Skip to main content

வசீகர அரசு இயந்திரத்தின் வருகை!

எவ்வாறு தேசியம், கடவுள் போன்றவை கற்பிதங்களோ அதே போல, மிகத் தூய அதிகாரம் அல்லது வசீகர அரசு என்பதும் கற்பிதம்பளபளப்பான இயந்திரத்தைப் போல, அது கவர்ச்சிகரமானதுஆயுத பூஜையின் போது சாற்றப்படும் சந்தன குங்கும மாலைகள் சூடிய இயந்திரம் என்று சொன்னால் விளங்கும்.  

அரசு இயந்திரத்திற்கு கவர்ச்சியேற்றும் போது என்ன நடக்கிறது?   இயந்திரங்களுக்குப் பொருந்தாத மனிதத்தன்மையை ஏற்றுகிறோம் என்று அர்த்தம்இந்தப் பொருந்தாமையே கவர்ச்சியாக வெளிப்படுகிறது


இதற்கொரு எதிர் உதாரணமும் உண்டுமனிதர்கள் இயந்திரத்தைப் போல செயல்படும் பொழுதும் கவர்ச்சி ஏற்படுகிறதுஇதன், வெகுஜன உதாரணம், போர்னோகிராபி உடல்கள், சர்வாதிகாரிகள்தமிழ் உதாரணங்களும் உண்டு - எம்ஜியாரும் ஜெயலலிதாவும். சினிமா கவர்ச்சி மிகுந்தவர்கள்; ஆனால், இறுதி வரை  இயந்திரந்தைப் போலவே வாழ்ந்தனர் - ரத்த பந்தங்கள் எதுவுமின்றிஎம்ஜியாரின்ரத்தத்தின் ரத்தங்களேஎன்ற வாக்கியம் இதன் ஆழ்மன நீட்சிகலைஞரும், கவர்ச்சியானவர்; அவரது எழுத்தும் பேச்சும் கவர்ச்சியானவைஅவரும் நிர்வாகத்தில் தன்னை இயந்திரமாகவே காட்டிக் கொண்டார் - ராஜ தந்திரி / சாணக்கியர்


மனிதர்கள் இயந்திரமாகுதல் போல, இயந்திரங்களும் மனிதராக முடியும்அறிவியல் புனைகதைகள் இதைக் கொஞ்சம் பேசியிருக்கின்றன.  ‘மனித உணர்வுகள் ஊற்றெடுக்கும் இயந்திரங்கள்என்பது இவற்றின் அடிநாதம்காதலே இக்கதைகளின் பிரதான உணர்வு.  


நிஜத்தில், அரசு இயந்திரம் தன்னை மனிதத்தன்மையோடு வெளிப்படுத்த முனையும் போது, காதல் பெரிதும் உதவுவது இல்லை. நேர்மை, தூய்மை, ஒழுங்கு என்று மீமனித குணங்களை வரிந்து கொள்ளத் தொடங்குகிறது. இன்றைக்கு தமிழக அரசு நடந்து கொள்வதைப் போல.


இதன் காரணமாகவே, அரசு இயந்திரம் மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள ஆரம்பிக்கும் பொழுது, யாரும் அறியாமல் அதற்கொரு மாமனிதத் தன்மை வந்து சேர்கிறதுஇப்படி நடப்பதில் ஆச்சரியமும் இல்லை.  


மனிதத்தன்மை என்பது ஏராளமான தவறுகளுடன் கூடிய உணர்வுகள் என்பதை மறந்து விடக்கூடாதுசர்வசாதாரணமாய் தவறுகள் நிகழவும், மன்னிக்கவும் கூடுகிற காதலை, அறிவியல் கதைகள் பயன்படுத்திக் கொள்வது இதனால் மட்டுமேஅப்படி இல்லாதபட்சத்தில், இரக்கம், நியாயம் போன்ற மனிதவுணர்வுகளை எய்துகிற இயந்திரம் அறிவியல் கதைகளில் கடவுளாகவே பார்க்கப்படுகிறது.  


முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் அரசு இயந்திரத்தை மீவியல்புடையதாகக் கட்டமைக்கத் தொடங்கியிருக்கின்றனபளபளப்பான ராணுவ தளவாடங்களின் ஊர்வலம் போலஆனால், இயந்திரங்கள் கொண்டாடப்படுவது ஆபத்தையே விளைவிக்கும் என்று தோன்றுகிறதுஏனெனில் அவற்றிற்கு உருவாக்கப்படும் வசீகரம், உள்ளீடற்ற வசீகரம்சர்வாதிகாரிகள் உள்ளீடற்ற வசீகரத்தையே விரும்புகிறார்கள்அப்படி உருவான உள்ளீடற்ற வசீகரத்திற்காகவே அவர்கள் காத்திருக்கவும் செய்கிறார்கள்.  


திராவிட முன்னேற்ற கழக ஆட்சி உருவாக்கி வரும்வசீகர அரசு இயந்திரம்என்ற யோசனையை நிறைய பேர் விரும்புகிறோம்ஆண் குழந்தைகள் இரும்பு பொம்மைகளில் மயங்குவது போலஆனால், அப்படியொன்று திரள்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது      


Comments

Popular posts from this blog

அந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு?

1 அந்தக் கட்டுரையில் அப்படி என்ன தான் கோளாறு என்று படிப்படியாகப் பார்க்கலாம்.  முதலில் அதுவொரு மானிடவியல் ஆய்வுக்கட்டுரை.  சாதியின் தற்கால இயங்கியலைப் பேச விரும்புகிறது. நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகளில் காணப்படும் ஜனநாயகத்தன்மை மானிடவியலில் மருந்துக்கும் கிடையாது.  இரண்டுமே பண்பாட்டை அலசக்கூடிய ஆய்வுத் துறைகள் தான்.  ஆனால், மானிடவியல், மிகத் தெளிவாக தன்னை விடக் கீழானவர்களைப் படிக்கிறோம் என்ற ஓர்மை உடையது.  மேல், கீழ் என்று இவ்வுலகில் யாரும் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மானிடவியலின் இந்த மனக்கோளாறு மட்டும் மாறவே இல்லை. உதாரணத்திற்கு, அந்தக் கட்டுரையில், அவர்கள் எடுத்துக் கொண்ட ஆய்வுப் பொருளைக் கவனியுங்கள் - தலித் இளைஞர்களின் ஆண்மையுருவாக்கம்!  அந்த ஆண்மையின் பழைய வடிவங்களையும் புதிய மாற்றங்களையும் தான் அவர்கள் விவாதிக்க விரும்புகிறார்கள்.   இதே விஷயத்தை, நாட்டுப்புறவியலில் என்றால் இப்படித் தொடங்குவோம்.   பால் கருத்துருவங்களான ஆண்மை - பெண்மை குறித்து அந்த சமூகத்து மக்களிடம் ஏதாவது வழக்காறுகள் வழங்கப்படுகின்றனவா என்பதே முதல் தேடலாக இருக்கும். கதைகள், பழமொழிகள், பாடல்கள்

மனுதர்ம சாஸ்திரம் - அயோத்திதாசரும் பெரியாரும்

காலாவதியான ஒரு நூலை எதிர்த்துப் போராடுவதற்கு சில நுட்பங்கள் தேவைப்படுகின்றன.   ஏனெனில், அப்படிச் செய்வதன் மூலம், நாம் மறக்க நினைப்பதை நினைவில் கொள்கிறோம், எரிக்க விரும்புவதை அச்சிடுகிறோம், இறந்த காலத்தில் வாழ ஆரம்பிக்கிறோம்.   சுருக்கமாகச் சொன்னால், பயன்பாடற்ற புத்தகத்தை எதிர்ப்பது, பிணத்தைப் புணர்வதைப் போல.   ‘உச்சகட்டத்தில், புணரும் பிணம் உங்களை இறுகத் தழுவிக் கொள்கிறது!’ என்பதே நியதி.   மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்ப்பதிலும் இதுவே நடைபெறுகிறது.   அது நம்மை ஆரத்தழுவுகிறது; தழுவி, மிக எளிய முரணுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.   இந்த முரணும் கூட வரலாற்றில் நாம் நன்கு பழகிய முரண்.   பிராமணர் - சூத்திரர் என்ற மிகப் பழைய முரண்.   அந்நூலை விமர்சிக்கத் தொடங்கியதும், அப்பனுவலிலிருந்து காரிய பலன் பெறுவதாகத் தோன்றும் பிராமணர்கள் பூதாகர எதிரியாக உருப்பெறத் தொடங்குகிறார்கள்.   பிணம் கண்மலரும் தருணம் இது.   உங்களை அறியாமலேயே நீங்கள் ‘பிராமண எதிர்ப்பாளராக’ வடிவம் பெறத் தொடங்குகிறீர்கள். உடலெங்கும் சேறு பூசி, ஒரு வயோதிகப் பிராமணன், புதை குழியிலிருந்து எழுந்து வருவதை கற்பனை செய்து கொள்ளுங்கள்.   அவன்

வண்டியை மறிக்கும் கர்ணன் - சுயமரியாதைக்கு எதிரானவையா திராவிட அரசுகள்?

மாரி செல்வராஜின் கர்ணன் குறித்து எழுதப்பட்ட கட்டுரையா இது என்று எனக்குத் தெரியாது .  ஆனால் , அப்படியொரு முயற்சிக்கான ஆரம்பக் குறிப்புகள் என்று சொல்லிக் கொள்ளலாம் .  ஒரு திரைப்படம் இத்தனை அடுக்குகளோடு வெளிப்பட முடியுமா என்பதை இன்னமும் ஆச்சரியத்தோடு நினைத்துக் கொண்டிருக்கிறேன் .  இப்போதைக்கு என்னால் கோடிட்டுக் காட்ட முடிந்த முக்கியமான விவாதப் புள்ளிகள் : தெய்வமாதல் , கிராமத்தை விட்டு வெளியேறுதல் , கெளரவப்பாரதம் , மறுவாசிப்பு , பல்லுயிர் வாழ்க்கை , சுயமரியாதைக்கான வேட்கை , எழுத்தும் அன்றாடமும் , தலைமையைக் கொய்யும் அரச பயங்கரவாதம் … இனி குறிப்புகளை வாசியுங்கள் ! 1 நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் சில குறிப்பிட்ட இடங்களில் நின்று சாமி கும்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா ?  அவை , சாலையோர தெய்வங்கள் . இவற்றுள் பிரபலமான தெய்வங்களும் உண்டு - ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன் , ஆண்டிப்பட்டி கணவாய் தர்ம சாஸ்தா , இப்படி பல .  கணவாய் போன்ற மிகப் பிரதான வழிகளை மட்டுமல்லாது , நகரங்களை நோக்கிச் செல்லக் கூடிய எந்தவொரு சாலையிலும் ந