Skip to main content

வாழ்த்துகள் பத்மஶ்ரீ ஜெயமோகன்!





ஜெயமோகனுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்தி. வழங்கப்பட்டிருக்கிறது.

வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  வெகு சில சமயங்களில் மட்டுமே சரியான நபர்களுக்கு சரியான விருதுகள் வழங்கப்படுகின்றன.  இது இந்திய விருதுகளுக்கு மட்டுமல்ல, உலக விருதுகள் பலவற்றிற்கும் பொருந்தும்.

எனது கணிப்பின் படி, ஜெயமோகன், இலக்கியத்திற்காக இந்தியாவில் வழங்கப்படும் எந்தவொரு விருதையும் பெற்றுக் கொள்ளும் தகுதி வாய்ந்தவர்.  மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்.  நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான அத்தியாயத்தை அடையாளப்படுத்துகிறவர்.  அவருடைய எழுத்து முறையும், உழைப்பும் ஏராளமான இளைய எழுத்தாளர்களுக்கு முன் மாதிரியாய் திகழ்கின்றன என்பதை நான் பார்க்கிறேன்.  சாகித்ய அகாடமி விருது அவருக்கு ஏன் இது வரையில் அறிவிக்கப்படவில்லை என்பது கூட எனது கேள்விகளில் ஒன்று.  எனவே பத்மஶ்ரீ வழங்கப்படுவது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை.

ஆனாலும்

இந்த விருதை தன் மேலே போர்த்திக் கொள்வதில் ஜெயமோகனுக்கு ஒரு சங்கடம் இருப்பதாக அவர் கற்பனை செய்கிறார்.  இந்தக் கற்பனை அதீதமானது என்பது அவருக்கே கூட ஒரு ஓரத்தில் விளங்கும்.  விருதுகள் கருத்தியல் நிலைப்பாட்டிற்காக வழங்கப்படுவதில்லை என்பதை அவர் அறிய மாட்டாரா என்ன?  இந்தியா மாதிரியான, அங்கீகரிக்கப்பட்ட கலைக் கோட்பாடுகளோ, கொள்கைகளோ இல்லாத தேசங்களில் விருது வழங்குவதென்பது ஒரு அங்கீகாரம், சில சலுகைகள், பல்வேறு அனுகூலங்கள்அவ்வளவு தான்.  இதை ஏற்றுக் கொள்வதில் அவருக்கு அப்படியென்னவொரு கற்பனையான அசூயை என்று எனக்கு விளங்கவில்லை.

யோசித்துப் பார்த்தால், விருதுகளின் மீதான ‘சீச்சீய் இந்தப் பழம் புளிக்கும்..’ என்ற சுந்தரராமசாமி சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ என்றே எனக்குத் தோன்றுகிறது.  என்னைக் கேட்டால் அது ஒரு பொருட்படுத்தத்தக்க கூச்சமே இல்லை என்று தான் சொல்வேன்.  இது ‘அரசாங்க விருதுகளின் மீதான ஒவ்வாமை’ அவ்வளவு மட்டுமே.

தமிழில் எழுதிக்கொண்டிருக்கும் கலைஞனுக்கு இது போன்ற விருதுகள் கிடைப்பது அபூர்வம்.  அந்த வகையில் ஜெயமோகன் இவ்விருதை பெற்றிருப்பதில் எனக்கெல்லாம் மகிழ்ச்சி தான்.

வாழ்த்துகள் ‘பத்மஶ்ரீ ஜெயமோகன்’!


Comments

Anonymous said…
ஜெயமோகன் நடிக்கும் நாடகத்தை தெரியாதது போலவே வாழ்த்து சொல்ல உங்களால் எப்படி முடிகிறது?

- செல்வா ஜாண்
Anonymous said…
அவர் மிகப் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறார். தனது கெளரவத்தையும் இழந்து விடாமல், விருது வழங்கிய தேச்த்தையும் காயப்படுத்தி விடாமல், இப்படியொரு நடவடிக்கையை அவரைத் தவிர வேறு யார் செய்ய முடியும்? வெண்முரசுவின் வருகை இந்திய இலக்கிய உலகையே மாற்றியமைக்கப் போகிறது என்பது தான் எங்களைப் போன்றோரின் ஆவல். என் மாதிரியான மிக சாதாரண ரசிகர்களுக்காகவும் அவர் எழுதுகிறார் என்பதெ பெரிய விஷயம் தான். சங்கரசுப்பிரமணியன், ஆழ்வார் திருநகரி

Popular posts from this blog

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள தர்மராஜ் அந்த ' நாலைந்துபேரில் ' நானும் ஒருவன் என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம்.   இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.   அப்புறம் என் எழுத்து பற்றி. என்னுடையது கோணங்கியின் ' ஆட்டமாட்டிக் ' எழுத்து இல்லை. அது மொழிவழியாக வெளிப்படும் உள்ளம் , உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதை ஒரு ' கிராஃப்ட் ' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன்.   மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை , மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும் , தத்துவமும் , உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும் சாகசக்கதைகளும் கொண்டது அது. இப்போது பிரயாகை மிக நேரடியான நடை கொன்டது இந்தியச் சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை அதில் உ...