Skip to main content

Posts

Showing posts from March, 2021

‘திராவிட மேட்டிமையின் குறியீட்டு அடையாளமே வெள்ளாளப் பெருமிதம்’ - நேர்காணல்

‘ திராவிட மேட்டிமையின் குறியீட்டு அடையாளமே வெள்ளாளப் பெருமிதம் ’ பேராசிரியர் டி . தருமராஜ் நேர்காணல் சந்திப்பு :  பா . ச . அரிபாபு , இரா . கார்த்திக் நாட்டுப்புறவியல் பேராசிரியரும் பண்பாட்டு ஆய்வாளருமான டி . தருமராஜ் தமிழகத்துச் சிந்தனையாளர்களுள் மிக முக்கியமானவர் .  மொழியியல் , மானிடவியல் , கலை , இலக்கியம் , சினிமா , கோட்பாடு எனப் பல அறிவுத் துறைகளிலும் தனது பங்களிப்பைத் தீவிரமாகச் செலுத்தி வருபவர் .  ‘ கலகக்காரர்களும் எதிர்க் கதையாடல்களும் ’, ‘ நான் பூர்வ பெளத்தன் ’, ‘ சனங்களின் சாமிகள் ’, ‘ தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி ?’, ‘ உள்ளூர் வரலாறு ’, ‘ நான் ஏன் தலித்தும் அல்ல ?’, ’ கபாலி - திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும் ’, ‘ இளையராஜாவை வரைதல் ’, ‘ தமிழ் நாட்டுப்புறவியல் ’, ‘ இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை ?’ உள்ளிட்ட பல நூற்களை எழுதியிருக்கும் இவரது , கடந்த ஆண்டு வெளியான ‘ அயோத்திதாசர் : பார்ப்பனர் முதல் பறையர் வரை ’ என்ற புத்தகம் தமிழ்ச் சூழலில் தீவிர கவனம் பெற்றதோடு அயோத்திதாசர் என்ற சிந்தனையாளரைத் தமி