Skip to main content

Posts

Showing posts from September, 2019

இளையராஜாவை வரைதல் - 6

ஒரு நாள் மட்டமத்தியானம் ஒரு மணி போல இருக்கும். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகரை தொலைபேசியில் அழைத்தேன். ‘சார், ராஜா பாடல்களை ரொம்பச் சரியாகக் காட்சிப்படுத்திய இயக்கு நர்களைச் சொல்ல முடியுமா?’ என்று கேட்டேன்.
திரையிசைப் பாடல்கள் குறித்து ஆய்வு செய்தவர். அவரது புத்தகமொன்று மதுரைப் புத்தகக் கண்காட்சியையொட்டி இன்றைக்கு வெளியிடப்படுகிறது. ‘கொஞ்சம் நேரம் கொடுக்கிறீர்களா? ஒரு முறை பாடல்களைப் பார்த்து விட்டு சொல்கிறேனே’ என்றார்.
கொஞ்ச நேரம் என்பது இரண்டு நாட்கள் ஆனது. அவரிடமிருந்து தொலைபேசி இல்லை. பின்னொரு மதியம் அழைத்தார். அழைத்தவர், தயங்கித் தயங்கி, ‘என்ன சார் இது? ராஜாவின் ஒரு பாடலைக்கூட யாரும் சரியாகக் காட்சிப் படுத்தவில்லையே. படம் பிடிக்கிறேன் என்று ஏதேதோ பண்ணி வைத்திருக்கிறார்கள்’ என்றார். அவரது குரலில் அவ்வளவு ஆற்றாமை.
‘பாலு, மணி என்று தேர்ந்து தேர்ந்து பார்த்து விட்டேன். எல்லா காட்சிகளும் மொக்கையாகவே தெரிகின்றன’ என்றார்.
‘ராஜா பாடல்கள், திரைக் காட்சிகளை விட்டு வெளியேறி வருடங்கள் ஆகின்றன சார்’ என்று நான் அவரைத் தேற்றினேன்.
ராஜா பாடல்களின் வெகுஜனத்தன்மை என்று நான் சொல்வதற்கு …

இளையராஜாவை வரைதல் - 5

‘திரைப்படம், ஏழாவது கலை வடிவம்’ என்பது பாரம்பரிய கருத்து.   கதை, நாடகம், ஓவியம், இசை, கவிதை, நடனம் போன்ற ஆறு கலைவடிவங்களையும் தன்னுள் கரைத்த ஏழாவது கலை.  திரைப்படம் பார்க்கையில் ஏற்படும் அனுபவம் இந்த ஆறு கலை வடிவங்களின் கலவையில் உருவாவது அல்லது ரசாயனத்தில் உருவாவது.  

ஆனால், இந்த ஆறு கலைவடிவங்களும் தத்தமளவில் தனித்து இயங்கக்கூடியவை தான் என்பதும் நமக்குத் தெரியும். திரைப்படம் பார்க்கும் தருணத்தை மீறி, அதில் இடம்பெற்றுள்ள ஆறு கலை வடிவங்களும் தனித்தனியாக அதிலிருந்து விலகி நின்று செயல்பட முடியுமா என்றால், அதற்கான சாத்தியங்கள் நிரம்பவே உண்டு என்பதற்கு மிக வலிமையான சான்று, இளையராஜா பாடல்கள்.  தான் இடம்பெற்ற திரைப்படங்களின் உதவியின்றி, அவை தனித்து தங்களை ஒரு வகைமையாக வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன.
இதற்கு வேறு சில உதாரணங்களும் நம்மிடம் உண்டு.  ஒரு திரைப்படத்தின் உரையாடல் வெகுஜன அரங்கில் தனித்து நின்று கொண்டிருக்க முடிகிறது.  கட்டபொம்மன் திரைப்பட வசனம் இன்றைக்கும் தனித்து இயங்கி வருகிறது.  சமீபமாக வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் இந்தத் தன்மையை அடைந்துள்ளன.  நாடகத்திலும் இதற்கான உதாரணங்கள் உண்டு. …