Skip to main content

12 மேனாட்டார் பார்வையில் கம்மா இனமக்கள் வாழ்வியல்

12 மேனாட்டார் பார்வையில் கம்மா இனமக்கள் வாழ்வியல்முனைவர். சி.பி. கோபால் கம்மா, காபூ அல்லது ரெட்டி, வெலமா மற்றும் தெலகா ஆகியோரைக் கூற வந்த பிரான்ஸிஸ் இந்த நான்கு பெரிய ஜாதிகளும் தோற்றத்திலும் பழக்க வழக்கங்களிலும் ஒன்றையொன்று ஒத்திருந்தன என்றும் அனைத்து ஜாதிகளும் திராவிடத்திலிருந்தே வந்தன என்றும் கூறுகிறார். ஆரம்ப காலத்தில் வீரர்களாகத் திகழ்ந்த இவர்கள் தற்போது விவசாயிகளாகவும், வியாபாரிகளாகவும், வடக்கே சிலர் ஜமீன்தார்களாகவும் உள்ளனர். சத்திரியர்கள் என்று சொல்லப்படுகின்ற ராஜூஸ் என்ற ஜாதியினர் காபூஸ், கம்மாஸ் மற்றும் வெலமாஸ் என்ற ஜாதிகளில் இருந்து பிரிந்து இருக்கலாம். 


மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படும் கம்மாக்களும் காபூக்களும் தெற்கு விஜய நகர போர்ப்படையினைப் பின்பற்றி வந்து நாயக்கர் கவர்னர்கள் நிலை நிறுத்திக் கொண்ட போதே இம்மாவட்டங்களில் தங்கி விட்டனர். அவர்கள் வீட்டுப் பெண்கள் மற்ற ஜாதிப் பெண்களை விட கண்டிப்புக் குறைந்தவர்களாக இருந்தனர். அதிலும் கம்மாக்களின் ஒரு பிரிவு மகளிர் முஸ்லீம்களைப் போல் கோஷா அணிந்து தனித்து இருந்தனர்.


கம்மா, காபூ மற்றும் வெலமாக்களின் மூதாதையர் பற்றி ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன. 'கம்மா' என்ற சொல்லுக்கு, பெண்கள் காதில் அணியும் ஆபரணம் என்று பொருள். புராணக் கதையின்படி ஒரு முறை அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத ரிஷிகள் விஷ்ணுவிடம் சென்று முறையிட, அவர் தம் தேவி லக்ஷ்மியிடம் முறையிடப் பணித்தார். லக்ஷ்மி தன்னிடம் முறையிட்ட இருடிகளிடம் தன்னுடைய காதணிகள் வைக்கப்பட்ட பேழையினைத் தந்து அதை நூறாண்டுகள் பூஜை செய்யுமாறு கட்டளையிட, நூறாண்டு பூஜைக்குப் பின் பேழையினைத் திறந்து கொண்டு வந்த ஐநூறு வீரர்கள் ரிஷிகளின் வேண்டுகோளின்படி அசுரர்களைக் கொன்று அழித்து விட்டனர். இதற்குப் பின் அவர்கள் நிலபுலன்களைக் கவனித்துக் கொள்ளும் விவசாயிகளாக மாறினர். சத்திரியர்களைப் போலவே அவர்களும் அமராவதி மற்றும் நெல்லூர், கிருஷ்ணா மாவட்டங்களில் குடிபெயர்ந்து சிறந்த வேளாண் குடிகளாயினர் 


எப். ஆர், ஹெமிங்வே என்பவர் கோதாவரி மாவட்டத்தில் உள்ள சில கம்மாக்களைப் பற்றிய விவரங்களை வினவிய போது அவர்கள் சொன்னதாவது: வெகு காலத்திற்கு முன்பு பரிஷத் குடும்பத்தைச் சேர்ந்த அரசன் ஒருவனைக் கம்மா ஒருவன் தகாத வார்த்தை சொன்னதால் கம்மாக்கள் தண்டிக்கப்பட்டார்களாம். நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர்களைக் கபூக்கள் வரவேற்று அவர்கள் குலத்தோடு சேர்த்து ஏற்றுக் கொண்டார்கள். இன்னொரு புராணக் கதையின்படி ராஜா பிரதாப ருத்ரனுக்குரிய விலை மதிப்பிடற்கரிய காதணி எதிரிகளின் கையில் அகப்பட்டு விட அதைக் கபூக்கள் போராடி மீட்டனர். எனவே அவர்களும் கம்மா என்று அழைக்கப்பட்டார்கள். சில கபூக்கள் ஓடிவிட அவர்கள் வெலமாக்கள் என்று அழைக்கப்பட்டனார் (வெலி என்றால் வெளியே என்பது பொருள்), கம்மாக்களும் வெலமாக்களும் ஒரு ஜாதியாக இணைந்த போது அவர்கள் முஸ்லீம்களின் கோஷா அணியும் முறையைப் பின்பற்றி தம் குலப் பெண்டிரையும் தனியே இருக்க வைத்தனர். இம்முறை அவர்களின் விவசாயச் செயல்களுக்குத் தடையாக இருந்தது. இந்த முறையைக் கைவிட வேண்டி இரு தரப்பினரும் பனை ஓலையில் எழுதி ஒப்பந்தம் செய்து கொண்டனர். உடன்பாடு ஏற்று கையெழுத்திட்டவர்கள் கம்மாக்கள் என்றும், உடன்படாதவர்கள் வெலமாக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். காதிலே ஓட்டை போட உதவிடும் பனை ஓலையினைப் பின்பற்றி பனை ஓலையில் எழுதி ஒப்பந்தம் செய்து கொண்டதால் அவர்கள் கம்மாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பிறிதொரு கதையின்படி பெல்திரெட்டி என்ற அரசன் ஒருவனுக்கு ஏராளமான மனைவியர் இருந்தனர். அவர்களில் மிகவும் விரும்பிய ஒருத்தியை அவன் ராணியாகத் தேர்ந்தெடுத்தான். இதனால் பொறாமை கொண்ட மற்ற மனைவியர் ராணியின் நகைகளைத் திருடுவதற்குத் தங்கள் மகன்களைத் தூண்டி விட்டனர். ஆனால் சிலர் அகப்பட்டுக கொண்டனர். சிலர் தப்பி ஓடி விட்டனர். ஓடியவர்கள் வெலமாக்கள் என்றும் நகைகளைத் திரும்ப ஒப்படைத்தவர்கள் கம்மாக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். 


1891 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்குப்படி கம்மாவின் உட்பிரிவுகள், கம்பா, இல்லுவேலனி, கோடாஜாதி, காவலி, வடுகா, பெட்டா மற்றும் பங்காரு. இதில் முக்கியமான இரு பிரிவுகள் கம்பா (கூடை) சாத்து மற்றும் கோடா (சுவர்) சாத்து.  சாத்து என்றால் திரை அல்லது மறைவிடம் என்று பொருள். இவ் உட்பிரிவுகளின் மூலத்தை ஆராய ஆரம்பித்தால் அதற்கும் ஒரு கதை இல்லாமல் இல்லை. அக்கதையாவது:


இரு சகோதரிகள் ஒரு குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த போது ஓர் அரசன் அவ்வழியே செல்ல நேர்ந்தது. இருவரும் மறைந்து கொள்ள வேண்டியிருந்ததால் ஒருத்தி கூடைக்குப் பின்னாலும் இன்னொருத்தி சுவரின் பின்னாலும் ஒளிந்து கொண்டனர். அவர்தம் வழியில் வந்தவர்கள் முறையே கோடா கம்மாக்கள் என்றும் கம்பா கம்மாக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆயினும் அவர்களுக்குள் திருமண உறவுகள் வைத்துக் கொள்வதில்லை. 


இன்னொரு புராணக் கதைப்படி, சண்டையில் தோல்வியடைந்த கம்மா ஜாதியினைச் சேர்ந்தவர்கள் தப்பியோடும் போது சிலர் கூடைக்குப் பின்னாலும் சிலர் சுவரின் பின்னாலும் மறைந்து ஓடி விட்டனர். இல்லுவேவளி மற்றும் பெட்டாவும் கோடா ராத்துவிற்கு ஒரே சொல்லாகும். இந்த ஜாதிப் பெண்கள் கோஷாக்களாக பொதுவிடங்களுக்கு வராமல் தனியாகவே இருந்தனர், இன்றுகூட அவர்கள் வெளியே சென்று வயல்களில் வேலை செய்வதில்லை.  இல்லு என்றால் வீடு, வேலன் என்றால் வெளியே செல்லல், 'இல்லு வேலன் என்று சொன்னால் வெளியே செல்லாதவர்கள் என்பது பொருள்.  


பெத்தா என்றால் பெரியவர்கள் என்பது பொருள். வடுகன் என்றால் தெலுங்கு என்று பொருள். எனவே தமிழர்கள் கம்மாக்களுக்கு அளித்த பெயர் தெலுங்கு வாடு அல்லது மொழியைக் குறிக்கும் பெயராகிய வடுகன் என்பதாகும். 'பங்காரு' என்றால் பெண்கள் அணியும் ஆபரணங்கள் என்று பெயர்.  கோடா ஜாதி உட்பிரிவு வடக்கு ஆற்காட்டிலும் செங்கல்பட்டிலும், இல்லு வேலனி கிருஷ்ணாவிலும், நெல்லூரிலும் மற்றும் அனந்தப்பூரிலும் காணப்படுகிறார்கள். காவாலி பிரிவினர் கோதாவரியிலும் பெத்தாக்கள் கிருஷ்ணாவிலும் வடுகா கம்மாக்கள் கோயம்புத்தூரிலும் மிகப் பரவலாக உள்ளனர், 


கோதாவரி மாவட்டத்தில் உள்ள சும்மாக்கள் பற்றி ஹெமிங்வே கீழ்வருமாறு கூறுகிறார். இம்மாவட்டத்தில் கம்மாக்கள் காவித்திஸ், எரேடிஸ், கம்பாக்கள் அல்லது காடாக்கள், உக்கம்ஸ், ராச்சாஸ் என்று பிரிக்கப்பட்டுள்ளனர், இந்தப் பெயர்கள் பாரம்பரிய வழிப்படி நீர் கொண்டு வருதல் தொடர்பாக வைக்கப்பட்டுள்ளன. காவிடிஸ் இனத்தவர் காவிடி என்ற பானைகளில் தண்ணீர் எடுத்து வருகிறார். எரேடிஸ் இனத்தவர் மாடுகளின் முதுகிலும், உக்கம்ஸ் இனத்தவர் கைகளிலும் ராச்சாஸ் இனத்தவர் இருவராகவும் தண்ணீர் கொண்டு வருவர். 


இல்லுவேலனி கம்மாக்களைப் பற்றி எழுதும் போது கர்னூல் மேனுவல் (1886) என்ற மாவட்டக் கையேட்டின் பதிப்பாசிரியர் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். சில குடும்பங்கள் தான் தற்போது இம்மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றன. பெண்கள் கோஷா முறையைத் தவறாமல் கடைப்பிடிக்கின்றனர். நூல் நூற்றலையோ வேலை செய்வதையோ அவர்கள் தம் மதிப்பிழிவு என்று எண்ணுகின்றனர். ஒரு உட்பிரிவைச் சேர்ந்த இந்த இனத்தவர் புல்லச் செருவு என்ற இடத்தில் வசித்து வருகின்றனர். கோஷா பெண்மணிகளான இவர்கள் மற்ற பெண்களைப் போல நூற்பாலைகளில் வேலை செய்து வருகின்றனர். இன்னுமொரு கம்மா பிரிவினர் ஒவ்க் என்ற இடத்தில் வசித்து வருகின்றனர். இவர்களும் கம்மாக்களின் வழிமுறைத் தோன்றலராவர். 


இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் குண்டூரில் இருந்து காந்தி கோட்டாவிற்கு நாயக்கர்களைப் பின்பற்றி வந்தவர்களாவர். இன்று இவர்கள் மிகவும் சீரழிந்து விட்டனர். பெண்களும் வயலில் வேலை செய்கின்றனர். கம்மாக்களுக்கும் கம்பாக்களுக்கும் பெண்களிடம் உள்ள அடிப்படை வேறுபாடு என்னவென்றால் கம்பாக்கள் தோள் சேலைத் தலைப்பினை வலது புறமும். கம்மாக்கள் இடதுபுறமும் போட்டு இருப்பர்.


சமுதாயத்தைப் பாதிக்கக் கூடிய செய்திகளைப் பற்றி விவாதித்து முடிவு எடுக்க இனத்தின் மூத்த தலைவர்கள் கூடி ஆலோசிப்பர். சில இடங்களில் நிலையான தலைவன் உண்டு, அவருக்கு மன்மேமந்திரி அல்லது சாத்ரி என்ற பெயருண்டு. கம்மாக்கள் கூலிகளாகக் கூட வேலை செய்யத் தயாராக இருப்பர், ஆனால் வீட்டு வேலை செய்யத் துணிய மாட்டார்கள்.  


பாதிரியார் ஜே. கெய்ன் என்பவர் கூறுகிறார்: - மிகச் சிறந்த மற்றும் வலிமையான விவசாயிகளான கம்மாக்கள் நகர வாழ்க்கையின் மீது பற்றில்லாதவர்கள். தங்கள் மனைவிகளைத் தங்களுடைய வீட்டு வளாகத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் விவசாய வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். வீட்டு வேலைகளிலேயே மூழ்கிக் கிடப்பர். பத்திரிக்கையாளர் யாராவது அவர்களை அணுகி, 'இந்த கிராமத்தில் இருப்பவர் பிராம்மணா' என்றால் 'இல்லை'. இங்கு சாதாரணமாக கம்மா அல்லது காபுதான் உண்டு '. எத்தனைபேர் இவ்வூரில் வருமானவரி கட்டுகிறார்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்வார்கள், 'இரண்டு வியாபாரிகள், இரண்டு சம்சாரிகள்' அதாவது கம்மா விவசாயிகள் என்று.


மதத்தினைப் பொறுத்தவரை கம்மாக்கள் சைவர்கள் மற்றும் வைஷ்ணவர்கள். சைவர்கள் ஆராத்யா பிராமணர்களின் சீடர்கள். வைஷ்ணவ பிராமணர்கள் மற்றும் சாத்தனீர்களின் சீடர்கள் சைவர்கள். கம்பாக்கள் திரௌபதி, மன்னார்சாமி, கங்கம்மா, அங்கம்மா மற்றும் பாத வேடியம்மா ஆகியோரைத் தொழுதார்கள். கோடாக்கள் போலரம்மா, பெய்கண்டலா தள்ளி மற்றும் பாடவேடியம்மா போன்ற தேவதைகளைத் தொழுது வந்தனர்.


Comments

Popular posts from this blog

அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?

1 அந்தக் கட்டுரையில் அப்படி என்ன தான் கோளாறு என்று படிப்படியாகப் பார்க்கலாம்.  முதலில் அதுவொரு மானிடவியல் ஆய்வுக்கட்டுரை.  சாதியின் தற்கால இயங்கியலைப் பேச விரும்புகிறது. நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகளில் காணப்படும் ஜனநாயகத்தன்மை மானிடவியலில் மருந்துக்கும் கிடையாது.  இரண்டுமே பண்பாட்டை அலசக்கூடிய ஆய்வுத் துறைகள் தான்.  ஆனால், மானிடவியல், மிகத் தெளிவாக தன்னை விடக் கீழானவர்களைப் படிக்கிறோம் என்ற ஓர்மை உடையது.  மேல், கீழ் என்று இவ்வுலகில் யாரும் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மானிடவியலின் இந்த மனக்கோளாறு மட்டும் மாறவே இல்லை. உதாரணத்திற்கு, அந்தக் கட்டுரையில், அவர்கள் எடுத்துக் கொண்ட ஆய்வுப் பொருளைக் கவனியுங்கள் - தலித் இளைஞர்களின் ஆண்மையுருவாக்கம்!  அந்த ஆண்மையின் பழைய வடிவங்களையும் புதிய மாற்றங்களையும் தான் அவர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள்.   இதே விஷயத்தை, நாட்டுப்புறவியலில் என்றால் இப்படித் தொடங்குவோம்.   பால் கருத்துருவங்களான ஆண்மை - பெண்மை குறித்து அந்த சமூகத்து மக்களிடம் ஏதாவது வழக்காறுகள் வழங்கப்படுகின்றனவா என்பதே முதல் தேடலாக இருக்கும். கதைகள், பழமொழிகள், பாடல்கள்

மனுதர்ம சாஸ்திரம் - அயோத்திதாசரும் பெரியாரும்

காலாவதியான ஒரு நூலை எதிர்த்துப் போராடுவதற்கு சில நுட்பங்கள் தேவைப்படுகின்றன.   ஏனெனில், அப்படிச் செய்வதன் மூலம், நாம் மறக்க நினைப்பதை நினைவில் கொள்கிறோம், எரிக்க விரும்புவதை அச்சிடுகிறோம், இறந்த காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோம்.   சுருக்கமாகச் சொன்னால், பயன்பாடற்ற புத்தகத்தை எதிர்ப்பது, பிணத்தைப் புணர்வதைப் போல.   ‘உச்சகட்டத்தில், புணரும் பிணம் உங்களை இறுகத் தழுவிக் கொள்கிறது!’ என்பதே நியதி.   மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்ப்பதிலும் இதுவே நடைபெறுகிறது.   அது நம்மை ஆரத்தழுவுகிறது; தழுவி, மிக எளிய முரணுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.   இந்த முரணும் கூட வரலாற்றில் நாம் நன்கு பழகிய முரண்.   பிராமணர் - சூத்திரர் என்ற மிகப் பழைய முரண்.   அந்நூலை விமர்சிக்கத் தொடங்கியதும், அப்பனுவலிலிருந்து காரிய பலன் பெறுவதாகத் தோன்றும் பிராமணர்கள் பூதாகர எதிரியாக உருப்பெறத் தொடங்குகிறார்கள்.   பிணம் கண்மலரும் தருணம் இது.   உங்களை அறியாமலேயே நீங்கள் ‘பிராமண எதிர்ப்பாளராக’ வடிவம் பெறத் தொடங்குகிறீர்கள். உடலெங்கும் சேறு பூசி, ஒரு வயோதிகப் பிராமணன், புதை குழியிலிருந்து எழுந்து வருவதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.   அவன்

வண்டியை மறிக்கும் கர்ணன் - சுயமரியாதைக்கு எதிரானவையா திராவிட அரசுகள்?

மாரி செல்வராஜின் கர்ணன் குறித்து எழுதப்பட்ட கட்டுரையா இது என்று எனக்குத் தெரியாது .  ஆனால் , அப்படியொரு முயற்சிக்கான ஆரம்பக் குறிப்புகள் என்று சொல்லிக் கொள்ளலாம் .  ஒரு திரைப்படம் இத்தனை அடுக்குகளோடு வெளிப்பட முடியுமா என்பதை இன்னமும் ஆச்சரியத்தோடு நினைத்துக் கொண்டிருக்கிறேன் .  இப்போதைக்கு என்னால் கோடிட்டுக் காட்ட முடிந்த முக்கியமான விவாதப் புள்ளிகள் : தெய்வமாதல் , கிராமத்தை விட்டு வெளியேறுதல் , கெளரவப்பாரதம் , மறுவாசிப்பு , பல்லுயிர் வாழ்க்கை , சுயமரியாதைக்கான வேட்கை , எழுத்தும் அன்றாடமும் , தலைமையைக் கொய்யும் அரச பயங்கரவாதம் … இனி குறிப்புகளை வாசியுங்கள் ! 1 நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் சில குறிப்பிட்ட இடங்களில் நின்று சாமி கும்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா ?  அவை , சாலையோர தெய்வங்கள் . இவற்றுள் பிரபலமான தெய்வங்களும் உண்டு - ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் , ஆண்டிப்பட்டி கணவாய் தர்ம சாஸ்தா , இப்படி பல .  கணவாய் போன்ற மிகப் பிரதான வழிகளை மட்டுமல்லாது , நகரங்களை நோக்கிச் செல்லக் கூடிய எந்தவொரு சாலையிலும் ந