிழ் அரவம்’ என்று பயப்பட வேண்டாம். அரவம், உண்மையாய்ச் சொல்லுகிறேன், ரொம்ப நல்ல வார்த்தை.  ‘அரவம் நல்லது’ என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.  அரவம் என்றால் பாம்பு; அரவம் என்றால் ஆரவாரம் (அரவம் ஜாஸ்தியா இருக்கே!); அரவம் என்றால் மெல்லிய ஓசை என்றும் பொருள் (வந்து போன அரவமே இல்லை); பேச்சுவழக்கில் அரவம், அருவமாகியும் விடுகிறது (அருவமில்லாம வந்துட்டு போயிட்டான்!); சமஸ்கிருதத்தில் அரவம் என்றால் ஓசையின்மை என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் மேலே, அரவம் என்றால் தமிழர் என்றும் பொருள்.   தமிழர் என்ற அடையாளத்தை மொழி கொண்டு மட்டுமே தீர்மானித்துக் கொண்டிருக்கும் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் அதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது என்று சொல்வதற்காக இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.   ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு, அது அரவம்!’ என்று த