அன்புள்ள தர்மராஜ்
அந்த 'நாலைந்துபேரில்' நானும் ஒருவன்
என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம்.
இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
அப்புறம் என் எழுத்து பற்றி.
என்னுடையது கோணங்கியின் 'ஆட்டமாட்டிக்' எழுத்து இல்லை.
அது மொழிவழியாக
வெளிப்படும் உள்ளம், உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு
இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில்
மட்டுமே அது சாத்தியம்
என்றும் அதை ஒரு 'கிராஃப்ட்' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன்.
மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை, மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும், தத்துவமும்,
உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும்
சாகசக்கதைகளும் கொண்டது அது.
இப்போது பிரயாகை மிக நேரடியான நடை
கொன்டது இந்தியச்
சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை
அதில் உள்ளது எப்படியானாலும் ஓர் எச்சரிக்கையாகவே உங்கள் பதிவை எடுத்துக் கொள்கிறேன். on அப் 'நார்மல்' - இலக்கிய
மெடிக்கல் ரிப்போர்ட்.
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் பின்னூட்டம் வழியாக வந்ததில் ஒரு சின்ன
அசௌகரியம் இருந்தது என்றாலும், அதன் பின் உங்களை வரவேற்கிற புன்னகை என்
முகத்திற்கு வந்து விட்டது.
அந்த ‘ஐந்தாறு பேரில்’ நீங்களும் உண்டு என்பதை நான் நன்றாகவே அறிவேன். ஆரம்பத்தில் அப்போதக்கப்போது இது குறித்து சின்னச்
சின்ன சந்தேகங்கள் வந்து போயின என்றாலும், நீங்கள் அயோத்திதாசர் குறித்து
எழுதியதைப் படித்ததும் அந்த ‘ஐந்தாறு பேரில்’ நீங்கள் நிச்சயமாய் இருக்கிறீர்கள் என்று என்னையே நான்
தைரியப்படுத்திக் கொண்டேன்.
கோணங்கி மற்றும் உங்களது எழுத்துமுறை
குறித்து நான் எழுதியது ஒரு உரையாடலை ஏற்படுத்துவதற்கு என்பது நிச்சயமாக இல்லை.
(எதற்கு வீணே சொல்வானேன்?) அது ஒரு பதிவு என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை.
அதில் நான் பதிவு செய்ய விரும்பியது,
புனைவெழுத்து குறித்து தமிழில் நிலவும் சாகச மனநிலையை அடையாளப்படுத்துவது
மட்டுமே. இந்தச் சின்ன செய்தி எனக்கே கூட
பின்னாளில் ஒரு கட்டுரை எழுத உதவி செய்யுமாயிருக்கும்!
இந்த சாகச மனநிலையின் சம கால முன்னோடி
கோணங்கி தான். அதன் பின் ஒவ்வொருவரும் தத்தம்
மன தைரியத்திற்கேற்ப அசாதாரணமான தருணங்களை செய்யத் தொடங்குகிறார்கள்.
எழுதுதல் குறித்த கற்பனைகள், எழுத்து
முறையோடு நேரடியாய் சம்பந்தப்பட்டிருப்பதை நீங்களே அறிவீர்கள். சமீபத்தில் இறந்து போன ராஜம் கிருஷ்ணன் தனது
படைப்புச் செயல்பாட்டிற்காக நேரடி கள ஆய்வுகளை மேற்கொண்டது ஒரு வகையான அறிவியலைச்
சார்ந்த்து என்றால், கோணங்கி, நீங்கள், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர் கட்டமைக்கும் ‘பயணம்’ என்ற சித்திரம் அறிவியலுடன் அமானுஷ்யத்தைக் கலந்த நவீன
வகை.
கோணங்கியின் எழுத்தை விடவும் அவர் அன்றாடம்
நிகழ்த்திக் காட்டுகிற, வாய்மொழியாய் பரவ விடுகிற சித்திரத்தின் பொருண்மை கூடுதல்
கன பரிமாணங்களை உடையதாக இருக்கிறது. நவீனமாதல்
என்ற செயல்திட்ட்த்தில் புனைவெழுத்தின் பணி எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்களே
அறிவீர்கள். ஆனாலும் எழுத்துச் செயலை
ஞானகுரு, சித்தன், ரோகி, கிறுக்கன் (உங்கள் பாஷையில் சொல்வதானால் – ‘கொஞ்சம் மண்டைக்கு
வழியில்ல பாத்துக்கிடுங்க!’) என்பதாகவே தான் இன்னமும் நாம்
கட்டமைத்து வைத்திருக்கிறோம். இது
இப்படியே தொடரும் பட்சத்தில் சமூகத்தின் நவீனமயமாதலில் ‘நவீன’ இலக்கியத்தின் பங்கு இல்லாமல் போகும் அல்லது
சமூகத்தின் நவீனமயமாதலில் கணிசமான பின்னடைவு ஏற்படும்
.
உங்கள்
எழுத்துமுறை, பெரும்பாலும் பேச்சுகளின் வழி செய்யப்பட்டது ஜெயமோகன். பூமணியிடமும் இதே போன்றவொன்றை நம்மால்
பார்க்கமுடியும். இந்த எழுத்துமுறையின்
மூலம் நீங்கள் அற்புதமான தருணங்களை அடையாளம் காட்டுகிறீர்கள் – இதைப் பல முறை மொழி
ஆளுமை மூலமாகவும், சில சமயங்களில் காட்சிப்படுத்தல் மூலமாகவும்
செய்கிறீர்கள். ஆனால், அந்தத்
தருணங்களையெல்லாம் அம்போவென அப்படி அப்படியே விட்டு விட்டு அடுத்த தருணத்தைத்
தேடிச் சென்று விடுகிறீர்கள்.
தமிழில் கொஞ்சமாய்
எழுதுவது பற்றி ஒரு சிலாகிப்பான புனைவு உண்டு – நல்ல எழுத்து கொஞ்சமாய்
இருக்கும்! ஆனால், அப்படியில்லை என்பதை
நீங்கள் அடிக்கடி சொல்லி, அதிகமாய் எழுத ஆரம்பித்தீர்கள். இது வரைக்கும் சரியாகத்தான் இருக்கிறது.
ஆனால், இதற்காக
நீங்கள் நிஜமாக எழுதிக் குவிக்க ஆரம்பிக்கிற பொழுது வந்தது சிக்கல். எப்படி நல்ல எழுத்து கொஞ்சமாக இருக்கும் என்பது
அபத்தமோ அதே போல நல்ல எழுத்து அம்பாரமாய் இருக்கும் என்பதும் அபத்தம் தான்!
அதிகமாய் எழுதும்
புனைவில் நீங்களாகப் போய் சிக்கிக் கொண்ட பின்பு, நீங்கள் எழுதியதை நீங்களே
திரும்பி வாசிக்கிற, பல முறை திருத்துகிற வாய்ப்பை உங்களுக்கு நீங்களே மறுத்துக்
கொள்கிறீர்கள் என்பதே உண்மை. இந்த சுழலில் நீங்கள் மாட்டிய பொழுது கூட நான்
அசௌகரியமாய் உணரவில்லை, ஏனெனில் இது மிக எளிதாய் தப்பித்து விடுகிற இரட்டை
எதிர்மறை தான்.
(மேலும் புனைவுகள்
இல்லாமல் என்ன தான் எழுத்து? இதோ, கொஞ்சம்
படிக்கக் கடினமானக் கட்டுரைகளை பிய்த்துப் பிய்த்து வலைப்பூவில் பதிந்து,
இடையிடையே வாசகனை கூவி அழைக்க, லஷ்மி, கோணங்கி, மெட்ராஸ், நீங்கள், ஒத்திசைவு,
பத்ரி என்றெல்லாம் நான் செய்து கொண்டிருப்பது போன்றது தானே அதுவும்?) இதை
அடைப்புக்குறிக்குள் போடுவதற்கு ஏன் தனி paragraph?
ஆனால், நீங்கள்
இப்பொழுது போட்டுக் கொண்டிருக்கும் வேலி சமயத்தால் (இந்த இடத்தில் ‘சமயம்’ என்ற வார்த்தையை ‘காலம்’ என்ற பொருளில் வாசியுங்கள் என்று நான்
பரிந்துரைப்பேன்) செய்யப்பட்டிருக்கிறது.
காந்தாரியைப் போல கண்களைக் கட்டிக் கொண்டீர்களோ என்று எனக்குப் படுகிறது.
தொன்மங்கள் தனி
நபர்களால் செய்யப்பட்டதல்ல என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். வியாசர், வில்லிபுத்துரார், பாரதி, ராஜாஜி
என்று பலரும் அதனை எழுத்தினுள் கொண்டு வந்தவர்கள் மட்டுமே. பாரதம் போன்ற புராணக்கதைகளில் தென்படும் முரண்
தொகுப்புகளும், கால – இட மயக்கங்களும், பாத்திர வகைமாதிரிகளும் நாள்பட்ட
பாத்திரங்களின் பளபளப்பும் தேய்மானமும் தான்.
தொன்மங்கள் தத்தம் உருவாக்கக் காரணங்களில் கறாராக இருப்பவை – அதன் வடிவமைப்பு
அத்தகையது. அதன் ஒழுங்கமைப்பு இசையின்
வசீகரத்தை உடையது (உபயம் கிளாட் லெவி ஸ்ட்ராஸ்).
ஆனால், அது தனக்கான மகரந்தத்தைத்தான் உங்கள் உடலெங்கும் பூசி போய் பலுகிப்
பெருகச் சொல்கிறது.
நவீன கதை சொல்லல்,
நாவலைக் கண்டடைந்த காரணமும் இதனோடு ஒட்டியது தானே! தொன்மத்தின் ஒழுங்கமைப்பைக் குலைப்பதைத் தவிர
வேறு பணி நவீனத்துவத்திற்கு இல்லையென்றானதும் இதனால் தான். அதன் முழுமையைச் சிதைப்பது, அதாவது அதன் சூட்சுமமான
இடைவெளிகளை அகலப்படுத்துவது மட்டுமே நவீன மனிதனின் இருப்பை உறுதி செய்வதாக
இருக்கிறது.
நீங்கள் செய்யத்
துணிந்த காரியம் அதன் கோடான கோடி கதாபாத்திரங்களில் ஒன்றாக நீங்களும் உருமாறி அதன்
கதையாடலுக்குள் கலந்து விடுவது தவிர்த்து வேறென்ன ஜெயமோகன்?
அப்பெருங்கதையாடலை
நவீன மொழி வடிவத்திற்குக் கொண்டுவருவதன் மூலம் அதன் கருத்தியலை நவீன மொழியறிந்த
நபருக்குள்ளும் பாய்ச்சுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டெல்லாம் எனக்கு முக்கியமில்லை.
தெருக்கூத்து மூலமும், தோற்பாவை மூலமும், இன்னபிற நாட்டுப்புற வடிவங்கள் மூலமும்
தொன்மங்களை கடைக்கோடி நபர் வரைக்கும் கொண்டு சென்ற வரலாற்றை அறிந்திருக்கிறேன்
என்பதால் எனக்கு இதன் அபாய அளவு அதிகமாகத் தோன்றவில்லை.
எனக்கு ஆச்சரியம்,
இந்த சுழலிருந்து நீங்கள் எப்படி வெளியே வருவீர்கள் என்பது தான். காவியக் குணத்தோடு, கோணங்கியைப் போலவே மடக்கு
மடக்கு என்று குடித்து விட்டீர்கள்.
நான் உன்னிப்பாய்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
Comments
நல்ல எழுத்து கொஞ்சமாகவும் இருக்காது. அம்பாரமாகவும் இருக்காது- அதுபாட்டுக்கு இருக்கும் ))
நிறைய எழுதவேண்டுமென தோன்றுவது இரண்டு காரணங்களால். எழுத எண்ணும் விரிவு பிரம்மாண்டமான இந்திய பண்பாட்டு வரலாறு. இன்னொன்று தினமும் அந்தக்கனவில் இருக்கவேண்டியிருக்கிறது. அது வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது. கனவிலிருந்து இறங்க முடியவில்லை, அவ்வளவுதான்
இன்னொன்று. பயணம். பயணமும் ஒரே காரணத்துக்ககாத்தான் ஒரே நிலத்தில் ஒரே வாழ்க்கையை வாழ்வதன் சலிப்பு. நிலக்காட்சிகள் தேவைப்படுகின்றன
மகாபாரதம் பெர்ய சுழல்தான். நான் என்னை இத்தனை கதாபாத்திரங்களில் மறைத்து மறைத்து விளையாடுகிறேன். கூடவே என் அம்மா அப்பா இருப்பதையும் நானறிந்த அத்தனை முகங்களையும் காண்கிறேன். இப்போதுதான் இத்தனை திரைகளுடன் மட்டும்தான் அம்மாவைப்பற்றி எழுத முடிகிறது- இந்த மர்மத்தை விளக்கவே முடியாது
இந்த எல்லா அத்தியாயங்களும் ஒன்றுக்கும் மேற்பட்டமுறை படித்து சீர்ப்படுத்தப்பட்டே வருகின்றன. ஆனால் என் எல்லா எழுத்துக்களும் ஒரே வீச்சில் எழுதபப்ட்டவை. கொஞ்சம் யோசித்தாலும் எழுத்து காலியாகிவிடும்
எழுதும்போது முழுமையாக அந்தந்த தரப்பு நியாயங்களை நம்பி அதில் இருப்பது என் பலம்- பலவீனம்
மீண்டு வருவது கொஞ்சம் அச்சம்தரும் விஷயம்தாந் பார்ப்போம்
ஜெ
நீங்களே // இதோ, கொஞ்சம் படிக்கக் கடினமானக் கட்டுரைகளை பிய்த்துப் பிய்த்து வலைப்பூவில் பதிந்து, இடையிடையே வாசகனை கூவி அழைக்க, லஷ்மி, கோணங்கி, மெட்ராஸ், நீங்கள், ஒத்திசைவு, பத்ரி என்றெல்லாம் நான் செய்து கொண்டிருப்பது போன்றது தானே அதுவும்?// என்று சொல்லிய பின்பு, இதை வாசிப்பதில், வினையாற்றுவதில் என்ன நியாயம் இருக்கமுடியும்?
ஜெயமோகன், தனக்கு சாதகமான, தன் பிம்பத்தை வலுப்படுத்துகிற சில சங்கதிகளை மட்டும் சொல்லிக் கொண்டு தப்பித்துக் கொள்கிறார்.
இதில், வாசகர்களான நாங்கள் என்ன சொல்வது?
ஒரு தொன்மத்தை நவீன மனம் எப்படி அணுகும், ஜெயமோகன் செய்கிற காரியத்தில் எப்படி நவீனம் இல்லை என்று நீங்கள் எழுதியதை இந்தப் பதிவின் செய்தியாக பெற்றுக்கொண்டு நான் 'போலச்செய்தலும் திரும்பச்செய்தலும்' கட்டுரையைப் படிக்கப் போய்விடுகிறேன்.
1. தினமும் அந்தக் கனவிலேயே இருக்க வேண்டியிருக்கிறது.
2. ஒரே நிலத்தில் ஒரே வாழ்க்கையை வாழ்வதன் சலிப்பு.
நீங்கள் குறிப்பிடும் இந்த இரண்டும் ஒன்றையொன்று மறுக்கிறதே கவனித்தீர்களா?
அதே போல்,
1.அத்தியாயங்கள் சீர்படுத்தப்பட்டே வருகின்றன.
2. ஒரே வீச்சில் எழுதப்பட்டவை.
3. கொஞ்சம் யோசித்தாலும் எழுத்து காலியாகிவிடும்.
இவையும் ஒரே நபர் சொல்லமுடிகிற காரணங்களாக எனக்குத் தெரியவில்லை.
மேலும், தொன்மச் சுழல்கள் ஏன் நமக்கு நாம் பார்க்கிற அனைத்தையும் காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதை நிறைய பேர் பேசியிருக்கிறார்கள். அது எப்பொழுதும் மர்மமாகவே இருப்பதில்லை.
நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை விட்டு விடுங்கள் என்று நான் நிச்சயமாய் சொல்லத் துணியமாட்டேன்.
ஆர்வத்தோடே கவனித்துக் கொண்டிருக்கிறேன் - மொழியும் தொன்மமும் குறித்து இன்னும் கூடுதலாய் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இதை விட சிறப்பாக வேறு அமைய முடியுமா என்ன?
டி. தருமராஜ்
I am 65 years old man. Everyday I am waiting to read venmurasu. I am praying god that i should live 10 more year to read this novel. I dont know wht is your problem. So many people writing so many things. If you tell openly in which way it affects you, we can also understand your problem. I hope thousands of people are like me, eagerly reading this venmurasu. IF you think we are cheap people, there was nothing to argue. Krishna moorthy. bangalore.
வெண்முரசு என்பதனை மட்டுமல்ல தீபாவளி இலக்கிய மலர்களையே எத்தனைபேர் ஆவலுடன் தான் எதிர்பார்க்கின்றனர். 'If you tell openly...' என்ற வாக்கியத்தின் வழி அய்யா யாரைக் கேள்வி கேக்கிறார்? (அவருக்கு வயசு 65 என்பதை மறக்கக்கூடாது!) தருமராஜனையா?
அதன்பின்னர் 'IF you think we are cheap people, ...' வழியாகச் சொல்லவருவதன் உட்கிடக்கை கொடூர உள்முகம் கொண்டதாக இருக்கிறது.
முதலில் அதை அய்யா கிருஸ்ணமூர்த்தி தெளிவு படுத்திவிடுங்கள்.
What you mean by the word 'chaeap' and trying to insist through which?
As you know, my senior fellow, since I am not hiding behind any facke name, I did not put any info here!
இவ்வரிகளில் உள்ள நுட்பத்தை ஜெயமோகன் நன்றாகவே உணர்ந்திருப்பார் என்றே நம்புகிறேன். அப்படி நம்பினால் மட்டுமே அவரால் அப்பாத்திரங்களில் உலவ முடியும். ஆனால் அவர் மீள முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில் அவர் மீள வேண்டும் என்று நினைத்தாலும் எழுதியத் தொகுதிகளிலிருந்து அவரால் தப்பிக்க முடியுமா என்ன? அவரை அவை பின்தொடரத்தானே செய்யும். அவரது அன்புள்ளம் அப்போது இந்தியப் பண்பாட்டின் தொண்மங்களில் கரைந்துப் போய், அந்தத் தொண்மத்தின் அழுத்தம் அவர் மீது ஏறி நின்று தனது வெற்றிக் கொடியை ஊணும்போது நிச்சயம் அவருக்கு வலிக்கும். அந்த வலியில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு திணறும் அபாக்கியம் வாய்த்ததால்தான் தருமராஜ் நாசுக்காகவும், நுட்பமாகவும் சுட்டிகக்காட்டுககிறார். இது ஜெயமோகன் அவர்களுக்குப் புரியும்,. பெங்களூர்காரர் மட்டுமல்ல அவரையொத்தவர்கள் யாருக்கும் புரியாது என்பதுதான் இந்த சமூகம் கட்டமைத்திருக்கும் பயங்கரம்.
அன்புடன்
-ச-
ஜெயமோகன் பாரதத்தினுள் நுழைவதை இதனால் தான் பதட்டத்தோடு கவனிக்க வேண்டியிருக்கிறது. என்னளவில், நான் போராடிக்கொண்டிருக்கும் 'சாதி' யும், 'பாரதமும்' ஒரே மாதிரியான கருஞ்சுழிகளை உடையவை தான்.
krishnamoorthy. bangalore
what i understand is , you people want to raise your voice against old indian literatures.
you are against mahabaratham and you dont want anybody to write or rewrite it. the argument is over there. km, blr
ஹீ இஸ் கரெக்ட். இன்றைக்கான அகண்ட பாரதத்தின் மைந்தர்களின் முயற்சிகள் இவை. பர்பெக்ட்லி கரெக்ட். மகாபாரதம், Jeyamohen, Sridhar Kannan அனைவரும் இதில் வருகிறார்களா?
1. இந்த Anonymous24 November 2014 13:16 ஐக் கை கழுவுகிறேன். அண்ணன் தீவிரத் தெளிவுடன் இருக்கிறார்.
2. திருவளர் கிருஸ்ணமூரத்திக்கு அடுத்த பெட்டியில் பதிலைத் தனியகத் தரலாம் என நினைக்கிறேன்.. பாவம் தருமராஜன்....தனது நேரத்தை இங்கு செலவிடாமல் இருக்கட்டுமே!
ஆனால், நீங்கள் கவனப்படுத்தும் இரண்டு விஷயங்கள் தவறோ என்று தோன்றுகிறது.
1. ரஃபேலுக்கு பதில் சொல்ல வந்த நீங்கள், தோமையார் - தமிழ்ப் பண்பாடு என்றொரு இழையை இழுக்கிறீர்கள் (ரஃபேல் என்றால் கிறிஸ்தவர்)
2. 'தொன்மங்களுக்கு எதிரான கலகம்..' என்ற என் வாக்கியத்தைச் சுட்டிக் காட்டி மனுஷ்யபுத்திரனை இழுக்கிறீர்கள் (இஸ்லாமியர்???)
உங்கள் தகுதிக்கு இது பொருந்தாது என்றே நினைக்கிறேன்.
உங்களுக்கு ஜெயமே உண்டாகட்டும்.
டி. தருமராஜ்
அறிஞர் அண்ணாதுரையும் அங்குதான் படித்தார்.. ராக்கெட் விடவில்லையா? அது அவரவர் திறன் சார்ந்தது. எந்த பள்ளியில் படிக்கிறார் என்பதல்ல. பானைக்குள்ள ஏதாவது இருக்கோணும்.
ஆனால் இந்த கேஸ் அப்படியல்ல. இது அறிஞ்ச பெருச்சாளி.
மிகவும் தெளிவாக மகாபாரதம்:தாமஸ்:தருமராஜன்:ஜெயமோகன் என்று ஓர் கருத்துரவாக்கம் செய்கிறது.
அதைப் புரிந்துகொண்டால் கிருஸ்ண மூர்த்தி என்கிற ஃபெல்லோ யார் என்பதில் எந்தச் சிக்கலான புரிதலுக்கும் இடம் இல்லை.
இதைவிட கிருஸ்ணமூர்த்தியின் இந்தக் கோரிக்கை முதன்மையானது : but i dont think anybody can dictate terms for writers. if you dont like mahabaratham, please avoid it.
இது இலக்கியமல்ல மக்காளே! இது மகாபாரதம். அதை ஏன் ஜெயமோகன் எழுதுகிறார் என்றால் Sridhar Kannan சொல்வதுபோல I personally feel it is the need of the hour to project a positive modern look of Greater India.!
"புரிகிறதா? நான் யாரென்று தெரிகிறாதா"
வலைப்பூவில் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. உங்களது துறை சார்ந்து நிறைய எழுதுகிறீர்கள் - அயோத்திதாசர் ஆய்வுகளையும் செய்வதில் திருப்தி.
கோணங்கியைப் பற்றிய பதிவை நீங்கள் இன்னும் கொஞ்சம் விரித்து எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அவன் எல்லா தருணங்களிலும் உதாசீனத்தை மட்டுமே தின்றவனாயிருக்கிறான். ஒருவன் தன்னிச்சையாய் இருப்பதற்கு இந்த எழுத்துலகம் இப்படித் தானா அவனைப் புறந்தள்ள வேண்டும்.
பாழியை வாசிக்கும் முறைகள் குறித்து நீங்கள் ஏற்கனவே பேசியதைக் கேட்டிருக்கிறேன். மதுரையிலிருந்து போடி செல்லும் பாசஞ்சர் ரயிலில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட போது என்று என் ஞாபகம். அதன் பின் நீங்கள் எதுவும் எழுதியிருக்கவில்லை. இப்பொழுது தான் எழுதுகிறீர்கள்.
அதுவும், ஆரம்பத்திலேயே ஜெயமோகன் என்ற ஆகிருதியால் விழுங்கப்பட்டுவிட்டது.
கோணங்கியைப் பற்றி நீங்கள் எழுத வேண்டும் என்று வெளிப்படையாய் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு அவனது எழுத்து குறித்து ஒரு மரியாதை இருப்பதால் இதை உரிமையுடன் கேட்கிறேன்.
பாழி என்ற பிதிரா
ஒரே கனவு வேறு ஒரே நிலம் வேறு. ஒரே கனவில் பல்லாயிரம் வண்ன வேறுபாடுகள் உண்டு. பல்லாயிரம் நிலங்கள் மனிதர்கள். பயணம் மூலம் கலைந்துகொண்டிருப்பதுபோலத்தான் மகாபாரதம் போன்ற கனவில் கலைவதும்
அத்தியாயங்களின் சொல்லாட்சி, க்ளீஷேக்கள் போன்றவற்றை சீர்ப்படுத்தலாம். அதன் உள்ளடக்கம் அல்லது கூறுமுறை மாறமுடியாது. அதாவது செம்மையாக்கம் என்பது அதிகபட்ச்ம்2 சதவீதம் மேம்படுத்தல்தான். - நான் சொல்வதை புரிந்துகொள்வது எளிதுதான்
இணையசூழலின் பெரும் சாபம் அனானிகள். இனிமேல் இங்கே நிறைய ஆவிகள் வந்து பேசத்தொடங்கிவிடும்.[ ஆட்களை அடையாளம் காண்பது மிக எளிது ]
நான் இதிலிருந்து விலகிக்கொள்கிறேன்
)))
ஜெ
krishnamoorthy, bangalore.
டி. தருமராஜ்
அரவேந்தன்
I am giving my name and place. in spite of so many odds leople like me are following some blogs. I am not only reading jayamohan's blog.
krishnamoorthy, bangalore.
THANKS FOR ALL THE COMMENTS. IN THE SUMMIT (OR ASSEMBLY) OF INTELLECTUAL PERSONS, A FOOL ENTERS AND SPEAKS SOME NONSENSE, THESE TYPE OF COMMENTS COULD NOT BE AVOIDED. HENCE I ACCEPT IT. IN THIS WAY ONLY Mr. DARMARAJ WANTS TO MAINTAIN THE DIGNITY AND DECORUM OF HIS BLOG, THEN IT WILL BE MOST WELCOME. REGARDING அறிஞர் அண்ணாதுரையும்" "COMMENTS, ALL GOVT SCHOOL STUDENTS CAN NOT ENTER IN ISRO. SOCIETY NEEDS ALL PEOPLE LIKE CARPENTER, FITTER, PLUMBER AND ELECTRICIAN. IF SOMEBODY'S BATHROOM PIPE GETS CHOKED, HE CAN NOT CALL ISRO SCEINTIST.
IF SOMEBODY SAYS " Ï AM INTELLECTUAL, YOU KEEP YOUR MOUTH CLOSED " THEN IT IS ALSO NEW CASTE SYSTEM. I DO NOT KNOW THAT Mr. தர்மராஜ்WANTS TO ADVOCATE NEW CASTE SYSTEM?
IF THERE IS ANY OPPOSITE VOICE AND Mr. தர்மராஜ்WANTS TO CRUSH IT, THEN DONT WANT TO WRITE MY OPINION.
KRISHNA MOORTHY, BANGALORE
2. When it is barking in CAPS, that shows the state of or level of tension, in which it is in.
3. If an யுனானி sorry an அனானி request a decorum of his page from Dr. Dharmaraj (See the utilization of language by this fellow.... as "Mr.தர்மராஜ்") it or he or she should write according to.
4. Utmost, I like the last scentence from this அனானி என்கிற கிருஸ்ண மூர்த்தி என்கிறஃபெல்லோ. (If I am talking in a barking language as of your, you go and see your feeds to find who used the word 'fellow' in fisrt place.)
5. And the last one is please keep tha promis and do according to your last scentence.
;)
Respected sir,
Sorry for calling you as Mr. I regret.
Amused and delighted to see the reaction for my letter.
I am working as a contract labour ( technician). so, I am habituated for all in my long 42 years of service.
In this prevailing atmosphere, I am really proud of Jayamohan for his efforts. Hats off to him.
You are welcome to my home in Bangalore at any time.
BYE.
Krishna Moorthy, Bangalore
M. Kanaga Rathnavel, Hyderabad.
இந்த வலைப்பூ நடத்தும் நிறுவனங்கள் பேசாமல் ஆதார் அட்டையில் அடையாளம் கேட்கலாம். நல்லாயிருக்கும்.
"ஆனால் அனைத்தும் நன்றாகவே நடக்கிறது."
There is nothing clandestine about being anonymous, as long as the comment is moderated by the author. Authors allow anonymous posts know what is it. At times, it could turn awkward I know. But those two persons have clearly made their name and place. I guess they like it that way.
And, let me tell you that there are people who are vulnerable to filthy bloggers/posters. At times, few people can't really afford that.
With due respects Mr.Rafel