Skip to main content

எனது இணைய உரைகள்

அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிராபாகர், ‘கலைடாஸ்கோப்மூலம் கொரோனா ஊரடங்கு காலத்தில் வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.  கலைடாஸ்கோப், மாற்று கல்வி மற்றும் கலைகளுக்கான பரிட்சார்த்த கூடம்.  ஒரு வகையில் இன்று புற்றீசல் போல் பெருகியிருக்கும் காணொளி உரையரங்கங்களின் முன்னோடி வடிவத்தை கலைடாஸ்கோப்பே உருவாக்கியது.  இன்றைக்கு, இணைய வழிக் கற்றலின் சவால்களை எதிர்மறைத் தன்மையோடு முன்வைக்கிறார் (ஆசிரியன் இறந்து போனான்) என்றாலும், அதன் தேவைகளை அர்த்தபூர்வமாய் முன்னெடுத்ததும் அவர் தாம்.


முதல் சுற்றில், நான் ஆறேழு உரைகளை நிகழ்த்தினேன்.  எல்லாமே இளம் ஆய்வாளர்களுக்கான அறிமுக உரைகள்.  மிகக் கடினமானவை என்று சொல்லப்படும் பல நவீனக் கோட்பாட்டாளர்களின் புத்தகங்களை அறிமுகம் செய்வதாக இந்த உரைகள் அமைந்திருந்தன.  


மிக நீண்ட உரைகள்.  குறைந்த பட்சம் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரங்கள் வரக்கூடிய உரைகள்.   உள்ளடக்கமோ சொல்லவே வேண்டாம்.  அத்தனை கனம்.  


மிஷல் ஃபூக்கோவின் Discipline and Punish புத்தகத்தோடு தான் அந்த சுற்று ஆரம்பிக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.   அதன் பின் பேசப்பட்ட நான்கு தலைப்புகளும் தமிழுக்கு புதியவை.  ஏறக்குறைய, முதன் முறையாக அவை தமிழில் அறிமுகம் செய்யப்பட்டன என்று கூட சொல்லலாம்.  


அலெய்ன் பாத்யோவின் In Praise of Love

எர்னஸ்டோ லாக்லவ்வின் Emancipation(s)

ஸ்லவோஜ் ஸீசெக்கின் The Sublime object of ideology

டெல்யூஸின் Difference and Repetition









இந்த வரிசையை நான் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் இருந்தது. இவை அனைத்தும் ஒரு வகையில் எனதுஅயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரைநூலை வாசிப்பதற்கு துணை செய்யக்கூடியவை.  அதனால், இவை குறித்து கட்டுரைகளை எழுதுவதை விடவும் இப்படி காணொளி உரைகளை வழங்குவது சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன்.  அது அப்படியே பலனளிக்கவும் செய்தது.  இந்த உரைகளின் மூலமாகஅயோத்திதாசர்நூலுக்கு ஏராளமான இளம் வாசகர்கள் கிடைத்தார்கள்.  ஏற்கனவே அந்தப் புத்தகத்தை வாசித்திருந்தவர்கள் கூட இந்த உரைகளைக் கேட்ட பின்பு, புத்தகத்தை திரும்ப வாசிக்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.  இது தமிழில் நடைபெற்ற மிக ஆரோக்கியமான விஷயம்.


இவ்வுரைகளின் சுருக்கமான எழுத்து வடிவத்தை மிகச் சிரத்தையுடன் கார்த்திக் உருவாக்கி வந்தபடி இருந்தார்.  அவை உடனுக்குடன் பகிரவும் பட்டன.   இந்த ஊரடங்கு காலகட்டத்தில் உருப்படியாக நடைபெற்ற ஒன்றிரண்டு விஷயங்களில் இதுவும் ஒன்று.  


அவ்வுரைகளின் காணொளித்தொகுப்புகள் கீழே பகிரப்பட்டுள்ளன.  இவ்வுரைகளைத் தொடர்ச்சியாகக் கேட்பவர்களுக்கு கொரோனா தொற்றாது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும...