Skip to main content

Posts

Showing posts from November, 2015

சமையலறைகளில் தயாரிக்கப்படும் உணவு சாப்பிட மட்டுமே!

ஒரு கேள்வி : தலித்கள் , பழங்குடியினர் , மலைவாழ் மக்கள் , கிறிஸ்தவர்கள் , இஸ்லாமியர்கள் ஆகியோரின் சமையலறைகளில் மாட்டுக்கறி சமைக்கத்தானே படுகின்றன . இவர்களின் எண்ணிக்கை சுமார் 40% க்கு மேல் வருமே . அவர்கள் இந்தியர்கள் இல்லை என்றா சொல்கிறீர்கள் ... பெரும்பான்மை இந்துக்களின் சமையலறைகளில் ஏன் மாட்டுக்கறி இல்லை என்றுதானே தலைப்பு இருக்கவேண்டும் . B. R. Mahadevan 'இந்திய சமையலறையில் ஏன் மாடுக்கறி இல்லை?' என்ற கட்டுரையில் சில இடங்களை மௌனமாகக் கடந்திருக்கிறேன்.   வேண்டுமென் றே தான். அதில் ஒன்று, 'மாட்டுக்கறி மீதான விரோதம் வரலாற்றில் எப்பொழுது ஏற்பட்டது?' என்ற கேள்வி.   மற்றொன்று, 'இந்தியாவில் யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள் யாரெல்லாம் இல்லை' என்ற பட்டியல்.   உங்களது கேள்வி இந்த இரண்டாவது விஷயத்தை மையப்படுத் துகிறது . இனி விஷயத்திற்கு வருவோம். மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள், சாப்பிடாதவர்கள் என்ற தெளிவான பட்டியல் நம்மிடம் இல்லை.   இப்பொழுதும் இல்லை, எப்பொழுதும் இல்லை. தலித்துகள், பழங்குடியினர் ( மலைவாழ்மக்க

இந்திய சமையலறையில் ஏன் மாட்டுக்கறி இல்லை?

முன் கதைச் சுருக்கம்: பெருஞ்சமூகத்தில் மத அடிப்படைவாதம் வாழ்க்கையாக இருக்கிறது என்றால், அதற்கு எதிரான வாழ்கையை வாழ வாய்ப்புகளை வழங்குவதே கல்வி நிலையங்களின் பணியாக இருக்கிறது.   அதே போல், சாதிப் பாகுபாடுகளற்ற கற்பனையான சூழலை உருவாக்கி காட்டுவதும் அதன் பணியே.,   மனிதர்களை அவர்களது சிந்தனையாலும் செயலாலும் மட்டுமே அடையாளப்படுத்துகிற வாழ்க்கையொன்றை நிர்மாணிப்பது,    பொருளாதாரக் காரணிகள் வலுவிழந்த சமூக உறவுகளை கட்டமைப்பது போன்றவையும் கல்வி நிலையங்களின் வேலை தான்.   நேரடியாய் உணவு உற்பத்தியால் பாதிக்கப்படாத வாழ்க்கைச் சூழலை கல்வி நிலையங்களே ஏற்படுத்தித் தரமுடியும்.   இந்தச் சூழல்கள் அனைத்தும் கற்பனையானவை தான்!   நிஜமல்ல தான்!   ஏட்டுச் சுரைக்காய் தான்!   விளைச்சல் வீடு வந்து சேராத வெள்ளாமை தான்!   ஆனால், ஒரு நல்ல பள்ளிக்கூடம் இதைச் செய்வது தான் நியாயம்.   JNU அதைச் செய்திருந்தது. இனி....   ஒரு முன்மாதிரியான கல்வி நிலையத்தை, பௌத்த பள்ளிகள் மற்றும் சங்கங்களோடு ஒப்பிட முடியும். அவை எப்பொழுதுமே சமூக விதிகளுக்கு புறம்பானவை.   இலட்சியவாத ஒழுக்க விதிகளை வலிந்து வாழ்ந்து காட்டுபவ