Skip to main content

Posts

Showing posts from January, 2016

கரகாட்டம், ஜல்லிக்கட்டு, மகாபாரதம்

அன்புள்ள தர்மா , நீங்கள் எழுதிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.  அந்தச் சின்னப் பெண் கெளசல்யா பற்றி எழுதியிருந்த கட்டுரை அற்புதமாக இருந்தது.  நல்ல கட்டுரைகளை வாசித்து முடித்ததும் ஒரு கர்வம் வருமே அது எனக்கு இந்தக் கட்டுரையை வாசித்ததும் ஏற்பட்டது.  இந்த வகையாய் எழுதுகிறவர்கள் தமிழில் அருகிப் போய்விட்டார்கள்.  அதனால் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கட்டுரையில், கலை வடிவங்கள் எப்படி தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகி வந்திருக்கின்றன என்பதை இயல்பானக் காரியம் போல விவரித்த தொனி என்னை ஆச்சரியப்படுத்தியது.  உடனே, இதை, எளிதில் உணர்ச்சிவசப்படும் தமிழ் மனம் எப்படி எதிர்கொள்ளும் என்று அறிவதற்கும் ஆசையாக இருந்தது.  குறிப்பாக, தமிழ் மொழி பற்றியும், அதன் தூய்மை பற்றியும், ஒரிஜினாலிட்டி பற்றியும் அலட்டிக்கொள்ளும் தமிழ் மனம் இது கண்டு பதறாதா என்று நினைத்தேன். இதே காலகட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றியும், பொங்கல் கொண்டாடுவது பற்றியும், தமிழ் புத்தாண்டு எது என்பது பற்றியும் உருவான கொந்தளிப்புகள் கண்டு நான் மன உளைச்சலுக்கே ஆளானேன்.  எல்லா

வாழ்த்துகள் பத்மஶ்ரீ ஜெயமோகன்!

ஜெயமோகனுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்தி … . வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  வெகு சில சமயங்களில் மட்டுமே சரியான நபர்களுக்கு சரியான விருதுகள் வழங்கப்படுகின்றன.  இது இந்திய விருதுகளுக்கு மட்டுமல்ல, உலக விருதுகள் பலவற்றிற்கும் பொருந்தும். எனது கணிப்பின் படி, ஜெயமோகன், இலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் எந்தவொரு விருதையும் பெற்றுக் கொள்ளும் தகுதி வாய்ந்தவர்.  மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்.  நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான அத்தியாயத்தை அடையாளப்படுத்துகிறவர்.  அவருடைய எழுத்து முறையும், உழைப்பும் ஏராளமான இளைய எழுத்தாளர்களுக்கு முன் மாதிரியாய் திகழ்கின்றன என்பதை நான் பார்க்கிறேன்.  சாகித்ய அகாடமி விருது அவருக்கு ஏன் இது வரையில் அறிவிக்கப்படவில்லை என்பது கூட எனது கேள்விகளில் ஒன்று.  எனவே பத்மஶ்ரீ வழங்கப்படுவது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. ஆனாலும் … இந்த விருதை தன் மேலே போர்த்திக் கொள்வதில் ஜெயமோகனுக்கு ஒரு சங்கடம் இருப்பதாக அவர் கற்பனை செய்கிறார்.  இந்தக் கற்பனை அதீதமானது என்பது அவருக்கே கூட ஒரு ஓரத

தமிழ் Name of the Rose

முதல் பகுதி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் படி, ஓரியூர் சார்லஸ் பின்னைநவீன முறையில் இறந்து போயிருந்தார்.  தீயினால் சுட்ட உடலாகவே சார்லஸைக் கண்டெடுத்தனர்.  ஊரை அடுத்திருந்த முள்ளுக்காட்டினுள் கிடந்தார்.   அதிர்ஷ்டவசமாக தற்கொலைக் குறிப்பு எதையும் அவர் விட்டுச் செல்லவில்லை.  தீக்குளிப்பவர்கள் நான்கு பேர் மத்தியிலே, பொதுஇடத்தில் வைத்துக் குளிப்பது தான் தமிழர் பண்பாடு.  இவரென்னவென்றால் ரகசியமாய் போய் குளித்திருக்கிறார். எனவே, அது தற்கொலையாகவும் இருக்கலாம், கொலையாகவும் இருக்கலாம்  (இந்தியாவில் இவ்விரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் கூட…).  இல்லையென்றால் வேறு அமானுஷ்ய காரணமாகக் கூட இருக்கலாம்.  மொத்தத்தில் ஆசிரியன் இறந்து போனான்!  எனவே, அது தற்கொலையா, கொலையா, இல்லை வேறு ஏதேனுமா என்று முடிவு செய்யும் பழிபாவத்தை தமிழ் வாசகர்களுக்கே தந்து விடலாம்.   இதனாலெல்லாம் குழம்பிவிட வேண்டாம்!  இது அசாதாரணமான சூழல் ஒன்றும் இல்லை.  மிக மிக இயல்பான ஒன்று தான்.   தமிழ்ப் பண்பாட்டு அசைவுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது வழக்கமானது தான் என்பது விளங்கும்.  1999 ஆம் வருடம்

ரோகித் வெமுலா - Open Letter to the University of Hyderabad Vice Chancellor on Rohith Vedula

The following is the text of an open letter signed by scholars from around the world with an interest in India and South Asia on the recent suicide of a Dalit student at the University of Hyderabad: We of the global scholarly community make an urgent appeal that justice be done in the most recent case of caste discrimination in Indian higher education, that of the University of Hyderabad’s prejudicial suspension of five young Dalit men pursuing PhDs. It was ordered under political pressure, without even allowing the young men in question to speak in their own defense.  It directly contravened an earlier decision made by the university administration itself, which had exonerated them of any charges of wrongdoing – charges which had been trumped up by political rivals opposed to the activism of these young men. This prejudice has now exacted a terrible price. One of the five, a scholar of great promise, Rohith Vemula, committed suicide on January 17. Unable to

அயோத்திதாசரும் இளையராஜாவும்

கோட்டிங்கன் வந்ததிலிருந்தே கஜீ (கஜேந்திரன் அய்யாதுரை),  ‘Trou வுக்கு போக வேண்டும் தர்மு.  உனக்கு அது பிடிக்கும்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.   Trou ஒரு மதுக்கூடம்.  ஜெர்மன் மொழியில் ‘துளை’ என்று அர்த்தம்.  நேற்று அங்கே போயே விட்டோம். அது ஒரு நிலவறை.  தரையிலிருந்து கீழிறங்கிய ஒரு துளையின் வழியாக அதற்குள் நுழைய வேண்டியிருந்தது.   கருங்கற்களால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகள் நாலாபக்கமும் விரிந்து செல்கின்றன.    ‘இரண்டாம் உலகப் போரின் போது, நேச நாடுகளின் விமானத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, கோட்டிங்கன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பதுங்கியிருந்த இடம் இது’ என்று உள்ளூர் வரலாறு சொன்னார்கள்.   ஜெர்மனியெங்கும் பியர் வெள்ளமாய் பாய்கிறது.  நேற்றைக்கு கோதுமையிலிருந்து வடிக்கப்பட்ட பியரை (weisenbier) வாங்கி வாங்கி குடித்துக் கொண்டிருந்தோம். பேச்சு அங்கே இங்கே சுத்தி விட்டு, அயோத்திதாசரில் வந்து நிலைகொண்டது.   கஜீ, அயோத்திதாசரின் தமிழ் பெளத்தம் என்ற அவரது நூலை எழுதிக் கொண்டிருக்கிறார்.  நானும் அயோத்திதாசர் பற்றிய எனது அடுத்த நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஒரே