Skip to main content

திருவிழாவின் கடைசி தினங்கள்!





மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை நடத்தும் ‘பெருந்தொற்றுச் சூழலில் நாட்டுப்புற ஆய்வுகள்’ என்ற கருத்தரங்கு எனது தொடக்கவுரையோடு நேற்று 9-11-2020 ஆரம்பித்தது.







‘திருவிழாவின் இறுதி தினங்கள்’ என்ற தலைப்பில் பேசினேன்.  கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் புதிய வழக்கச் சூழல் அடிப்படையான விழுப்பொருட்களை எவ்வாறு உருமாற்றத் தொடங்குகிறது என்பதே எனது உரையின் மையம்.  







தனித்திருத்தல் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் என்ற உயிர் தப்பி வாழ்வதற்கான இரு உத்திகளும், மெய் நிகர் வாழ்க்கை என்ற மாற்றுப் பரிந்துரையுமே இப் ‘புதிய வழக்கத்தை’ கட்டமைக்கின்றன.  பாரம்பரிய சமூக வழக்கத்தின் விழுப்பொருட்களான கூட்டு அடையாள உருவாக்கம், ஜனநாயக உணர்வு, தனித்துவ வெளிப்பாடு, நகைச்சுவை உணர்வு, தலைகீழாக்கும் உத்தி, தொடர்ச்சியான புதுப்பித்தல் போன்ற அனைத்தையும் இழந்து விடுவோமோ என்ற அச்சம் எல்லோரையும் வதைக்கிறது.  விழுப்பொருட்களை இழப்பதை விடவும், இழந்து விடுவோமோ என்ற பயம் கொடூரமானது.  






வழக்கமாய், சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் ஆராய்ந்து, அவற்றின் பின்னுள்ள யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள முயலும் பண்பாட்டு ஆய்வுகள் முதன்முறையாக, ‘யதார்த்தத்தை’ எதிர் கொள்ள ஆரம்பிக்கும் போது அடையக்கூடிய தடுமாற்றம் இது.  தடுமாற்றம் கூட அல்ல, தள்ளாட்டம்.  கப்பலிலோ அல்லது புகைவண்டியிலோ பயணம் செய்கையில் அதன் ஆட்டத்திற்கு ஏற்ப நாமும் போடத் தொடங்கும் தள்ளாட்டம்.  மிக முக்கியமான சந்தியில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.  பழசும், வரப்போகும் புதுசும் சந்தித்துக் கொள்கிற இடைவெளி இது.  


Comments

Popular posts from this blog

அம்பேத்கரின் 'தீண்டாமையின் தோற்றம்'

('தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?' என்ற கட்டுரையை முழுமையாக விளங்கிக் கொள்ள இந்தக் கட்டுரை உதவி செய்யும்.  2007ல் எழுதப்பட்ட இக்கட்டுரை, 'அம்பேத்கரின் பன்முகம்' என்ற நூலில் இடம்பெற்றிருந்தது.) தீண்டாமையின் வேர்கள் குறித்து அம்பேத்கர் மேற்கொண்ட ஆய்வுகள் மிகச் சுருக்கமானவை என்றாலும் , தீவிரமான விவாதப் புள்ளிகளை உள்ளடக்கியவை. ' சாதி ' குறித்துப் பரந்த அளவிலும் , தீண்டாமை ', ' வர்ணம் ', ' விலக்கல் ', ' தீட்டு ' என்று குறிப்பாகவும் பல்வேறு வகையான ஆய்வாளர்களால் , வெவ்வேறு தருணங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட சாதிய ஒழுங்கமைப்பு என்ற சொல்லாடலை இரண்டு வகை என்று சொல்ல முடியும். ' சாதி ' என்ற காரணியை அதன் வரலாற்றுத் தன்மையோடும் , நடைமுறை வெளிப்பாடுகளோடும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆய்வாளர்களால் கட்டமைக்கப்பட்ட சொல்லாடலை முதல் வகை என்று கொள்ளலாம். இவ்வகை ஆய்வாளர்களிலிருந்து திட்டவட்டமாக வேறுபடுகிற இரண்டாம் வகையினர் , சாதியத்தின் வேர்களையும் , நடைமுறைச் சிக்கல்களையும் அலசுவதோடு நிற்காமல் , ' சாதி ' யை அழித்தொழிக்கு...

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

வேற்றுமெய்யும் வேற்றுமையும்