Skip to main content

Posts

Showing posts from February, 2020

'அயோத்திதாசரை' வாசித்து அறிவது நம் அனைவரின் தேவை - முகம்மது யூசுப்

" அயோத்திதாசர் " டி.தருமராஜ் அவர்களின் நூலின் வாயிலாகத்தான் முதன் முதலாக அயோத்திதாசரை என் வாசிப்பில் வழி அறிகிறேன் என்ற கூச்சத்துடன் தான் ஆரம்பம் செய்ய வேண்டியு ள்ளது. நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போதே வேக வேகமாகச் சென்று தமிழ் கூறும் நல் உலகின் அறம் பேசும் அறிவுஜீவிகளின் இலக்கிய பெட்டகமான " அழியாச் சுடர் " எனும் பக்கம் சென்று காநாசு லாசரா குபரா இன்னும் என்னென்னமோ பெயர்களுக்கு இடையில் அயோத்திதாசர் பெயரைத் தேடினேன். நான் நினைத்தது போலவே இல்லை. அப்போ, அந்த அழியாச்சுடர் பெரும்பான்மை வரிசையை நான் வெறுப்பதில் தப்பே இல்லை என நினைத்துக் கொண்டேன்.  காலம் முழுவதும் தமிழில் எழுதிக் கொண்டு இருந்தவரை, நீண்ட நாட்கள் சிற்றிதழ் நடத்தியவரை எந்த ஒரு அடையாளமும் இன்றி சுருட்டி கசக்கி தூர எறிந்து விட முடியுமா.  முடியும்.. நீங்கள் உயர்ஜாதி அல்லது இடைஜாதிக்குள் இல்லாதபட்சத்தில்.  உண்மையில் சொல்லப்போனால் இந்த நூல் சார்ந்து ஒங்கொம்மா ங்கொத்தா என்று தான் திட்டி எழுத வேண்டும் .  ஆனாலும் பாருங்கள் இன்டலெக்சுவல் சமுதாயம் ஆண்ட பரம்பரை வேறு, சரி என்ன செய்ய மனதை இறுக்கமாக