Skip to main content

Posts

Showing posts with the label மொழி

‘தாய்மொழி’ என்ற ஏமாற்று வேலை

நேற்றைய சென்னைப் பல்கலைக்கழக கருத்தரங்கம், ஒரு சுவராஸ்யமான தகவலோடு ஆரம்பித்தது.  Endangered Languages என்ற பதத்தை எப்படி தமிழ் படுத்தினார்கள் என்ற கதையை ஒரு பேராசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார்.  முதலில், ‘அழிமொழி’ என்று தான் யோசித்தார்களாம், ஆனால், அது வினைத்தொகையாக இருக்கிறது என்பதால் ‘அழிநிலை மொழி’ என்று மாற்றி விட்டனர்.  வினைத்தொகைகள் எப்பொழுதுமே விபரீதமானவை - பேராசிரியர்களைப் போல. அந்த விபரீதம் பற்றியே நான் மதியத்தில் பேசுவதாக இருந்தேன். சந்ரு, தனது கலை பற்றிய பார்வைகளை செப்பனிட்டுக் கொள்வதற்கு பழங்குடி மக்கள் எவ்வளவு தூரம் அனுசரணையாய் இருந்தார்கள் என்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.  ஒரு பழங்குடியின பெரியவர், யானைக்கூட்டத்தைக் காட்டி, ‘அது எங்க பாட்டி தான்’ என்று சொன்னதை, தான் ஓவியமாக வரைந்ததை பற்றி பேசினார்.  ஒரு பழங்குடியினத்தின் மொழி அழிகிறது என்றால், அதன் ‘லேண்ட்ஸ்கேப்’ அழிகிறது என்றார்.  இந்த விஷயம் எனது மதிய பேச்சுக்கு நெருக்கமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, பேராசிரியர் கல்யாணி, இருளர் பழங்குடியினரோடு தான் மேற்கொண்டிருக்கும் மனிதவுர...

சாதி - மொழி – சமயம் 4: அடையாளங்கள் குறித்து அயோத்திதாசர்

அயோத்திதாசரின் சாதி – மொழி – சமயம் தொடர்பான கருத்துகளிலிருந்து நான் கீழ்கண்ட வாக்கியங்களைத் தருவித்துக் கொள்கிறேன்: நமக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதன் மூலமே உண்மையை நெருங்க முடியும். ' இலட்சணம் ', ' அந்தரார்த்தம் ', ' விவேக விருத்தி ', ' சாதித்தல் ' போன்ற தமிழ் கருத்தாக்கங்களை உருவாக்கிய தன்மை . மொழி குறித்து புதிய பார்வையை முன்மொழிந்தது ( சொற்கள் , வாக்கியங்கள் !). ' சாதி ' என்று நாம் நம்பிக்கொண்டிருப்பது கட்டுக்கதை என்ற வாதம் . பிராமணர்கள் திரிபு வாதங்களை ஏற்படுத்தினார்கள் என்ற தகவல் . இந்திய வரலாறு , பிராமணர்களுக்கு முன் , பின் என்று பார்க்கப்பட வேண்டியதன் அவசியம் . பிராமணியம் இந்திய சமூகத்தை எவ்வாறு தனது திட்டத்திற்குள் கொண்டு வந்தது என்ற யோசனை . பிராமணியமயமாக எதிர்ப்பு தெரிவித்த மக்கள் எவ்வாறு ' தீண்டத்தகாதவர்களாக ' மாற்றப்பட்டார்கள் என்ற விவரம் . பிராமணிய எதிர்ப்பு மட்டுமல்ல , பிராமணிய நீக்கமும் தேவை என்ற யோசனை . பிராமணிய நீக்கம் , வேறொரு தத்துவ...

சாதி - மொழி – சமயம் 3: அடையாளங்கள் குறித்து அயோத்திதாசர்

3 - மொழி : மொழி பற்றி அயோத்திதாசர் பேசக்கூடியவற்றை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ள முடியும் - மொழிகளின் வரிவடிவ உருவாக்கம் குறித்தவை , தமிழ் மொழியின் கட்டமைப்பு குறித்தவை .   இவ்விரண்டின் அடிப்படையில் தமிழ் பௌத்த மொழித் தத்துவமொன்றை கட்டமைப்பது போன்றவொரு செயல்பாட்டை அவருடைய எழுத்துகளில் பார்க்க முடிகிறது .   அயோத்திதாசரின் மொழி பற்றிய சிந்தனைகளை ‘ தமிழ் பௌத்த மொழித் தத்துவம் ’ என்று அழைப்பதில் காரணமிருக்கிறது .   பௌத்தத்தில் காணப்படும் மொழிக் கோட்பாடு என்று எழுதப்பட்டவைகளுக்கும் இவர் தரக்கூடிய விளக்கங்களுக்கும் பாரதூரமான வேறுபாடுகள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது . பௌத்த மொழிக் கோட்பாடு என்று பேசுபவர்கள் அனைவரும் பாலி மற்றும் சமஸ்கிருத மொழிகளை அடிப்படையாகக் கொண்டே விவாதிப்பதால் , தமிழை மையமாகக் கொண்டு விவாதத்தில் ஈடுபடும் இவருடைய சிந்தனைகள் ‘ பௌத்தம் ’ என்று அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து நிச்சயமாய் வேறுபட்டு நிற்கிறது .   எனவே , மொழியின் தோற்றம் குறித்தும் , ஒழுங்கமைப்பு ...