முன் கதை சுருக்கம்: நாங்குநேரிக்கு அருகில் இருக்கிறது திருக்குறுங்குடி. அந்த ஊரி ல் வடிவழகிய நம்பி கோயில் பிரசித்தம். அக்கோயில் கோபுரத்தை சித்திரக் கோபுரம் என்று அழைக்கிறார்கள். இசைக்கலை தொடர்பான அழகிய சிற்பங்கள் அந்தக் கோபுரத்தில் உண்டு. எனக்கு அக்கோவிலை ஓவியர் சந்ரு தான் அறிமுகப்படுத்தினார். சித்தன்னவாசலில் ஓவியமாக வரையப்பட்டிருக்கும் ‘தாமரைக்குளம் ’ இக்கோவிலில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லி அதைப் பார்ப்பதற்காகத் தான் போயிருந்தோம். வடிவழகிய நம்பி கோயிலில் பெருமாள் படுத்து, நின்று என்று பல்வேறு நிலைகளில் காட்சி தந்தாலும், அவ்வளாகத்தின் முன்புறம் வேண்டா விருந்தாளி போல் நிற்கும் இன்னொரு கட்டிட அமைப்பில், 9ம் நூற்றாண்டு சிற்பமாக, சிவன், ‘கஜசம்ஹாரமூர்த்தி ’ வடிவில் நின்று கொண்டிருக்கிறார். அழகிய நம்பிக்கும் கஜசமஹாரமூர்த்திக்கும் இக்கோயில் தொடர்பான தாவா ஒன்...