Skip to main content

Posts

Showing posts with the label அயோத்திதாசர்

‘தாய்மொழி’ என்ற ஏமாற்று வேலை

நேற்றைய சென்னைப் பல்கலைக்கழக கருத்தரங்கம், ஒரு சுவராஸ்யமான தகவலோடு ஆரம்பித்தது.  Endangered Languages என்ற பதத்தை எப்படி தமிழ் படுத்தினார்கள் என்ற கதையை ஒரு பேராசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார்.  முதலில், ‘அழிமொழி’ என்று தான் யோசித்தார்களாம், ஆனால், அது வினைத்தொகையாக இருக்கிறது என்பதால் ‘அழிநிலை மொழி’ என்று மாற்றி விட்டனர்.  வினைத்தொகைகள் எப்பொழுதுமே விபரீதமானவை - பேராசிரியர்களைப் போல. அந்த விபரீதம் பற்றியே நான் மதியத்தில் பேசுவதாக இருந்தேன். சந்ரு, தனது கலை பற்றிய பார்வைகளை செப்பனிட்டுக் கொள்வதற்கு பழங்குடி மக்கள் எவ்வளவு தூரம் அனுசரணையாய் இருந்தார்கள் என்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.  ஒரு பழங்குடியின பெரியவர், யானைக்கூட்டத்தைக் காட்டி, ‘அது எங்க பாட்டி தான்’ என்று சொன்னதை, தான் ஓவியமாக வரைந்ததை பற்றி பேசினார்.  ஒரு பழங்குடியினத்தின் மொழி அழிகிறது என்றால், அதன் ‘லேண்ட்ஸ்கேப்’ அழிகிறது என்றார்.  இந்த விஷயம் எனது மதிய பேச்சுக்கு நெருக்கமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, பேராசிரியர் கல்யாணி, இருளர் பழங்குடியினரோடு தான் மேற்கொண்டிருக்கும் மனிதவுர...

அயோத்திதாசர் ஆகி வந்த கதை

அயோத்திதாசரின் பெளத்தத்தை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு இரண்டு நிகழ்வுகளைத் தெரிந்திருத்தல் அவசியம் - ஒன்று, அயோத்திதாசர் வரலாற்றில் செயல்பட ஆரம்பித்த தருணம்; இரண்டாவது, அயோத்திதாசர் ஆகி வந்த பின்புலம். இதில் இரண்டாவதான, அயோத்திதாசர் ஆகி வந்த கதையை முதலில் பார்க்கலாம்.  சும்மா ஒரு மாற்றத்திற்காகத் தான்.  எல்லாவற்றையும்  முதலிலிருந்தே தொடங்க வேண்டுமா என்ன? அயோத்திதாசர் கொஞ்சம் பழைய காலத்து மனிதர்.  பழைய காலத்தின் கடைசி மனிதர் என்று கூட சொல்லலாம்.  கதை போலச் சொல்லி நாம் கேட்டிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தான் அவர் கல்வி கற்றிருக்கிறார்.   அதாவது தமிழ். தமிழ் என்றதும் இலக்கியத்தை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சேர்த்தே கற்றுத் தந்திருக்கிறார்கள்.  மொழி வழி விரியும் வாழ்க்கையை.  தமிழ் எழுத்துக்களுக்குப் பின்னால் இலக்கணம் மட்டுமல்ல, ஒரு கச்சிதமான கருத்தியலே இருப்பதாக அக்காலங்களில் நம்பியிருக்கிறார்கள்.  பின்னாட்களில், அமுத எழுத்து - நச்சு எழுத்து என்று அயோத்திதாசர் பேசுவது அனைத்தும் அத்திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றது தான்.   ...

அயோத்திதாசரும் இளையராஜாவும்

கோட்டிங்கன் வந்ததிலிருந்தே கஜீ (கஜேந்திரன் அய்யாதுரை),  ‘Trou வுக்கு போக வேண்டும் தர்மு.  உனக்கு அது பிடிக்கும்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.   Trou ஒரு மதுக்கூடம்.  ஜெர்மன் மொழியில் ‘துளை’ என்று அர்த்தம்.  நேற்று அங்கே போயே விட்டோம். அது ஒரு நிலவறை.  தரையிலிருந்து கீழிறங்கிய ஒரு துளையின் வழியாக அதற்குள் நுழைய வேண்டியிருந்தது.   கருங்கற்களால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகள் நாலாபக்கமும் விரிந்து செல்கின்றன.    ‘இரண்டாம் உலகப் போரின் போது, நேச நாடுகளின் விமானத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, கோட்டிங்கன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பதுங்கியிருந்த இடம் இது’ என்று உள்ளூர் வரலாறு சொன்னார்கள்.   ஜெர்மனியெங்கும் பியர் வெள்ளமாய் பாய்கிறது.  நேற்றைக்கு கோதுமையிலிருந்து வடிக்கப்பட்ட பியரை (weisenbier) வாங்கி வாங்கி குடித்துக் கொண்டிருந்தோம். பேச்சு அங்கே இங்கே சுத்தி விட்டு, அயோத்திதாசரில் வந்து நிலைகொண்டது.   கஜீ, அயோத்திதாசரின் தமிழ் பெளத்தம் என்ற அவரது நூலை எழுதிக் கொண்டிருக்கிறார்.  நானும் அயோத...

போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் – 7 அயோத்திதாசர் பிராமணருக்குத் திரும்பச்செய்தார்!

சாதியமைப்பு குறித்த விவாதங்கள் தவிர்க்க முடியாத வகையில் அதன் இரு முனைச் சாதிகளைச் சுற்றியே நடப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.   லூயி டூமோ மற்றும் மிஷல் மோஃபா போன்றோரால் 'புனிதம் - தீட்டு' / 'சுத்தம் - அசுத்தம்' என்ற இரட்டை எதிர்மறை சார்ந்த விளக்கங்களே முன்னெடுக்கப்பட்டன. பிராமணர்களும் பஞ்சமர்களுமே அவ்விரு எதிர்மறைகளின் ஸ்தூல சாட்சியங்கள்.   அதே போல், சாதியமைப்பையும் அதன் படிநிலை வரையறைகளையும் 'அந்தஸ்து' , 'சமூக மரியாதை' போன்ற காரணிகளோடே அம்பேத்கர் விவாதிக்கிறார்.   அவரும் ‘ அதிமரியாதை ’ சமூகமாக பிராமணரையும் , ‘ அதிதூஷண ’ சமூகமாக 'தீண்டத்தகாதோரையுமே' விவாதப் புள்ளிகளாகக் கொண்டிருந்தார்.   சாதியமைப்பு தொடர்பான ஆய்வுகளின் இத்தகைய பழகிய சட்டகத்தின் போதாமையை சில ஆய்வாளர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர்.   கெயில் ஓம்வெத் இதையே வேறு வார்த்தைகளில், சாதியமைப்பு குறித்த உரையாடல்கள் சாதியைப் பொருளாதாரக் காரணியுடன் இணைத்து யோசிக்கும் வகையில் நடத்தப்படவேண்டுமென்பதை தன் விருப்பமாக   வெளிப்படுத்தியிருந்தார்.   சாதி எவ்வாறு கருத்துநிலையாகச...