Skip to main content

போலச்செய்கிறார்கள்



The simulacrum is never that which conceals truth – it is the truth which conceals that there is none. The simulacrum is true – Ecclesiastes – From Simulations by  Jean Baudrillard

இப்படி எழுதுவது தமிழில் கூச்சமில்லாது பலரால் செய்யப்படுகிறது என்றாலும், எனக்கு மனம் ஒப்பவில்லை.  இருந்தாலும் சமகாலத்தில் எழுந்திருக்கும் குரல்களை தொகுத்து வாசிக்கிற அனுபவத்திற்காக இதைச் செய்கிறேன்.

‘போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் என்ற தலைப்பில் தொடர்ச்சியாக நான் எழுத ஆரம்பித்த பின்பு, தமிழில் ‘சாதி தொடர்பான உரையாடலொன்று தன்னியல்பாய் (?) உருவானது போல உருவாகியிருக்கிறது. 


 
இந்த விவாதம் என்ன மாதிரியான முடிவுகளை நோக்கி நகரும் என்பதை இப்பொழுதே கணிக்க முடியாது என்றாலும், இப்படியொரு பேச்சு எழுந்திருப்பதே ஆரோக்கியமானது தான். 

அந்த வகையில், எனது கட்டுரைகளைத் தொடர்ந்து எழுந்த இந்தப் பேச்சுகளை கவனிக்கத் தவறியவர்களுக்காக அவற்றிற்கான சுட்டிகளைக் கீழே தருகிறேன்.

1.       வெ. ராமசாமியின் ‘ஒத்திசைவு என்ற பெயரிலான வலைத்தளம் – இதில் தான் அவர் முதன்முதலாக எனது கட்டுரைத் தொடரைக் குறிப்பிட்டு எழுதி பலரின் கவனத்தையும் இங்கு ஈர்த்தார்.  அதற்கான சுட்டி, http://othisaivu.wordpress.com/2014/11/12/post-417/

2.       கிழக்கு பதிப்பக பத்ரி சேஷாத்ரி, ‘போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் என்ற தொடரை கவனமாக வாசித்து வந்ததோடு, அதன் மூன்றாவது பகுதியான ‘என் தம்பி பாப்பான் என்பதை அவரது நண்பர்கள் பலரும் வாசிக்கும் படி பரிந்துரைத்தார்.  இதனால் பலரும் இந்தத் தொடருக்கு வந்து சேர்ந்தனர். இந்த நிலையிலேயே,  ‘போலச்செய்தல் திரும்பச்செய்தல் குறித்த அவரது வினையாக, ‘The angst of the Tamil Brahmin’ என்ற பதிவொன்றை Times of India இதழில் எழுதினார்.  அதற்கான சுட்டி இதோ http://timesofindia.indiatimes.com/city/chennai/The-angst-of-the-Tamil-brahmin-Live-and-let-live/articleshow/45408151.cms

3.       பத்ரியின் பதிவிற்கான எதிர்வினை போல நான் எழுதிய பத்தி ‘திராவிட காலத்தில் பிராமணர்களுக்கு சாப விமோசனம் உண்டா? http://tdharumaraj.blogspot.in/2014/12/blog-post_9.html

4.       பத்ரியின் பதிவு எதிர்பார்த்ததை விடவும் வேகமாகப் பற்றிக் கொள்ள, ஜெயமோகன் அதற்கு ஆதரவு போலத் தொனிக்கும் வகையில் ‘வாக்குமூல பாணியில் ஒரு பதிவை எழுதினார்.  அதை இங்கே வாசியுங்கள் http://www.jeyamohan.in/67150

5.       ஜெயமோகன் வழக்கம் போல் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் வேறு சிலரையும் காட்டிக்கொடுத்திருந்தார்.  முற்போக்கு பிராமணர்கள் (பீப் பிராமணர்கள்), வடுகர்கள் என்று அந்தப் பட்டியல் தொடர்கிறது.  ‘இதற்குப் பதில் சொல்லவா? என்று முகநூலில் தேர்தல் நடத்தி ராஜன் குறை கிருஷ்ணன் எழுதிய பதிவுக்கான சுட்டிகள் இவை https://www.facebook.com/notes/rajan-kurai-krishnan/பத்ரியார்-புலம்பலும்-ஜெயமோக-வியாக்கியானமும்/914324548580043?p


இந்த வரிசையில் இன்னும் நிறைய பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.  வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்களும் பேச ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.  யார் யாரெல்லாம் முன்வருகிறார்கள் என்று பார்க்கலாம்.  ஒவ்வொருவராய் வர வர அவற்றிற்கான சுட்டிகளை இங்கே தருவேன். 

போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் என்றாலே இது தானே அர்த்தம்!

Comments

Jonathan said…
தொடர்ந்து படித்து வருகிறேன். அடுத்தடுத்த பதிவுகளை எதிநோக்கி இருக்கிறேன்.
நன்றி
Anonymous said…
கடவுள் தன் போல மனிதனைப் படைத்தார் என்பது தான் அந்தப் படமா? ரசித்தேன்.

றெமிஜீயஸ் பெர்னாண்டோ
poornam said…
எனக்குத் தெரிந்த நியாயங்களையும் உண்மைகளையும் பதிந்திருக்கிறேன்.
http://poornam11.blogspot.in/2014/12/blog-post.html

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக