Skip to main content

Posts

Showing posts with the label இளையராஜா

இளையராஜாவை வரைதல் - கிண்டில் பதிப்பு

'இளையராஜாவை வரைதல்' அமேசான் கிண்டிலில் மின்நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது. இணையத்தில் எழுதிய ஆறு பகுதிகளோடு, இன்னும் ஆறு பகுதிகள் சேர்க்கப்பட்டு ஒரு குறுநூலாக வெளிவந்துள்ளது. முன்னறிவிப்பு: இந்தக் குறுநூல் தானாகவே தோன்றியது.  சுயம்பு.  முதலில் ஒரு கட்டுரை போல எழுத ஆரம்பித்தேன். அதிலும் அந்தக் கட்டுரை ஒரு விளக்கக் கட்டுரையாகவே தொடங்கப்பட்டது. அயோத்திதாசர் குறித்து நான் எழுதி விரைவில் வெளிவரவிருக்கும் புத்தகத்தில் சமர்ப்பணம் என்ற பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறேன்: ‘நந்தனைக் கடந்த அயோத்திதாசரைக் கடந்த பெரியாரையும் கடந்த இசைஞானி இளையாராஜாவிற்கு சமர்ப்பணம்’ இந்த வரியை விளக்குவதற்காகவே இதனை முதலில் கட்டுரையாக எழுத ஆரம்பித்தேன்.  இந்தக் கட்டுரையே வளர்ந்து வளர்ந்து இன்று இப்படி நிற்கிறது. இதன் ஒரு பகுதி சமூக ஊடகங்களில் வெளி வந்தது. மீதத்தையும் சேர்த்து குறுநூலாக வெளியிடுகிறேன்.  வழக்கமான இளையராஜா ஆய்வுகளைப் போல இதில் பாடல்களைக் குறிப்பிட்டு நான் எதையும் விளக்கவில்லை.  இது வேறொரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

அயோத்திதாசரும் இளையராஜாவும்

கோட்டிங்கன் வந்ததிலிருந்தே கஜீ (கஜேந்திரன் அய்யாதுரை),  ‘Trou வுக்கு போக வேண்டும் தர்மு.  உனக்கு அது பிடிக்கும்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.   Trou ஒரு மதுக்கூடம்.  ஜெர்மன் மொழியில் ‘துளை’ என்று அர்த்தம்.  நேற்று அங்கே போயே விட்டோம். அது ஒரு நிலவறை.  தரையிலிருந்து கீழிறங்கிய ஒரு துளையின் வழியாக அதற்குள் நுழைய வேண்டியிருந்தது.   கருங்கற்களால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகள் நாலாபக்கமும் விரிந்து செல்கின்றன.    ‘இரண்டாம் உலகப் போரின் போது, நேச நாடுகளின் விமானத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, கோட்டிங்கன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பதுங்கியிருந்த இடம் இது’ என்று உள்ளூர் வரலாறு சொன்னார்கள்.   ஜெர்மனியெங்கும் பியர் வெள்ளமாய் பாய்கிறது.  நேற்றைக்கு கோதுமையிலிருந்து வடிக்கப்பட்ட பியரை (weisenbier) வாங்கி வாங்கி குடித்துக் கொண்டிருந்தோம். பேச்சு அங்கே இங்கே சுத்தி விட்டு, அயோத்திதாசரில் வந்து நிலைகொண்டது.   கஜீ, அயோத்திதாசரின் தமிழ் பெளத்தம் என்ற அவரது நூலை எழுதிக் கொண்டிருக்கிறார்.  நானும் அயோத...