Skip to main content

Posts

Showing posts with the label தலித்

மரணம் - தண்டனை - ஆணவம் - ஜனம்

1 ‘பெரியார் பிறந்த மண்’ என்று சொல்கிற எல்லோருக்கும் தெரியும் பிறப்பின் அடிப்படையில் எதுவும் தீர்மானிக்கப்படுவது இல்லை என்று.  பிறகு ஏன் இப்படி தொடர்ந்து சொல்லப்படுகிறது? உடுமலை சங்கர் படுகொலைக்கான நீதிமன்றத் தீர்ப்பின் வெற்றிக் களிப்பையும் அது சார்ந்த சவடால்களையும் கடந்து ஒரு சமநிலைக்கு வந்திருப்போம் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். சங்கர் கொலை வழக்கில், ஆறு பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிமன்றம், மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறது - இந்தத் தண்டனை ‘அந்தப்’ படுபாதகச் செயலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. எது படுபாதக செயல் என்பதில் சட்டப்புத்தகங்களுக்கு  குழப்பங்கள் இல்லை.  கொலை, கொள்ளை போன்ற செயல்கள் படுபாதகங்கள்.  அதிலும், அவற்றைத் திட்டமிட்டு செய்திருந்தால், மாபாதகம்!  அதிக பட்ச தண்டனை உண்டு. சங்கர் படுகொலையிலும் நீதிமன்றம் வழங்கியிருக்கிற மரண தண்டனை, அந்தப் பாதகத்திற்குத் தானேயொழிய, அதன் பின்னிருக்கிற சாதி ஆணவம் என்ற காரணத்திற்காக அல்ல.   இதை இப்படி விளங்கிக் கொள்ளலாம் - பாதகத்தில் முடியாத சாதி ஆணவங்களுக்கு சட...

இன்னொரு வாசகப் பதிவு - நான் ஏன் தலித்தும் அல்ல? - சீமா செந்தில்

எல்லாவற்றின் போதாமைகளையும் ஆய்ந்து தெளிவது தான் பூரணத்தின் பாதைக்கான திறவுகோல் . பாதைக்கான திறவுகோல் தான் ...பயணம் நெடிது ......கண்ணுக்கெட்டா...தூரத்தில் அல்லவா அது காத்துக் கொண்டிருக்கிறது ?  " தலித் என்பதை அரசியல் பிரக்ஞையாக விளங்கிக்கொண்ட அடுத்த நிமிடமே இந்தக் கேள்வியும் அவர்களுக்குள் வந்து விடுகிறது . ஏன் நான் தலித்தும் அல்ல ? தலித் சொல்லாடல் , எவ்வளவுக்கு அன்னியோன்யமானதோஅவ்வளவுக்கு வெறுக்கக் கூடியதும் .அந்த வகையில் தலித் அரசியலுக்கும் உடலுறவிற்கும்பெரிய வித்தியாசமில்லை ;இரண்டிலும் ஞாபகங்கள் தான் கிளர்ச்சியைத் தருகின்றன ;அதே போல "போராட்டம் "முடிந்ததும் தனித்தனியே அவரவர் அவரவர் 'உள்ளே 'சுருங்கிக்கொள்ள வேண்டியது தான் .இரண்டுமே தனிமையையும் வெறுமையையும் தான் பெருக்குகின்றன" என்று முன்னுரையிலேயே முகத்தில் அறைந்து விட்டு தன் வேகத்தை நிறுத்திக் கொள்ளாமல் கிட்டத்தட்ட முன்னூறு பக்கங்கள் பயணிக்கிறது இந்நூல் .  இதன் பேசுபொருள் கால காலமாக நம்மை கணந்தோறும் அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு அரூபமான அபாயம் .கணந்தோறும் வாசனைப் பூச்சுக்களோடு வளைய வரும் ஒரு அரு...

எனக்குள்ளிருக்கும் ராஜதந்திரியைக் கொல்வது எப்படி?

எனக்குள்ளிருக்கும் ராஜதந்திரியைக் கொல்வது எப்படி? 2016 தேர்தலின் ஆகப்பெரிய பிரச்சினையே ‘சூழ்ச்சி’ தான் என்று மாறிவிட்டிருக்கிறது.     திமுக தலைவர் கருணாநிதியைச் சொன்னது போக, நம் எல்லோருக்குள்ளும் ஒரு ‘ராஜதந்திரி’ ஒளிந்து கொண்டிருக்கிறானோ என்று இப்பொழுது சந்தேகம் வருகிறது. வழக்கமாய் இந்தத் தேர்தல் சூழ்ச்சிகளை திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளே செய்து வருவதாகப் பேச்சிருக்கும்.  ஒருவரை ஒருவர் சேறு வாரி இறைப்பதற்கும், சிக்கலில் மாட்டி விடுவதற்கும், அதன் மூலம் பலவீனப்படுத்துவதற்கும் சூழ்ச்சிகள் நடப்பதாக விளக்கங்கள் சொல்லப்படும் (விளக்கங்கள் மட்டும் தான் சொல்லப்படும்!).  புலனாய்வுப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் தான் நமக்கு இந்தத் தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பவை.  நாம் சூழ்ச்சிக் கதைகளின் வாசகர்களாக மட்டுமே தான் இருந்தோம்.    ஆனால், இந்த முறை, சூதாட்டத்தில், வாக்காளர்களாகிய நாமும் ஒரு கையாகச் சேர்ந்திருக்கிறோம். வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் பணம் எந்த வழிகளில் பயணம் செய்கிறது; யார் யார் எவ்வளவு பணத்தை செலவு செய்ய முடிவு செய்தி...

எழுதியெழுதி அழித்தல்

‘நீ என்ன சாதின்னு யாராவது கேட்டா, மூஞ்சில அடிக்கிற மாதிரி ஒரு பதில் சொல்லனும். என்ன சொல்லலாம்’ என்றான், முன்பொருமுறை திருமாறன். சிறுசிலிருந்து நண்பன்.  நாடக நடிகன்.  பெரியார் ஆதரவாளன்.  திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டான்.  எங்கிருக்கிறான் … இருக்கிறானா என்று கூட யாருக்கும் தெரியாதவன். அவன் கேட்ட கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை. ‘சரி, நீ என்ன சொல்லுவ?’ என்றான். ‘அப்படி யாராவது கேட்டா, நான் உண்மைய சொல்லுவேன்.  அதுவே மூஞ்சில அடிச்சா மாதிரி தான் இருக்கும்’. அன்றைக்கு, அவன் கண்களில் பொறாமை தெரிந்தது.  என் ‘சாதி மறுக்கப்பட்ட’ அடையாளம், கேட்கிறவர் மூஞ்சை பெயர்க்கும்.  ஒரு தலித்தாக பிறந்ததில், நான் அனுபவித்த ஒரே சலுகை இது தான்!   ***** தொடர்ச்சியான சாதிக் கொலைகளால் எல்லாருமே பதறிப் போயிருக்கிறோம்.   நிறைய பேருக்கு உயிரோடிருப்பது குறித்த பயம்; பலருக்கு இன்னும் உயிரோடு இருக்கிறோமே என்ற கசப்பு.  குழம்பிப் போயிருக்கிறது சூழல். ‘நான் உயர்சாதியைச் சார்ந்தவள்;  ஆனால், ஆணவக் கொலைய...