Skip to main content

Posts

Showing posts with the label வாசகர் கடிதத்திற்கான பதில்

கரகாட்டம், ஜல்லிக்கட்டு, மகாபாரதம்

அன்புள்ள தர்மா , நீங்கள் எழுதிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.  அந்தச் சின்னப் பெண் கெளசல்யா பற்றி எழுதியிருந்த கட்டுரை அற்புதமாக இருந்தது.  நல்ல கட்டுரைகளை வாசித்து முடித்ததும் ஒரு கர்வம் வருமே அது எனக்கு இந்தக் கட்டுரையை வாசித்ததும் ஏற்பட்டது.  இந்த வகையாய் எழுதுகிறவர்கள் தமிழில் அருகிப் போய்விட்டார்கள்.  அதனால் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கட்டுரையில், கலை வடிவங்கள் எப்படி தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகி வந்திருக்கின்றன என்பதை இயல்பானக் காரியம் போல விவரித்த தொனி என்னை ஆச்சரியப்படுத்தியது.  உடனே, இதை, எளிதில் உணர்ச்சிவசப்படும் தமிழ் மனம் எப்படி எதிர்கொள்ளும் என்று அறிவதற்கும் ஆசையாக இருந்தது.  குறிப்பாக, தமிழ் மொழி பற்றியும், அதன் தூய்மை பற்றியும், ஒரிஜினாலிட்டி பற்றியும் அலட்டிக்கொள்ளும் தமிழ் மனம் இது கண்டு பதறாதா என்று நினைத்தேன். இதே காலகட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றியும், பொங்கல் கொண்டாடுவது பற்றியும், தமிழ் புத்தாண்டு எது என்பது பற்றியும் உருவான கொந்தளிப்புகள் கண்டு நான் மன...

சமையலறைகளில் தயாரிக்கப்படும் உணவு சாப்பிட மட்டுமே!

ஒரு கேள்வி : தலித்கள் , பழங்குடியினர் , மலைவாழ் மக்கள் , கிறிஸ்தவர்கள் , இஸ்லாமியர்கள் ஆகியோரின் சமையலறைகளில் மாட்டுக்கறி சமைக்கத்தானே படுகின்றன . இவர்களின் எண்ணிக்கை சுமார் 40% க்கு மேல் வருமே . அவர்கள் இந்தியர்கள் இல்லை என்றா சொல்கிறீர்கள் ... பெரும்பான்மை இந்துக்களின் சமையலறைகளில் ஏன் மாட்டுக்கறி இல்லை என்றுதானே தலைப்பு இருக்கவேண்டும் . B. R. Mahadevan 'இந்திய சமையலறையில் ஏன் மாடுக்கறி இல்லை?' என்ற கட்டுரையில் சில இடங்களை மௌனமாகக் கடந்திருக்கிறேன்.   வேண்டுமென் றே தான். அதில் ஒன்று, 'மாட்டுக்கறி மீதான விரோதம் வரலாற்றில் எப்பொழுது ஏற்பட்டது?' என்ற கேள்வி.   மற்றொன்று, 'இந்தியாவில் யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள் யாரெல்லாம் இல்லை' என்ற பட்டியல்.   உங்களது கேள்வி இந்த இரண்டாவது விஷயத்தை மையப்படுத் துகிறது . இனி விஷயத்திற்கு வருவோம். மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள், சாப்பிடாதவர்கள் என்ற தெளிவான பட்டியல் நம்மிடம் இல்லை.   இப்பொழுதும் இல்லை, எப்பொழுதும் இல்லை. தலித்துகள், பழங்குடியினர் ( மலைவாழ்மக்க ...