Skip to main content

Posts

இலங்கையில் சிங்களவர்! உலகெங்கும் ஈழத்தமிழர்!

(4-02-2017 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசியதன் எழுத்து வடிவம்.) வேற்றுமைகளே உண்மை / வேற்றுமைகளைக் கடந்த உண்மை நான் மிகவும் மதிக்கக்கூடிய மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி எழுதியுள்ள ‘இலங்கையில் சிங்களவர்’ என்ற நூல் சிங்களவரைப் பற்றிய மானிடவியல் நூல் அல்ல.   மாறாக இது ஒரு சர்ச்சையை உத்தேசித்து எழுதப்பட்ட அரசியல் நூல்.   முரண்பட்டே நிற்கும் என்று கற்பனை செய்யப்படும்  (உபயம்: அமைப்பியல் மானிடவியலாளர் கிளாட் லெவி ஸ்ட்ரோஸ்) அருகாமை இனங்கள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்காக ஆரம்பிக்க வேண்டிய சர்ச்சை இது. தேசிய இனப் போரால் சகல தளத்திலும் சிதைக்கப்பட்டிருக்கிற இலங்கைக்கு இப்படியொரு சர்ச்சையும் அதைத் தொடர்ந்து நிகழும் உரையாடலும் அவசியம்.   அப்படியொரு உரையாடலை தமிழர்கள் பக்கமிருந்து பாரதி ஆரம்பிக்கிறார்.   புத்தகத்தில் அவரே சொல்வது போல், தொல்லியல், வரலாற்றியல், சமூக அறிவியல்கள், மொழியியல் என்று பல்வேறு துறைகள் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கிற ஆய்வுகளின் வழி சிங்களவர்களை அறிமுகம் செய்ய இந்த நூல் முயற்சி செய்கிறது.  அதுவும் க...

ஜல்லிக்கட்டும் இந்தியக் காலனியமும்

(ஜல்லிக்கட்டு பற்றி முக நூலில் எழுதிய ஒரு சிறு குறிப்பிற்குப் பின் நடைபெற்ற உரையாடல் இது.  ஒரு ஆவணப்படுத்தலுக்காக இங்கே பதிந்து வைத்துக் கொள்கிறேன்.  என்னோடு உரையாடிய ஆ. செல்லபெருமாள், மானிடவியல் அறிஞர்; பகத் வீர அருண், மானிடவியல் முனைவர் பட்ட ஆய்வாளர்; பிலவேந்திரன், நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்; புஷ்ப நந்தினி, நாடகத்துறை ஆய்வாளர்; ஏர் மகாராசன், ஆசிரியர்.) மாடும் மாதொருபாகனும் ! பெருமாள்முருகனின் மாதொருபாகனுக்கு என்ன நடந்ததோ அது தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டிற்கும் நடக்கிறது . பல்லைக்கடித்துக் கொண்டு , இரண்டையும் ஆதரிப்பது தவிர எனக்கு வேறு வாய்ப்புகள் இருக்கவில்லை . ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் , மாதொருபாகனுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் . இது தான் முக நூல் பதிவு.  இனி வருவது அது சார்ந்த உரையாடல்: ஆ . செல்லபெருமாள்:  மாதொருபாகனில் வெளிப்பட்டது சுயநல நுண் அரசியல் . ஜல்லிக்கட்டில் வெளிப்படுவது பண்பாட்டு அரசியல் . பிலவேந்திரன்:   ந...