Skip to main content

Posts

Showing posts from November, 2020

அயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை

உறங்கு நிலையில் ஒரு மாற்று வரலாறு: பூர்வ பெளத்தனின் கல்லறை அசுரா நாதன் (அகழ், செப்டம்பர் 2020, மின்னிதழில் வெளியானக் கட்டுரை) நாட்டுப்புற பண்பாட்டுக் கலாசாரத் துறைசார்ந்த டி . தர்மராஜ் அவர்களின் ‘ பார்ப்பனர் முதல் பறையர் வரை ’ எனும் நூல் வாசிப்பின் ‘ ஞாபகம் ’ இது . இவரின் ‘ நான் ஏன் தலித்தும் அல்ல ’ என்ற நூலையும் வாசித்த அனுபவத் தூண்டுதலும் ‘ பார்ப்பனர் முதல் பறையர் வரை ’ எனும்   பிரதியை கவனம் கெள்ள வைத்தது . இந்த நூலுக்காக எழுதப்பட்ட முன்னுரையைக் கடந்து , பிரதியின் முழுமையை தரிசிப்பதற்கு ஒரு வாசகன் தன்னை முதலில் தகவமைத்துக் கொள்ளவேண்டும் . நான் யார் ! யாராக இருந்தேன் ! நான் யாராக இருக்கவேண்டும் !  என இந்த   நூலின் முன்னுரைக்கு நாம் வழங்கும் தார்மிக பதிலுரைப்பு அவசியமானது . நீ தலித்தாக இருக்கின்றாயா ? தலித்தாக சிந்திக்கின்றாயா ? தலித்துக்களுக்காக போராடுபவனா ? எழுதுபவனா ? ஆய்வாளனா ? அறிஞனா ? எந்த தோற்றத்தில் , எந்த வடிவத்தில் நீ பதுங்கியிருக்கிறாய் ! என தீண்டத்தகாதவன் எனும் சமூக வலியை வாழ்நாள் எல்லாம் சுமந்து கொண்டிருப்பவ