Skip to main content

Posts

Showing posts from June, 2020

தேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்

தேவேந்திரர் புராணத்தில் இரண்டு வரலாற்று மோதல்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஒன்று, நெல் வேளாண்மைக்குத் தேவையான காளைகளை வைதீக வேள்வி வன்முறையிலிருந்து காப்பாற்றும் முகமாக உருவாகிய முரண்; மற்றொன்று, பாரம்பரிய நிலங்களையும் நீர் நிலைகளையும் பறிகொடுத்த போது எழுந்த முரண். * முதல் முரண் வரலாற்றில் பெளத்த - வைதீக முரண் என்று அழைக்கப்படுகிறது. இந்த முரணில், அரசியல் படுத்தப்பட்ட தன்னிலையே ‘தேவேந்திரன்’. அதன் எதிர்நிலை ‘பிராமணம்’. அந்த வகையில், தேவேந்திரத் தன்னிலையின் இன்றியமையாத ஒரு பகுதி, ‘அபிராமணம்’. வாய்மொழி மற்றும் எழுத்து மரபுகள் தேவேந்திரன் என்ற பெயரை பெளத்தத்தோடும், நெல் விவசாயத்தோடும், தீண்டாமையோடும் தொடர்பு படுத்துவதைக் கொண்டே நாம் இந்த முடிவிற்கு வருகிறோம். கால் நடைச் சமூக வாழ்விலிருந்து கிளைத்திருக்கக்கூடிய வேள்வி மரபு, வீணே கொல்லும் விலங்குகள் வேளாண் சமூகத்திற்கான உயிர் நாடியாக மாறும் பொழுது, அதை எதிர்த்து வெகுஜனக் கொந்தளிப்பொன்ரு உருவாகியிருக்க வேண்டும். இந்தக் கொந்தளிப்பை எதிர்கொள்ள முடியாத பிராமணர்கள் வேள்வி உயிர்க்கொலையை நிறுத்தினார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அநாவசியம

தேவேந்திரத் தன்னிலை...

மாற்று வரலாற்றுவரைவியலில் கடந்தகால சம்பவங்களை அல்லது நிகழ்வுகளைக் கற்பனை செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன .  உதாரணமாய் , பூர்வ பெளத்தர்களை ‘ பறையர்கள் ’ என்று சொல்லி இழிவுபடுத்தினார்கள் என்பதை நிரூபிக்க விரும்பும் அயோத்திதாசர் , அதற்கொரு சம்பவத்தைக் கற்பனை செய்கிறார் .  அந்த சம்பவத்தில் வேஷ பிராமணர்களும் , பூர்வ பெளத்தர்களும் , பொதுமக்களும் கதாபாத்திரங்களாக இடம் பெறுகின்றனர் . இந்த சம்பவமே ஒட்டுமொத்த ' இந்திர தேச சரித்திரத்தையும் ’ தாங்கி நிற்கிறது .   பறையர் என்ற சாதி அடையாளம் திணிக்கப்பட்ட அடையாளம் என்று வாதிட அந்த சம்பவம் துணை செய்கிறது . தீண்டாமை ஒரு தண்டனையாக பெளத்தர்கள் மீது விதிக்கப்பட்டத்து என்பதற்கான காரண காரியங்களை அந்தச் சம்பவமே வழங்குகிறது .  அதாவது , அந்த நிகழ்ச்சியே வரலாற்றை ‘ சரிவிற்கு முன் ’, ‘ சரிவிற்குப் பின் ’ என்று இரண்டாக வகிரவும் உதவுகிறது . ( வரலாறு ஏன் எப்பொழுதும் இரண்டாகவே பிளக்கிறது ?  அது நேர்கோடு இல்லையென்றால் , ஓங்கி ஒரு வெட்டு வெட்ட , மூன்றாய் நான்காய் அல்லவா பிளவுபட வேண்டும்

அம்பேத்கரின் 'தீண்டாமையின் தோற்றம்'

('தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?' என்ற கட்டுரையை முழுமையாக விளங்கிக் கொள்ள இந்தக் கட்டுரை உதவி செய்யும்.  2007ல் எழுதப்பட்ட இக்கட்டுரை, 'அம்பேத்கரின் பன்முகம்' என்ற நூலில் இடம்பெற்றிருந்தது.) தீண்டாமையின் வேர்கள் குறித்து அம்பேத்கர் மேற்கொண்ட ஆய்வுகள் மிகச் சுருக்கமானவை என்றாலும் , தீவிரமான விவாதப் புள்ளிகளை உள்ளடக்கியவை. ' சாதி ' குறித்துப் பரந்த அளவிலும் , தீண்டாமை ', ' வர்ணம் ', ' விலக்கல் ', ' தீட்டு ' என்று குறிப்பாகவும் பல்வேறு வகையான ஆய்வாளர்களால் , வெவ்வேறு தருணங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட சாதிய ஒழுங்கமைப்பு என்ற சொல்லாடலை இரண்டு வகை என்று சொல்ல முடியும். ' சாதி ' என்ற காரணியை அதன் வரலாற்றுத் தன்மையோடும் , நடைமுறை வெளிப்பாடுகளோடும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆய்வாளர்களால் கட்டமைக்கப்பட்ட சொல்லாடலை முதல் வகை என்று கொள்ளலாம். இவ்வகை ஆய்வாளர்களிலிருந்து திட்டவட்டமாக வேறுபடுகிற இரண்டாம் வகையினர் , சாதியத்தின் வேர்களையும் , நடைமுறைச் சிக்கல்களையும் அலசுவதோடு நிற்காமல் , ' சாதி ' யை அழித்தொழிக்கு