Skip to main content

Posts

Showing posts from April, 2021

9 காணி வீடு

9     காணி வீடு  டி . டி. ரமேஷ் ராஜா வீடு என்பது ஒரு கனவாக , ஒரு சிலருக்கு கோவிலாக . அரணாக மேலும் சிலருக்கு ஒரு லட்சியமாகக் கூட விளங்குகிறது . இவ்வாறான மதிப்பீடுகள் சமவெளியில் நேர்கோட்டில் இயங்கும் நமக்கு பொதுவானது . ஆனால் காணி மக்களுக்கு வீடு என்பது தற்காலிகமான ஒன்று மட்டுமே . நம் வாழ்வு முழுவதுமாக வீடு என்ற குறியீட்டால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சம காலத்தில் , காணி வீடு மாத்திரம் மதிப்பீடுகளை உதறி நிற்பதன் அர்த்தம் என்ன? காணி வீடு என்ன சொல்கிறது .   காணிக்காரர்கள்: தமிழ்நாட்டின் தென்மேற்கே காணப்படும் பொதிகை மலையில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் 'காணிக்காரர்கள்' .   தற்சமயம் இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அகத்தியர் காணி குடியிருப்பு , சின்ன மயிலாறு , பெரிய மயிலாறு , சேர்வலாறு , இஞ்சிக்குழி ஆகிய இடங்களிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை , விளவங்கோடு , கற்குளம் ஆகிய இடங்களிலும் வாழ்கின்றனர் . இதில் 'தற்சமயம்' என்ற சொல் காணி மக்களின் செங்குத்துக் கோட்டியக்கத்தை அர்த்தப்படுத்துகிறது .   இது சமவெளியின் நேர்கோட்டியக்கத்திற்கு எதிரானது . பொதிகை மலையில் பல

8 வீட்டுப்பெயர்கள்

8   வீட்டுப்பெயர்கள் மொ . இரவிக்குமார்  கேரள மாநிலம் பாலக்காடு வட்டாரத்தில் கோழிப்பாறைக்கு மேற்கே இரண்டு கி . மீ. தொலைவில் எருமைக்காரனூர் என்ற கிராமம் அமைந்துள்ளது . கிறித்தவர்கள் அதிகமாக வாழக்கூடிய ஊரிது . எருமைக்காரனூர் என்ற ஊர் எவ்வாறு உருவாகியது . எருமைக்காரன் குடும்பம் என்று குடும்பத்திற்கு எப்படிப் பெயர் ஏற்பட்டது . ஒரு குடும்பப் பெயர் பல குடும்பப் பெயர்களாகி எவ்வாறு மாற்றமடைகிறது . இங்கு வாழக்கூடிய மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் , போன்ற பல வினாக்களுக்கு விடை காணும் நோக்கத்தில் இக்கட்டுரை அமைகிறது .   இவ்வட்டாரத்தில் வாழக்கூடிய தமிழ்க் கிறித்தவர்கள் , குறிப்பாக எருமைக்காரனூரில் வாழக்கூடியவர்கள் 250 / 300 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி , திண்டுக்கல் , தஞ்சாவூர் , மதுரை போன்ற ஊர்களிலிருந்து பஞ்சம் பிழைப்பதற்காக வந்தவர்கள் . ‘பரியம் போடுதல் ’ என்ற நிகழ்ச்சியின் மூலம் இதை அறிய முடிகிறது .   திருமணத்தின் போது பரியம் (பரிசம்) போடுதல் என்ற நிகழ்ச்சி பெண் வீட்டில் வைத்து நிகழ்கிறது . அப்போது அந்நிகழ்ச்சியில் பெண் வீட்டுப் பெரியவர்களும் , மாப்பிள்ளை வீட்டுப் பெரியவர்களும் குற

7 திருமலை குடும்பத்து ஞாபகங்கள்: சில தொடர்ச்சியற்ற குறிப்புகள்

7  திருமலை குடும்பத்து ஞாபகங்கள்:  சில தொடர்ச்சியற்ற குறிப்புகள்   இரா . பாவேந்தன்  திருச்சி மாவட்டம் கீழக்கல்கண்டார்கோட்டை கிராமத்தில் வாழ்ந்து வரும் திருமலை என்பவரின் பௌத்த , பார்ப்பனீய , ஞாபகக் குறிப்புகள் இக்கட்டுரையில் தொகுத்துத்தரப்பட்டுள்ளன .   கீழக்கல்கண்டார்கோட்டை கிராமம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியாகும் . திருச்சி நகரிலிருந்து 12 கி . மீ. தொலைவில் உள்ள இவ்வூரில் பட்டியல் இனமக்களில் ஒரு பிரிவினரான தேவேந்திரர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர் . அவர்களுடன் முத்தரையர் , பார்ப்பனர்கள் ஆகியோரும் வாழ்ந்து வருகின்றனர் .   கீழக்கல்கண்டார்கோட்டைப் பகுதி முன்பு கல்கண்டார் கோட்டை என வழங்கப்பட்டு வந்தது . விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் பொன்மலை இரயில்வே நகரியத்தின் புறநகராக உருவான பகுதி மேலக்கல்கண்டார் கோட்டை என வழங்கப்பட்டதால் பழைய கல்கண்டார்கோட்டை என வழங்கப்படுகிறது . கீழக்கல்கண்டார்கோட்டை என்ற பெயர் வழக்கில் வந்ததற்கான வாய்மொழிக்கதை ஒன்றை இவ் ஊரைச் சார்ந்த கே . எஸ் . சுவாமிநாதன் வழி அறிகிறோம் . 'இந்த ஊரில் வாழ்ந்த பெண் ஒருத்தி

அன்புள்ள தாத்தா பாட்டிக்கு - சிறுகதை

 1985ல் எழுதப்பட்ட சிறுகதை இது.  அப்பொழுது எனக்கு பதினெட்டு வயது.  அந்த வருடம், நண்பர்களுடன் இணைந்து 'நிதர்சனா' என்றொரு கையெழுத்துப் பத்திரிகை கொண்டு வந்தேன்.  அதற்காக எழுதப்பட்ட கதை இது.  இதற்கு வண்ணத்தில் அட்டைப்பட ஓவியம் கூட இருந்தது. பின்னாட்களில் 'கார்ட்டூனிஸ்ட் மதி' என்று அறியப்பட்ட மதி தான் வரைந்து தந்தார்.     அதன் பின் இந்தக் கதையை, எஸ். ஆல்பர்ட் கொடைக்கானலில் நடத்திய 'சிறுகதைப் பட்டறையில்' வாசித்தேன்.    அப்படியே அது சென்னைக்குப் போய், எஸ். வி. ராஜதுரை நடத்திய 'இனி' யில்  பிரசுரமானது.  இன்றைக்கும் இந்தக் கதையை ஞாபகம் வைத்து பேசுகிறவர்கள் இருக்கிறார்கள்.  அப்படிப் பேசும்போதெல்லாம், கதையில் வருகிற தாத்தாவை முத்தமிட்ட பேரனைப் போல நான் சங்கோஜப்படுவது வழக்கம்.   'கர்ணன்' திரைப்படத்தில் பன்றி வளர்க்கும் ஏமராஜா, தன் மதினிக்கு முத்தம் தந்ததைப் பார்த்ததிலிருந்து இந்தக் கதை ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.  இன்றைக்கு எஸ். ஆல்பர்ட் இதை மீண்டும் ஞாபகப்படுத்தினார். அன்புள்ள தாத்தா பாட்டிக்கு சங்கரன்கோவில் பஸ்ஸ்டாண்டில் காத்து நிற்கையில் வெயில் லேசாய் உ