Skip to main content

அயோத்திதாசரியம் - டி. தருமராஜின் இலக்கணமும் இலட்சணமும்

#அயோத்திதாசரியம்


இரண்டு நாள் கருத்தரங்கு.  கொரோனா தொற்று மட்டும் இல்லை என்றால், மாபெரும் விழாவாக நடைபெற்றிருக்க வேண்டியது.  தற்போது இணைய நிகழ்வாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது.  ‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை’ நூல் ஏராளமானோரை அயோத்திதாசர் ஆய்வுகளில் உற்சாகப்படுத்தியிருக்கிறது.  புதிய பார்வைகள், புதிய சிந்தனைகள், புதிய அணுகுமுறைகள், புதிய வெளிச்சம்…  








அயோத்திதாசரை சாக்காக வைத்துக் கொண்டு புதிய நவீனத்துவத்தைக் கண்டடைய முடியும் என்ற என் நம்பிக்கையை இன்று நான் கண்கூடாகப் பார்க்கிறேன்.  அதை நோக்கிய சிறு நகர்வு இந்தக் கருத்தரங்கம்.  


உண்மையில், இதுவொரு தொகுப்பு நூலுக்கான முயற்சியாகவே ஆரம்பிக்கப்பட்டது.  எனது நூலுக்கான வழிநூல் போல அல்லது திறவுநூல் போல ஒன்றை உருவாக்குவது என்பதே முதல் விதை.  இந்த முயற்சியை ஒற்றை ஆளாக நின்று நடத்திக் கொண்டிருப்பவர் பேராசிரியர் அரிபாபு.  அந்தப் பணி முழுமையடைந்தது என்பதன் அறிகுறியே இந்தக் கருத்தரங்கம்.  கருத்தரங்கை ஒருங்கிணைப்பவர், பேராசிரியர் கோபிநாத்.


வருகிற சனி, ஞாயிறு (7,8-11-2020), இரண்டு நாட்களும் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கருத்தரங்கம் நிகழ்கிறது.  ஒவ்வொரு நாளும் எட்டு கருத்துரையாளர்கள்.  அத்தனை பேரும் நான் நம்பிக்கை வைத்திருக்கும் தமிழ்ச் சிந்தனையாளர்கள்.  நிறைய இளைஞர்கள்.  புதியவர்கள்.  ஆழ்ந்த வாசிப்பையும், எழுத்தையும் உடையவர்கள்.  


இந்த நிகழ்வுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.  கலந்து கொள்வதற்கான  விபரங்கள் அழைப்பிதழில் கொடுக்கப்பட்டுள்ளன.        

Comments