Skip to main content

Posts

Showing posts from July, 2020

'அயோத்திதாசர்' நூலுக்கான தமிழ் தேசிய விமர்சனம்

‘ஏர்’ மகாராசன், தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருப்பவர்.   பள்ளி ஆசிரியர்.   அவரது ‘ஏறு தழுவுதல்’ என்ற நூல், ஜல்லிக்கட்டுக் கிளர்ச்சி நடந்த போது வெளிவந்து பரவலான கவனத்தையும், பாராட்டையும் பெற்றது.   பாவாணர் வழி வந்த தமிழர் அடையாள அரசியலை வரித்துக் கொண்டவர்.   மிகச்சிறந்த வாசகர்.   ‘அயோத்திதாசர்’ நூலை வாசித்த கொஞ்ச நாட்களில் அவரடைந்த உற்சாகத்தின் ஒரு சிறு துளி இந்தக் கட்டுரை.   கொஞ்சம் ‘எவ்ளோ பெரிய கட்டுரை!’ தான்.   அயோத்திதாசர் எழுத்துக்களுக்கு அவர் வந்தடைந்த பாதையை இங்கே விரிவாக எழுதியிருக்கிறார்.   ‘அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை’ நூலைத் திறந்த மனதுடன் படிக்கிற ஒவ்வொருவரும் படைப்பாக்க உளக்கிளர்ச்சியை அடைவார்கள் என்பது எனது பிடிவாத நம்பிக்கை.   தமிழில், சமீபத்தில், இப்படியொரு நூல் எழுதப்படவில்லை என்பது எனது துணிபு.   அதை நிரூபிக்கும் வலுவான சான்று இக்கட்டுரை.   டி. தருமராஜ் மகாராசன்    அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்   டி. தருமராஜின் ‘அயோத்திதாசர்’ நூலை முன்வைத்து. மகாராசன் தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டிருப்பது . அது , ஒற்றைத் தன்மையான