Skip to main content

Posts

Showing posts from 2014

போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் 9 – போலச்செய்தல் என்ற புனைவும் திரும்பச்செய்தல் என்ற யதார்த்தமும்

போலச்செய்தல் என்ற புனைவும் திரும்பச்செய்தல் என்ற யதார்த்தமும் ‘ போலச்செய்தல் ’ , தனக்குள் நாடகத்தன்மையைக் கொண்டவொரு நிகழ்த்துதல் கூறு .   அதன் உள்ளார்ந்த உணர்வு பகடி .   யதார்த்தத்தைப் பகடி செய்வது மட்டுமே தங்களது நோக்கம் என்பதை , ‘ போலச்செய்யத் ’ தொடங்கும் நிகழ்த்துநர்கள் தெளிவாகச் சொல்லிய பின்பே நிகழ்த்துதல்கள் அரங்கேறுகின்றன .   இத்தகைய ‘ போலச்செய்யும் ’ நிகழ்வுகளில் வெளிப்படும் அங்கதம் , யதார்த்தத்தின் மீதான விமர்சனமாகக் கருதப்படுகிறது .   யதார்த்த பண்பாட்டு வெளியிலிருந்து துல்லியமாக வேறுபடுத்தப்பட்ட , புனைவுவெளியில் நிகழ்த்தப்படும் ‘ போலச்செய்தல்களை ’ அனைத்து சமூகங்களும் அங்கீகரிக்கின்றன என்பதோடு , அந்நிகழ்வுகளை நடத்தும் கலைஞர்களை புரக்கவும் செய்கின்றன . போலச்செய்தலின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாக, தெருக்கூத்தின் கட்டியக்காரனையும், ராஜா ராணி ஆட்டத்தின் பபூனையும், தோற்பாவைக்கூத்தின் உச்சிக்குடுமி – உளுவத்தலையன் கதாபாத்திரங்களையும் குறிப்பிடவேண்டும்.   அதிகார ம் ததும்பும் கதாபாத்திரங்களை, யதார்த்தத்தில் கேட்க முடியாத அத்தனைக் கேள்விகளையும் நகைச்சுவை என்ற பெயரில்

போலச்செய்கிறார்கள்

The simulacrum is never that which conceals truth – it is the truth which conceals that there is none. The simulacrum is true – Ecclesiastes – From Simulations by   Jean Baudrillard இப்படி எழுதுவது தமிழில் கூச்சமில்லாது பலரால் செய்யப்படுகிறது என்றாலும், எனக்கு மனம் ஒப்பவில்லை.   இருந்தாலும் சமகாலத்தில் எழுந்திருக்கும் குரல்களை தொகுத்து வாசிக்கிற அனுபவத்திற்காக இதைச் செய்கிறேன். ‘போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் ’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக நான் எழுத ஆரம்பித்த பின்பு, தமிழில் ‘சாதி ’ தொடர்பான உரையாடலொன்று தன்னியல்பாய் (?) உருவானது போல உருவாகியிருக்கிறது.     இந்த விவாதம் என்ன மாதிரியான முடிவுகளை நோக்கி நகரும் என்பதை இப்பொழுதே கணிக்க முடியாது என்றாலும், இப்படியொரு பேச்சு எழுந்திருப்பதே ஆரோக்கியமானது தான்.   அந்த வகையில், எனது கட்டுரைகளைத் தொடர்ந்து எழுந்த இந்தப் பேச்சுகளை கவனிக்கத் தவறியவர்களுக்காக அவற்றிற்கான சுட்டிகளைக் கீழே தருகிறேன். 1.        வெ. ராமசாமியின் ‘ஒத்திசைவு ’ என்ற பெயரிலான வலைத்தளம் – இதில் தான் அவர் முதன்முதலாக எனது கட்டுரைத் தொடரை

போலச்செய்தலும் திரும்பச்செய்தலும் – 8 திரும்பச்செய்தல் என்ற கலகம்

நமது விவாதத்தை மேலும் வளர்த்தெடுப்பதற்காக இன்னுமொரு களத்தகவலை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .   இந்தத் தகவல் பள்ளர் சமூகத்தினரின் தற்கால அரசியல் பண்பாட்டு நடவடிக்கை தொடர்பானது .   கடந்த ஐந்தாறு வருடங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருவது தான் என்றாலும் , 2011ல் காவல்துறை ஆறு உயிர்களை படுகொலை செய்த செய்தி ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்ட பின்பு இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்ற,   இம்மானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியே அது .   இம்மானுவேல சேகரன் , இராமநாதபுர மாவட்டத்தின் பரமக்குடி என்ற நகரத்தில் 1950 களில் தீவிரமாக செயல்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்துத் தலைவர் . தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக செயல்பட்டவர்.   அந்நாட்களில் அப்பகுதிகளில் , பிற்படுத்தப்பட்ட சாதியான மறவர்களின் ஒடுக்குதல்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை துணிச்சலாக எடுத்தவர் .   இம்மானுவேல் சேகரனின் சுயமரியாதைக்கான உந்துதல்கள், நிலவுடமை சமூகத்தின் சாதிய மனோபாவத்தில் ஊறித்திளைத்த, பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த முத்துராமலிங்கத்தை எரிச்சலடைய வைத்திருக்கின்றன.   தங்களது வீடுகளில்