Skip to main content

Posts

Showing posts from August, 2017

நீட் போராட்டம் - ஒரு ஃப்ளூ ப்ரிண்ட்.

2018, ஜனவரியில் வெளிவரவிருக்கும் 'ஜல்லிக்கட்டு போராட்டம்' பற்றிய புத்தகத்திலிருந்து...... 'நீட் தேர்வுக்கு எதிரான வெகுஜன கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வரைபடம் -  பள்ளிக்கூடங்களை மாலைகளில் அடைக்காதீர்கள்!  வகுப்பறைகளில் நீட் தேர்வின் அநியாயங்களை மட்டுமே பேசுங்கள்! நீட் தேர்வு, ஒரு அராஜகம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அப்படி மாற்றுக்கருத்து இருப்பதாய் சொல்கிறவர்கள் கூட, மாநிலத் தேர்வு முறையிலிருக்கும் கோளாறுகளைச் சுட்டிக் காட்ட வந்த கோபத்தாலேயே நீட் தேர்வுக்கு ஆதரவு போலப் பேசுகிறார்கள். மற்ற படி, இந்த ஒற்றை தேர்வு முறையை ஆதரிப்பதற்கான எந்த முகாந்திரமும் யாருக்கும் இல்லை. இந்தத் தேர்வு முறையின் காரணமாக நேரடியாகப் பாதிக்கப்படுகிறவர்கள், தமிழகப் பள்ளிகளில் படித்த மாணவர்கள். இந்தப் பாதிப்பு, அவர்களது பெற்றோரை உடனடியாகவும், சமூகத்தை பொறுத்திருந்தும், நமது அரசியல் உரிமையை நிதானமாகவும் காவு வாங்கப்போகிறது. மாநில உரிமைகளைப் பேணுவதற்கான எந்தவொரு முனைப்பும் தைரியமும் இல்லாத அரசாங்கமே நமது பலவீனம். நீதிமன்றங்களும் கைவிட்டு விட்ட நிலையில் இன்றைக்கு நமக்கிருக்கிற ஒர