ஜெயமோகனுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்தி … . வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெகு சில சமயங்களில் மட்டுமே சரியான நபர்களுக்கு சரியான விருதுகள் வழங்கப்படுகின்றன. இது இந்திய விருதுகளுக்கு மட்டுமல்ல, உலக விருதுகள் பலவற்றிற்கும் பொருந்தும். எனது கணிப்பின் படி, ஜெயமோகன், இலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் எந்தவொரு விருதையும் பெற்றுக் கொள்ளும் தகுதி வாய்ந்தவர். மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர். நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான அத்தியாயத்தை அடையாளப்படுத்துகிறவர். அவருடைய எழுத்து முறையும், உழைப்பும் ஏராளமான இளைய எழுத்தாளர்களுக்கு முன் மாதிரியாய் திகழ்கின்றன என்பதை நான் பார்க்கிறேன். சாகித்ய அகாடமி விருது அவருக்கு ஏன் இது வரையில் அறிவிக்கப்படவில்லை என்பது கூட எனது கேள்விகளில் ஒன்று. எனவே பத்மஶ்ரீ வழங்கப்படுவது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. ஆனாலும் … இந்த விருதை தன் மேலே போர்த்திக் கொள்வதில் ஜெயமோகனுக்கு ஒரு சங்கடம் இருப்பதாக அவர் கற்பனை செய்கிறார். இந்தக் கற்பன...