கேள்வி 1: ஒடுக்கப்பட்டோர் பெருஞ்சமூகத்துடன் உரையாடலை வைத்துக் கொள்வது ஏன் அவசியம்? அப்படியொரு உரையாடல் நடைபெறுவதால் என்ன நடந்து விடும்? காலம் காலமாய் என்னை மிதித்துக் கொண்டிருப்பவனுடன் நான் எப்படி உரையாடலுக்குச் செல்வது? அவன் காலை வெட்டுவது சரியா அல்லது அவனோடு உரையாடுவது சரியா? கேள்வி 2: உரையாடல் அல்லது பேச்சுவார்த்தைக்கு முன்வருவது என்பது தோல்வியின் பயத்தில் நடப்பது தானே! ஒடுக்கப்பட்டவர்கள் பெருஞ்சமூகத்துடன் தோற்றுப் போனார்கள் என்று சொல்வதா? அதனால் தான் உரையாடலை பரிந்துரைக்கிறீர்களா? கேள்வி 3: இந்த உரையாடலை வெற்றிகரமாக செய்து முடித்ததைப் பார்த்தால் இயக்குனர் இரஞ்சித்தை இப்பெருஞ்சமூகம் தனக்குத் தோதாக தகவமைத்துக் கொண்டது என்று தானே அர்த்தம்? இரஞ்சித் விலை போனார் என்று தானே சொல்ல வேண்டும்? கேள்வி 4: பெருஞ்சமூகத்தைச் சார்ந்த நான், அதாவது ஒடுக்குதலை அனுபவித்தறியாத நான், இந்த உரையாடலை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்? நீங்கள் சொல்வது போல் மெட்ராஸ் போன்ற முயற்சிகள் ஒரு உரையாடலின் நம்பிக்கையளிக்கும் பகு...