முதற் பீடிகை அஞ்ஞாடியைப் பற்றி ஏதொன்றும் பேசத்தொடங்குவதற்கு முன், அந்தப் பெரிய நாவலைப் 'பனுவலாக' மாற்றுவது குறித்து கொஞ்சம் சொல்லி விடலாம். அது நாவலாக, பூமணியின் படைப்பாக்கமாக இருந்து கொண்டிருக்கிற வரையில், அதைக் குறித்து பேசுவதில் சின்னதோ பெரியதோ ஒரு அசௌகரியம் இருந்து கொண்டே இருக்கிறது. எழுத்தின் சிடுக்குகளையும் உள்ளடங்கிய முரண்களையும் அடையாளப்படுத்துகையில் அதன் படைப்பாளியையே படுத்துவதாக விளங்கிக்கொண்டு விடுகிற சங்கடம் இது. அதே எழுத்தை சிலாகிக்கையிலோ சூழல் இன்னும் அபத்தமாக மாறி கூச்சத்தின் நுனியைத் தொட்டு விடுகிறது. நாவலை 'ஆக்கமாகக்' கருதி உரையாடுவதிலுள்ள இந்தத் தடுமாற்றங்களிலிருந்து தப்பித்து விடுவதற்கு, 'ரோலாண் பார்த்'ன் 'ஆக்கங்களும் பனுவல்களும் வேறு வேறானவை' என்ற யோசனையை பயன்படுத்திக்கொள்கிறேன். ஒரு படைப்பை, ஆக்கமாக அணுகுவதிலிருந்து விலகி, பனுவலாக எதிர்கொள்வதில் குறிப்பிடத்தகுந்த அனுகூலங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது படைப்பிற்கும் வாசகனுக்குமான உறவு. ஆக்கம், வாசகனை 'நுகர்வோன்' என்கிறது. இன்னும்...