Skip to main content

Posts

Showing posts from August, 2019

வாரிசு அரசியலுக்கும் பாசிசத்திற்கும் என்ன வித்தியாசம்?

‘ உயிர்மை ’ யில் வெளிவந்திருக்கும் ராஜன் குறையின் கட்டுரை நமக்கு இரண்டு சாத்தியங்களே உள்ளதாகச் சொல்கிறது .  ஒன்று , வெகுஜன இறையாண்மை ; இன்னொன்று , பாசிசம் .  இவ்விரண்டில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுப்பதே அரசியல் யதார்த்தம் என்று நம் கழுத்தில் கத்தியையும் வைக்கிறது .   உதறுது தானே ?  அதைத் தான் அந்தக் கட்டுரையும் விரும்புகிறது .   ‘ இந்தக் கட்டுரை யாருக்காக எழுதப்படுகிறது ?’ என்ற கேள்வியில் நாம் ஆரம்பிக்கலாம் .  நிச்சயமாய் இது வெகுஜனங்களுக்கோ அல்லது பாசிச சிந்தனை கொண்டவர்களுக்கோ எழுதப்பட்டது அல்ல .  கட்டுரை நெடுக ,  ‘ கற்பிதங்களில் மூழ்கியிருப்பவர்கள் ’, ‘ பித்தர்கள் ’, ‘ பில்டிங் ஸ்ட்ராங்   பேஸ்மெண்ட் வீக் ’ என்றெல்லாம் நக்கலடிக்கப்படும் சுதந்திரவாத சிந்தனையாளர்களை நோக்கித் தான் அது   பேசிக் கொண்டிருக்கிறது .   * வெகுஜன இறையாண்மையின் நியாயத்தை ராஜன் , எர்னஸ்டோ லாக்லவ்வின் ‘ காலிக்குறிப்பான் ’ என்ற கருத்தாக்கம் கொண்டு விளக்குகிறார் .  அது மிகச் சரியானதும் கூட . மக்களாட்சி என்ற கற்பனையும் கூட இதையே தான் ஆதரிக