(இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு படம் பார்த்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. பார்த்தவர், பார்க்காதவர் என்ற பேதமின்றி இருபாலருக்கும் இக்கட்டுரை விளங்காது!) 1 ஒரு மனிதனின் உடல் உருமாறுகிறது. அதற்கானக் காரணங்களைத் தேடுவதே கதை. இந்தக் தேடலில் கனவுகளுக்குக் குறி சொல்லும் பாட்டி வருகிறார்; உளவியல் பேசும் கணிதப் பேராசிரியர் வருகிறார்; வாழ்க வளமுடன் உபாசகர் ஒருவரும் வருகிறார். இதனிடையே, இறந்து போன பக்கத்து வீட்டுக்காரரைப் பார்க்கிறான்; பணிபுரியும் வங்கியில் தகராறு செய்கிறான். அவனுக்கு முளைத்த குதிரைவால் ஒரு குறியீடு என்று படத்திலேயே சொல்லப்படுகிறது. பால்யக் காதலைக் குறிப்பதாகவும் கூட. ஒரு கட்டத்தில் அக்காதல் அவனைத்தேடி அறைக்கே வந்து விடுகிறது. அதன் பின், மலைக்கிராம பால்யத்தை விவரிக்கிறார்கள். இறந்து போன சிறுதோழி நினைவுக்கு வருகிறாள். அவளுடைய மரணம் தொடர்பாக அவனுக்கிருந்த குற்றவுணர்வு நினைவுக்கு வருகிறது. உடலுரு மாற்றத்தில் ஆரம்பித்த கதைக்கு ‘கடைசியில்..’ என்று சொல்வதற்கு எதுவும் இருக்கவில்லை. சொல்ல விரும்பினால், ‘கடைசியில் படம் முடிந்து விடுகிறது’ என்று தான் சொல்ல வேண்டும். ‘மனம் சிதை