Skip to main content

Posts

Showing posts with the label மானிடவியல்

இலங்கையில் சிங்களவர்! உலகெங்கும் ஈழத்தமிழர்!

(4-02-2017 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசியதன் எழுத்து வடிவம்.) வேற்றுமைகளே உண்மை / வேற்றுமைகளைக் கடந்த உண்மை நான் மிகவும் மதிக்கக்கூடிய மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி எழுதியுள்ள ‘இலங்கையில் சிங்களவர்’ என்ற நூல் சிங்களவரைப் பற்றிய மானிடவியல் நூல் அல்ல.   மாறாக இது ஒரு சர்ச்சையை உத்தேசித்து எழுதப்பட்ட அரசியல் நூல்.   முரண்பட்டே நிற்கும் என்று கற்பனை செய்யப்படும்  (உபயம்: அமைப்பியல் மானிடவியலாளர் கிளாட் லெவி ஸ்ட்ரோஸ்) அருகாமை இனங்கள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்காக ஆரம்பிக்க வேண்டிய சர்ச்சை இது. தேசிய இனப் போரால் சகல தளத்திலும் சிதைக்கப்பட்டிருக்கிற இலங்கைக்கு இப்படியொரு சர்ச்சையும் அதைத் தொடர்ந்து நிகழும் உரையாடலும் அவசியம்.   அப்படியொரு உரையாடலை தமிழர்கள் பக்கமிருந்து பாரதி ஆரம்பிக்கிறார்.   புத்தகத்தில் அவரே சொல்வது போல், தொல்லியல், வரலாற்றியல், சமூக அறிவியல்கள், மொழியியல் என்று பல்வேறு துறைகள் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கிற ஆய்வுகளின் வழி சிங்களவர்களை அறிமுகம் செய்ய இந்த நூல் முயற்சி செய்கிறது.  அதுவும் க...

‘தாய்மொழி’ என்ற ஏமாற்று வேலை

நேற்றைய சென்னைப் பல்கலைக்கழக கருத்தரங்கம், ஒரு சுவராஸ்யமான தகவலோடு ஆரம்பித்தது.  Endangered Languages என்ற பதத்தை எப்படி தமிழ் படுத்தினார்கள் என்ற கதையை ஒரு பேராசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார்.  முதலில், ‘அழிமொழி’ என்று தான் யோசித்தார்களாம், ஆனால், அது வினைத்தொகையாக இருக்கிறது என்பதால் ‘அழிநிலை மொழி’ என்று மாற்றி விட்டனர்.  வினைத்தொகைகள் எப்பொழுதுமே விபரீதமானவை - பேராசிரியர்களைப் போல. அந்த விபரீதம் பற்றியே நான் மதியத்தில் பேசுவதாக இருந்தேன். சந்ரு, தனது கலை பற்றிய பார்வைகளை செப்பனிட்டுக் கொள்வதற்கு பழங்குடி மக்கள் எவ்வளவு தூரம் அனுசரணையாய் இருந்தார்கள் என்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.  ஒரு பழங்குடியின பெரியவர், யானைக்கூட்டத்தைக் காட்டி, ‘அது எங்க பாட்டி தான்’ என்று சொன்னதை, தான் ஓவியமாக வரைந்ததை பற்றி பேசினார்.  ஒரு பழங்குடியினத்தின் மொழி அழிகிறது என்றால், அதன் ‘லேண்ட்ஸ்கேப்’ அழிகிறது என்றார்.  இந்த விஷயம் எனது மதிய பேச்சுக்கு நெருக்கமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, பேராசிரியர் கல்யாணி, இருளர் பழங்குடியினரோடு தான் மேற்கொண்டிருக்கும் மனிதவுர...

சங்கப் பேச்சு - நற்றிணையின் எருமை உழவன்

சங்கப்பனுவல்களில் கேட்கும் குரல்கள் யாருடையவை ? அவை ஏன் குரல்களாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன ? அக்குரல்கள் யாரிடம் பேசுகின்றனவோ அல்லது எதைப்பற்றி பேசுகின்றனவோ அவர்களை / அவைகளைப் பற்றிய விவரணைகளெல்லாம் துல்லியமாக வெளிப்படும் போது , குரல்களைப் பற்றிய விவரங்கள் மட்டும் பூடகமாக இருப்பது ஏன் ? இக்குரல்கள் இன்னொரு குறிப்பிட்ட மனிதரிடமே (தோழி , அம்ம , ஊரன்) பேசுகின்றனவே ஏன் ? அதாவது , இன்றைய கவிதைகளில் காணப்படுவது போல் கற்பனையான வாசகரிடம் பேசாமல் நிஜமான மனிதரிடம் பேசுகிறதே ஏன் ? சங்கப்பனுவல்களில் வெளிப்படுவது உரையாடலா?   அதில் பதிவு செய்யப்பட்டுள்ள குரலிற்கு முந்தைய பிந்தைய பேச்சுகளை நம்மால் கற்பனை செய்ய முடியுமா ? சங்கப்பனுவல்களில் உருவாகும் சூழல் , பொதுவான பண்பாட்டுச் சூழல் ( cultural context) என்றும் உரையாசிரியர்களே கூடுதல் விவரங்களை சேர்த்து அவற்றிற்கான தனித்த சூழ்நிலைகளை (துறை போன்ற) ( context of situation) உருவாக்குகிறார்கள் என்று சொல்ல முடியுமா ? அதாவது , உரையாசிரியர்களின் பங்களிப்பு ,   பண்பாட்டுக் கதாபாத்திரங்களை கவித்துவ கதாபாத்திரங்களாக உருமா...