Skip to main content

Posts

Showing posts with the label நான் ஏன் தலித்தும் அல்ல? நூல் விவாதம்

நான் ஏன் தலித்தும் அல்ல? - நூல் அறிமுகம், சுரேஷ் பிரதீப்

'நான் ஏன் தலித்தும் அல்ல?' நூல் குறித்து சுரேஷ் பிரதீப் எழுதியிருக்கும் அறிமுகம் அப்புத்தகத்தின் சாரத்தை சுருக்கமாக தருகிறது.  தொடக்க நிலை வாசகர்கள் அந்த நூலை தயக்கமின்றி அணுகுவதற்கு இக்கட்டுரை உதவும்.   அந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள், குறிப்பாக, தலித் அடையாள மறுப்பும், தவிர்க்கவியலாத திணிப்பும்; தலித் அரசியலாளர் - தலித் காதலர்; விடலை - குடும்பன்; தலைகீழாக்கம் குறித்த விவாதங்கள்; போலச்செய்தலும் கலை வடிவங்களும் நகைச்சுவையும்; திரும்பச்செய்தலும் வன்முறையும்; திருவிழாவும் கலவரமும் போன்றவை இன்னமும் உரையாடலாக மாறியிருக்கவில்லை.   தமிழ்ச் சூழலில் அப்படியெல்லாம் உடனடியாக எதிர்பார்ப்பது அதிகம் தான்.  ஆனால்,  புத்தகம் வெளிவருவதற்கு முன்னால் தவிர்க்கவியலாத சூழலில் இந்நூலுக்கான விமர்சனத்தை நானே கூட எழுதுவேன் என்று கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றும் காலகட்டம் இன்னமும் கனியவில்லை என்று தான் நினைக்கிறேன்.   இன்னும் கூட நான் காத்திருக்கிறேன். டி. தருமராஜ் இனி சுரேஷ் பிரதீப் கட்டுரை: டி. தருமராஜின் "நான் ஏன்...

தலித் அரசியல் தலைவர்கள் யானைப் பாகன்களா?

'நான் ஏன் தலித்தும் அல்ல?' -  நூல் உரையாடல் - 1 1.  கவசத்தை இழக்க முடியுமா ? - டி. தருமராஜிடம் சில கேள்விகளை முன்வைத்து .... ‘ நான் ஏன் தலித்தும் அல்ல ’ என்ற நூலுக்கான ஏற்புரையில் டி . தருமராஜ் இத்தலைப்பு ஏன் வைக்கப்பட்டது என இப்படி விவரிக்கிறார் . இந்நூல் நட்பும் காதல் பற்றி விவரிப்பதாகவும் , நட்புக்காக ஏங்குவதாகவும் , நட்பு கொள்பவருக்கு தன்னுடைய தலித் அடையாளம் தொந்தரவாக இருப்பதாகவும் , அதனால் என்னுடைய கடைசி ‘ கவசமான ‘ தலித் என்ற அடையாளத்தை இழப்பதற்கும் தயாராக இருப்பதாகவும் என கூறி நட்புக்கு அழைப்பு விடுக்கிறார் . அதனடிப்படையில் தான் தலைப்பு வைக்கப்பட்டது என விளக்கிறார் . இதில் என்னுடைய கேள்வியெல்லாம் ஒருவர் தன் தலித் அடையாளத்தை இழக்க முடியுமா என்பது தான் . தலித் என்ற அடையாளம் நட்பு கொள்பவரை தொந்தரவு செய்கிறதோ இல்லையோ , என்னை தொந்தரவு செய்வதாக உணர்கிறேன் . பொதுவெளியில் எந்த வேடமேற்றிருந்தாலும் , என்ன செய்தாலும் , எங்கு சென்றாலும் , நட்பு , காதல் போன்ற எந்த உறவேற்க விரும்பினாலும் தலி...