Skip to main content

Posts

Showing posts with the label நாட்டுப்புறவியல்

கரகாட்டம், ஜல்லிக்கட்டு, மகாபாரதம்

அன்புள்ள தர்மா , நீங்கள் எழுதிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.  அந்தச் சின்னப் பெண் கெளசல்யா பற்றி எழுதியிருந்த கட்டுரை அற்புதமாக இருந்தது.  நல்ல கட்டுரைகளை வாசித்து முடித்ததும் ஒரு கர்வம் வருமே அது எனக்கு இந்தக் கட்டுரையை வாசித்ததும் ஏற்பட்டது.  இந்த வகையாய் எழுதுகிறவர்கள் தமிழில் அருகிப் போய்விட்டார்கள்.  அதனால் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கட்டுரையில், கலை வடிவங்கள் எப்படி தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகி வந்திருக்கின்றன என்பதை இயல்பானக் காரியம் போல விவரித்த தொனி என்னை ஆச்சரியப்படுத்தியது.  உடனே, இதை, எளிதில் உணர்ச்சிவசப்படும் தமிழ் மனம் எப்படி எதிர்கொள்ளும் என்று அறிவதற்கும் ஆசையாக இருந்தது.  குறிப்பாக, தமிழ் மொழி பற்றியும், அதன் தூய்மை பற்றியும், ஒரிஜினாலிட்டி பற்றியும் அலட்டிக்கொள்ளும் தமிழ் மனம் இது கண்டு பதறாதா என்று நினைத்தேன். இதே காலகட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றியும், பொங்கல் கொண்டாடுவது பற்றியும், தமிழ் புத்தாண்டு எது என்பது பற்றியும் உருவான கொந்தளிப்புகள் கண்டு நான் மன...

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

யாராவது இருக்குறீர்களா?

மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையில், நாட்டுப்புறவியல் முதுகலைப் ( M. A. in Folklore ) பாடப்பிரிவிற்கான 2015-16ம் வருட மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறவியலில் முதுகலை என்ற பாடத்திட்டம் 1987ம் வருடம் பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரியில் தொடங்கப்பட்ட போது தமிழ் நாட்டில் எல்லோருக்கும் ஆச்சரியம்.   இப்படியும் ஒரு படிப்பா? ஏராளமான கேள்விகள், கிண்டல்கள், பொறாமை, ஏச்சுகள் - எல்லாமே அதீத வகை தான்! ·          ஒரு கிறிஸ்தவ கல்வி நிறுவனம் நாட்டுப்புறவியலை முன்னிறுத்துவதில் 'பன்னாட்டு அரசியல்' இருப்பதாய் சொல்லிக்கொண்டிருக்கும் இந்துத்துவர்கள்... ·          அதையே இன்னொரு தொனியில் 'அய்யய்யோ கிறிஸ்தவ நிறுவனத்திற்குள் பேய்களும் பிசாசுகளுமா?' என்று கூக்குரல் எழுப்பும், கழுத்தில் சிலுவை அணிந்த கிறிஸ்தவ அடிப்படைவாதிகள்... ·          'இது எங்க ஏரியா உள்ள வராதே..' என்று மார்தட்டிய நாவாவினர்... ...