Skip to main content

Posts

Showing posts from August, 2020

மெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்!

(உலக நாட்டுப்புற தினமான நேற்று 22-08-2020, வெளியிட்ட 'தமிழ் நாட்டுப்புறவியல் அறிக்கை.) தமிழ் நாட்டுப்புறவியல் என்று எதையாவது நாம் சிந்திக்கிறோம் என்றால் அது   ‘ நாட்டுப்புறத்தை ’ மெய் நிகர் வடிவமாக மாற்றுவதாக மட்டுமே இருக்க முடியும் .   ‘ மெய்நிகர் நாட்டுப்புறம் ’ (Virtual Folklore), மின்னியல் தொழில் நுட்ப உதவியோடு உருவாக்கப்படுவது ;   எனவே , ‘ மின்னியல் வழக்காற்றியல் ’ (Digital Folklore) என்றும் அதை அழைக்க முடியும் .     தமிழ் நாட்டுப்புறவியல் என்ற நவீனத்துவத் திட்டத்தின் கருத்தியல் அடிப்படைகளை வழக்காற்றியலின் அரசியலும் அழகியலும் என்று நாம் பேசுகிறோம் .   அதன் செயற்திட்டங்களை ‘ மின்னியல் வழக்காற்றியல் ’ என்று சொல்கிறோம் .     உலக நாட்டுப்புற வழக்காறுகள் தினமான இன்று ‘ மெய்நிகர் நாட்டுப்புறம் ’ குறித்துப் பேசுவது முரணாகத் தோன்றலாம் .   ஏனெனில் , மெய்நிகர் வடிவங்கள் , யதார்த்த வடிவங்களின் கல்லறைகளின் மீதே எழுப்பப்படுகின்றன .   வழக்காறுகளை அழிய விடுவது எப்படி ?   நாட்டாரைக் கொலை செய்வது எப்படி ? என்ற கேள்விகளுக்கான பதில் ம