Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரை

கரகாட்டம், ஜல்லிக்கட்டு, மகாபாரதம்

அன்புள்ள தர்மா , நீங்கள் எழுதிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.  அந்தச் சின்னப் பெண் கெளசல்யா பற்றி எழுதியிருந்த கட்டுரை அற்புதமாக இருந்தது.  நல்ல கட்டுரைகளை வாசித்து முடித்ததும் ஒரு கர்வம் வருமே அது எனக்கு இந்தக் கட்டுரையை வாசித்ததும் ஏற்பட்டது.  இந்த வகையாய் எழுதுகிறவர்கள் தமிழில் அருகிப் போய்விட்டார்கள்.  அதனால் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கட்டுரையில், கலை வடிவங்கள் எப்படி தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகி வந்திருக்கின்றன என்பதை இயல்பானக் காரியம் போல விவரித்த தொனி என்னை ஆச்சரியப்படுத்தியது.  உடனே, இதை, எளிதில் உணர்ச்சிவசப்படும் தமிழ் மனம் எப்படி எதிர்கொள்ளும் என்று அறிவதற்கும் ஆசையாக இருந்தது.  குறிப்பாக, தமிழ் மொழி பற்றியும், அதன் தூய்மை பற்றியும், ஒரிஜினாலிட்டி பற்றியும் அலட்டிக்கொள்ளும் தமிழ் மனம் இது கண்டு பதறாதா என்று நினைத்தேன். இதே காலகட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றியும், பொங்கல் கொண்டாடுவது பற்றியும், தமிழ் புத்தாண்டு எது என்பது பற்றியும் உருவான கொந்தளிப்புகள் கண்டு நான் மன...

இந்திய சமையலறையில் ஏன் மாட்டுக்கறி இல்லை?

முன் கதைச் சுருக்கம்: பெருஞ்சமூகத்தில் மத அடிப்படைவாதம் வாழ்க்கையாக இருக்கிறது என்றால், அதற்கு எதிரான வாழ்கையை வாழ வாய்ப்புகளை வழங்குவதே கல்வி நிலையங்களின் பணியாக இருக்கிறது.   அதே போல், சாதிப் பாகுபாடுகளற்ற கற்பனையான சூழலை உருவாக்கி காட்டுவதும் அதன் பணியே.,   மனிதர்களை அவர்களது சிந்தனையாலும் செயலாலும் மட்டுமே அடையாளப்படுத்துகிற வாழ்க்கையொன்றை நிர்மாணிப்பது,    பொருளாதாரக் காரணிகள் வலுவிழந்த சமூக உறவுகளை கட்டமைப்பது போன்றவையும் கல்வி நிலையங்களின் வேலை தான்.   நேரடியாய் உணவு உற்பத்தியால் பாதிக்கப்படாத வாழ்க்கைச் சூழலை கல்வி நிலையங்களே ஏற்படுத்தித் தரமுடியும்.   இந்தச் சூழல்கள் அனைத்தும் கற்பனையானவை தான்!   நிஜமல்ல தான்!   ஏட்டுச் சுரைக்காய் தான்!   விளைச்சல் வீடு வந்து சேராத வெள்ளாமை தான்!   ஆனால், ஒரு நல்ல பள்ளிக்கூடம் இதைச் செய்வது தான் நியாயம்.   JNU அதைச் செய்திருந்தது. இனி....   ஒரு முன்மாதிரியான கல்வி நிலையத்தை, பௌத்த பள்ளிகள் மற்றும் சங்கங்களோடு ஒப்பிட முடியும். அவை எப்பொழுதுமே சமூக விதிகளுக்கு புறம்ப...