Skip to main content

Posts

Showing posts with the label கலகக்காரர்களும் எதிர்க்கதையாடல்களும்

12 மேனாட்டார் பார்வையில் கம்மா இனமக்கள் வாழ்வியல்

12 மேனாட்டார் பார்வையில் கம்மா இனமக்கள் வாழ்வியல் முனைவர் . சி . பி. கோபால்  கம்மா , காபூ அல்லது ரெட்டி , வெலமா மற்றும் தெலகா ஆகியோரைக் கூற வந்த பிரான்ஸிஸ் இந்த நான்கு பெரிய ஜாதிகளும் தோற்றத்திலும் பழக்க வழக்கங்களிலும் ஒன்றையொன்று ஒத்திருந்தன என்றும் அனைத்து ஜாதிகளும் திராவிடத்திலிருந்தே வந்தன என்றும் கூறுகிறார் . ஆரம்ப காலத்தில் வீரர்களாகத் திகழ்ந்த இவர்கள் தற்போது விவசாயிகளாகவும் , வியாபாரிகளாகவும் , வடக்கே சிலர் ஜமீன்தார்களாகவும் உள்ளனர் . சத்திரியர்கள் என்று சொல்லப்படுகின்ற ராஜூஸ் என்ற ஜாதியினர் காபூஸ் , கம்மாஸ் மற்றும் வெலமாஸ் என்ற ஜாதிகளில் இருந்து பிரிந்து இருக்கலாம் .   மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படும் கம்மாக்களும் காபூக்களும் தெற்கு விஜய நகர போர்ப்படையினைப் பின்பற்றி வந்து நாயக்கர் கவர்னர்கள் நிலை நிறுத்திக் கொண்ட போதே இம்மாவட்டங்களில் தங்கி விட்டனர் . அவர்கள் வீட்டுப் பெண்கள் மற்ற ஜாதிப் பெண்களை விட கண்டிப்புக் குறைந்தவர்களாக இருந்தனர் . அதிலும் கம்மாக்களின் ஒரு பிரிவு மகளிர் முஸ்லீம்களைப் போல் கோஷா அணிந்து தனித்து இருந்தனர் . கம்மா , ...

11 செங்குந்தர் வாழ்வியல் முறைகள்

11 செங்குந்தர் வாழ்வியல் முறைகள்  க . முத்துவேல்  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்து வரும் செங்குந்தர்கள் 32 பங்காளிகள் என்ற கட்டுக்குள் இருந்து விரிவாகி மொத்தம் 145 தலைக்கட்டுகள் என்ற எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர் . செங்குந்தர் பங்காளிகள் என்ற அமைப்பில் 32 பேர் இருந்து வருகின்றனர் . இவர்கள் நான்கு பிரிவாகப் பிரிக்கப் பெற்று 1 வது கரை , 2 வது 3 வது கரை , 4 வது கரை என்று அழைக்கப் பெறுகின்றனர் . 1 - வது கரையில் 2 பங்காளிகளும், 2 - வது கரையில் 8 பங்காளிகளும் , 3 - வது கரையில் 12 பங்காளிகளும், 4 வது கரையில் 8 பங்காளிகளும் இருந்து வருகின்றனர் . செங்குந்தர் உறவின்முறை என்ற அமைப்பில் , திருமணம் ஆன செங்குந்தர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் . செங்குந்தர் உறவின் முறை அமைப்பை நிர்வகிக்க நாட்டாண்மை , காரியக்காரர் , கணக்கப்பிள்ளை என மூவர் நியமிக்கப்படுகின்றனர் . இவர்கள் மூவரும் சமுதாயத்தில் திகழ்கின்ற அனைத்துச் செயல்களையும் முன்னின்று நடத்துகின்றனர் ,   செங்குந்தர்களது குலத்தொழில் நெசவுத் தொழிலாகும் . ஆனால் திருப்பரங்குன்றத்தில் இத் தொழிலில் யாரும் ஈடுப...

9 காணி வீடு

9     காணி வீடு  டி . டி. ரமேஷ் ராஜா வீடு என்பது ஒரு கனவாக , ஒரு சிலருக்கு கோவிலாக . அரணாக மேலும் சிலருக்கு ஒரு லட்சியமாகக் கூட விளங்குகிறது . இவ்வாறான மதிப்பீடுகள் சமவெளியில் நேர்கோட்டில் இயங்கும் நமக்கு பொதுவானது . ஆனால் காணி மக்களுக்கு வீடு என்பது தற்காலிகமான ஒன்று மட்டுமே . நம் வாழ்வு முழுவதுமாக வீடு என்ற குறியீட்டால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சம காலத்தில் , காணி வீடு மாத்திரம் மதிப்பீடுகளை உதறி நிற்பதன் அர்த்தம் என்ன? காணி வீடு என்ன சொல்கிறது .   காணிக்காரர்கள்: தமிழ்நாட்டின் தென்மேற்கே காணப்படும் பொதிகை மலையில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் 'காணிக்காரர்கள்' .   தற்சமயம் இவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அகத்தியர் காணி குடியிருப்பு , சின்ன மயிலாறு , பெரிய மயிலாறு , சேர்வலாறு , இஞ்சிக்குழி ஆகிய இடங்களிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை , விளவங்கோடு , கற்குளம் ஆகிய இடங்களிலும் வாழ்கின்றனர் . இதில் 'தற்சமயம்' என்ற சொல் காணி மக்களின் செங்குத்துக் கோட்டியக்கத்தை அர்த்தப்படுத்துகிறது .   இது சமவெளியின் நேர்கோட்டியக்கத்திற்கு எதிரானது . பொதிக...

8 வீட்டுப்பெயர்கள்

8   வீட்டுப்பெயர்கள் மொ . இரவிக்குமார்  கேரள மாநிலம் பாலக்காடு வட்டாரத்தில் கோழிப்பாறைக்கு மேற்கே இரண்டு கி . மீ. தொலைவில் எருமைக்காரனூர் என்ற கிராமம் அமைந்துள்ளது . கிறித்தவர்கள் அதிகமாக வாழக்கூடிய ஊரிது . எருமைக்காரனூர் என்ற ஊர் எவ்வாறு உருவாகியது . எருமைக்காரன் குடும்பம் என்று குடும்பத்திற்கு எப்படிப் பெயர் ஏற்பட்டது . ஒரு குடும்பப் பெயர் பல குடும்பப் பெயர்களாகி எவ்வாறு மாற்றமடைகிறது . இங்கு வாழக்கூடிய மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் , போன்ற பல வினாக்களுக்கு விடை காணும் நோக்கத்தில் இக்கட்டுரை அமைகிறது .   இவ்வட்டாரத்தில் வாழக்கூடிய தமிழ்க் கிறித்தவர்கள் , குறிப்பாக எருமைக்காரனூரில் வாழக்கூடியவர்கள் 250 / 300 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி , திண்டுக்கல் , தஞ்சாவூர் , மதுரை போன்ற ஊர்களிலிருந்து பஞ்சம் பிழைப்பதற்காக வந்தவர்கள் . ‘பரியம் போடுதல் ’ என்ற நிகழ்ச்சியின் மூலம் இதை அறிய முடிகிறது .   திருமணத்தின் போது பரியம் (பரிசம்) போடுதல் என்ற நிகழ்ச்சி பெண் வீட்டில் வைத்து நிகழ்கிறது . அப்போது அந்நிகழ்ச்சியில் பெண் வீட்டுப் பெரியவர்களும் , மாப்பிள்ளை வீட்டுப...

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும...