Skip to main content

Posts

Featured post

கர்ணன் - மாரி செல்வராஜின் சமகாலக்கலை!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘கர்ணன் ’ திரைப்படத்தின் பாடலொன்று நேற்று வெளியாகியுள்ளது.  கண்டா வரச்சொல்லுங்க… அதற்குப் பயன்படுத்தப்பட்ட காட்சி வடிவங்கள் அற்புதமானவை.  பாடல் நெடுக, ஒரு மனிதன் எரிந்து கொண்டிருக்கும் தீப்பந்தம் கொண்டு சுவரில் ஓவியம் வரைகிறான்.  நெருப்பால் ஓவியத்தைச் சுட்டால் என்ன ஆகும்?  காகிதமும் சீலையுமே ஓவிய ஊடகங்கள் என்ற கடந்த சில நூற்றாண்டு மயக்கத்தைக் கடந்து யோசிக்க முடிந்தால், தீ நாவே ஆரம்ப கால வண்ணம் என்பது நமக்கு புலப்படும்.  பந்தமே, ஆதித் தூரிகை. அந்த வகையில், ’ எரிந்து கொண்டிருக்கும் பந்தத்தின் சிறு நுனியில் எரிந்து முடிந்த சுடு கரி ’ என்ற யோசனை மிகப் பிரம்மாதமான கற்பனை.  ‘சமகாலக் கலை ’ (contemporary art) என்று ஏதாவது பேசப் புகுந்தால் இதுவொரு கச்சிதமான உருவமாக செயல்பட முடியும்.   கலை வடிவங்கள் எப்பொழுதுமே எரிந்து அவிந்த கரித்துண்டுகளால் செய்யப்படுபவை என்றொரு மூடநம்பிக்கை நம்மிடம் உண்டு.  அதன் மறுபக்கம், கனன்று கொண்டிருக்கும் நெருப்பு எதையும் படைத்து விடாது என்பதும் நமது இன்னொரு மூடநம்பிக்கை.   தீயும் கரியும், இரண்டு வெவ்வேறு மனநிலைகளையும், சந்தர்ப
Recent posts

இளையராஜா கன்னத்துத் திருஷ்டிப் பொட்டு, ரஹ்மான்!

(‘இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?’ என்ற புத்தகத்தை ஒட்டி நிகழ்த்தப்பட்ட நீண்ட பேட்டியிலிருந்து. அலுவலகப் பணியாளர்களும், மாணவர்களும் ஆசிரியர்களும் நிமிடத்திற்கொரு முறை தொந்தரவு செய்து கொண்டிருந்த பேராசிரியர் டி. தருமராஜின் அலுவலகத்தில் நிகழ்த்தப்பட்ட நேர்காணலின் சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. என் பெயரும் அவர் பெயர் தான் என்பதால், எனது பெயரை டி. தருமராஜ் 2 என்றும் அவரை டி. தருமராஜ் 1 என்றும் குறிப்பிட்டிருக்கிறேன்.) டி. தருமராஜ் 2: ஏன், இளையராஜா? டி. தருமராஜ் 1: பண்பாட்டு ஆய்வாளர்களுக்கு இளையராஜா ஒரு வரம். இப்படியொரு ஆய்வுப்பொருள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் சென்று கிடைக்குமென்று தெரியவில்லை. இளையராஜா என்ற பெயர் திரையிசையோடு சுருங்கி விடக்கூடியது இல்லை. அது சென்ற நூற்றாண்டின், தென்னிந்திய அரசியல் வரலாறின், இந்திய சினிமா வரலாறின் அடையாளமாகத் திரளக்கூடியது. ரொம்பவும் நறுவிசான வரலாறு, இளையராஜாவைப் போன்ற ஒரு சிலரை மட்டுமே ஞாபகம் வைத்திருக்கப்போகிறது. வருங்காலம் அவரைப் பாடல்களால் அல்ல, ஒரு காலகட்டத்தின் உணர்வெழுச்சியாகவே உருவகிக்கப் போகிறது. அந்த வகையில், இந்தப் புத்தகம் இளை

அயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை

உறங்கு நிலையில் ஒரு மாற்று வரலாறு: பூர்வ பெளத்தனின் கல்லறை அசுரா நாதன் (அகழ், செப்டம்பர் 2020, மின்னிதழில் வெளியானக் கட்டுரை) நாட்டுப்புற பண்பாட்டுக் கலாசாரத் துறைசார்ந்த டி . தர்மராஜ் அவர்களின் ‘ பார்ப்பனர் முதல் பறையர் வரை ’ எனும் நூல் வாசிப்பின் ‘ ஞாபகம் ’ இது . இவரின் ‘ நான் ஏன் தலித்தும் அல்ல ’ என்ற நூலையும் வாசித்த அனுபவத் தூண்டுதலும் ‘ பார்ப்பனர் முதல் பறையர் வரை ’ எனும்   பிரதியை கவனம் கெள்ள வைத்தது . இந்த நூலுக்காக எழுதப்பட்ட முன்னுரையைக் கடந்து , பிரதியின் முழுமையை தரிசிப்பதற்கு ஒரு வாசகன் தன்னை முதலில் தகவமைத்துக் கொள்ளவேண்டும் . நான் யார் ! யாராக இருந்தேன் ! நான் யாராக இருக்கவேண்டும் !  என இந்த   நூலின் முன்னுரைக்கு நாம் வழங்கும் தார்மிக பதிலுரைப்பு அவசியமானது . நீ தலித்தாக இருக்கின்றாயா ? தலித்தாக சிந்திக்கின்றாயா ? தலித்துக்களுக்காக போராடுபவனா ? எழுதுபவனா ? ஆய்வாளனா ? அறிஞனா ? எந்த தோற்றத்தில் , எந்த வடிவத்தில் நீ பதுங்கியிருக்கிறாய் ! என தீண்டத்தகாதவன் எனும் சமூக வலியை வாழ்நாள் எல்லாம் சுமந்து கொண்டிருப்பவ