Skip to main content

Posts

Showing posts from 2021

ஜெய்பீமில் இல்லாதிருந்த குரலுரிமை!

 'ஜெய்பீம்' திரைப்படம் குறித்த எனது முதல் பதிவு இப்படி இருந்தது: #ஜெய்பீம் நலிந்தவர்களை ஈடேற்றும் போதை! 1. தமிழர்கள் தங்களைப் புரட்சியாளர்களாக எண்ணி மயங்குகிற தருணங்கள் நிறைய உண்டு. எம்ஜியார் அரசியலில் இருந்த பொழுது, திமுக தேர்தலில் வெற்றி பெற்று விடுகிற சமயங்களில், ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு வரும் பொழுது… இந்த வரிசையில், ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை சிலாகிப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மனிதவுரிமை மீறல் எதிர்ப்புப் போராட்டங்களின் உக்கிரமும், உண்மைத்தன்மையும், நியாயமும் அவை நிகழ்த்தப்படும் போது மட்டுமே வெளிப்படுகின்றன. பின்னாட்களில், அவற்றை ஆவணமாகவோ அல்லது புனைவாகவோ உருட்டித் திரட்டும் பொழுது, மனிதர்களற்ற மனிதவுரிமைச் சிக்கல்களாகவே அவை வேடிக்கை காட்டுகின்றன. ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்க்கும் பொழுதும் எனக்கு இப்படித்தான் தோன்றியது - இருளர்களின் சமூகச் சிக்கல் இருக்கிறது, இருளர்கள் எங்கே சார்? 2. ‘இருளர்கள் எங்கே?’ என்ற கேள்வி கொஞ்சம் பழைய கேள்வி தான். இருளர்கள் பேசும் படைப்புகளை இருளர்களே தான் எடுக்க வேண்டும் என்றெல்லாம் நாம் அதற்குப் பதில் சொல்ல

பிறாமணாள் சினிமா

தி. ஜானகிராமனின் பாயசம் கதையை படமெடுத்திருக்கிறார்கள். வசந்த், இயக்கம். கூட்டமாகச் சேர்ந்து, திஜாரவின் பாயசத்தை சாக்கடையில் கவிழ்த்திருக்கிறார்கள். எழுத்தை காட்சியாகக் கற்பனை செய்யும் அருகதையே இல்லாத சினிமாக்காரர்களே நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்பது எவ்வளவு கொடூரமானது! இரண்டே இரண்டு விஷயங்களை மட்டும் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனியுங்கள். முதலாவதாக, சாமநாது, திரைப்படத்தில் காட்டுவது போல, பொறாமையால் அந்த பாயச அண்டாவைக் கவிழ்த்து விடவில்லை. அப்படிக் கவிழ்த்ததற்கு இன்னும் சிக்கலானக் காரணங்கள் இருப்பதாக சிறுகதை சொல்கிறது. உதாரணமாய், தனது தேகக்கட்டு குறித்து சாமநாதுவுக்கு இருக்கும் கற்பனை - / /“எனக்கு எழுபத்தேழு வயசுதான். சுப்பராயனுக்கு அறுபத்தாறு வயசுதான். இருக்கட்டும். ஆனா யாரைப் பார்த்தா எழுவத்தேழுன்னு சொல்லுவா? என்னையா, அவனையா? பதினஞ்சு லக்ஷம் இருபது லக்ஷம்னு சொத்து சம்பாதிச்சா ஆயிடுமா? அடித் தென்னமட்டை மாதிரி பாளம் பாளமா இப்படி மார் கிடைக்குமா? கையிலேயும் ஆடுசதையிலியும் கண்டு கண்டா இப்படிக் கல்லுச் சதை கிடைச்சுடுமா?// கலியாண சந்தடியில் அவருக்கு ஏற்படும் மூச்சிரைப்பு, //“கண்ணூஞ்சலாடி

யோசனா என்ற கோதையும், மாடத்தி என்ற ஆண்டாளும்!

ஒரு சிறுபெண்ணுக்கு மானசீகக் காதலன் இருந்தான் .   ஒரு நாள் , காதலை அவனிடம் சொல்லி விட அவள் முடிவு செய்தாள் .   காதலனைத் தேடியும் வந்தாள் . வந்த இடத்தில் அவளைக் கூட்டமாய் வன்புணர்ச்சி செய்து , கொன்று போடுகிறார்கள் .  வன்புணர்ந்த கூட்டத்தில் மானசீகக் காதலனும் இருந்தான் என்பதை அறிந்தே அவள் இறந்தாள் . இது தான் மாடத்தியின் கதை . மேம்போக்காகப் பார்க்க , இந்தக் கதை அறிவியல் முரணால் கட்டப்பட்டிருப்பது போலத் தெரியும் .  மானசீகத்திற்கும் யதார்த்ததிற்குமான முரணைப் பேசுவதாகத் தோன்றலாம் .  நினைப்பை விடவும் நிஜம் அசிங்கமானது என்ற உண்மையை கோதை எத்தனைக் கொடூரமாக உணர நேர்ந்தது என்பதை விளக்க வந்தது போலத் தெரியலாம் .  ஏராளமான யதார்த்தவாதக் கலைப்படைப்புகள் இதைத்தான் செய்திருக்கின்றன .  புதுமைப்பித்தனின் பொன்னகரம் ஒரு உதாரணம் .    இந்தக் கதையை இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்துப் பார்க்கிறவர்களுக்கு அதன் இன்னொரு பரிணாமம் எட்டக்கூடும் .  கூட்டு வன்புணர்ச்சி செய்தவர்கள் குடிபோதையில் இருந்தனர் என்ற செய்தியும் கதையில் வருகிறது .  அப