Skip to main content

Posts

Showing posts from March, 2016

எழுதியெழுதி அழித்தல்

‘நீ என்ன சாதின்னு யாராவது கேட்டா, மூஞ்சில அடிக்கிற மாதிரி ஒரு பதில் சொல்லனும். என்ன சொல்லலாம்’ என்றான், முன்பொருமுறை திருமாறன். சிறுசிலிருந்து நண்பன்.  நாடக நடிகன்.  பெரியார் ஆதரவாளன்.  திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டான்.  எங்கிருக்கிறான் … இருக்கிறானா என்று கூட யாருக்கும் தெரியாதவன். அவன் கேட்ட கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை. ‘சரி, நீ என்ன சொல்லுவ?’ என்றான். ‘அப்படி யாராவது கேட்டா, நான் உண்மைய சொல்லுவேன்.  அதுவே மூஞ்சில அடிச்சா மாதிரி தான் இருக்கும்’. அன்றைக்கு, அவன் கண்களில் பொறாமை தெரிந்தது.  என் ‘சாதி மறுக்கப்பட்ட’ அடையாளம், கேட்கிறவர் மூஞ்சை பெயர்க்கும்.  ஒரு தலித்தாக பிறந்ததில், நான் அனுபவித்த ஒரே சலுகை இது தான்!   ***** தொடர்ச்சியான சாதிக் கொலைகளால் எல்லாருமே பதறிப் போயிருக்கிறோம்.   நிறைய பேருக்கு உயிரோடிருப்பது குறித்த பயம்; பலருக்கு இன்னும் உயிரோடு இருக்கிறோமே என்ற கசப்பு.  குழம்பிப் போயிருக்கிறது சூழல். ‘நான் உயர்சாதியைச் சார்ந்தவள்;  ஆனால், ஆணவக் கொலையை எதிர்க்கிறேன்’ என்ற அறிவிப்பைக் கூட இப்படி பதட்டப்பட

கிராமத்திற்கே திரும்பும் கொடுங்கனவு

இந்தக் கடிதத்தை நான் யாருக்கு எழுதுவது என்று தெரியவில்லை.   யாருக்காவது எழுத வேண்டும் போல் இருக்கிறது.   ஆனால், அப்படி ஆட்கள் யாரும் எனக்கு இல்லை.   அதனால், அன்புள்ள நண்பருக்கு, இதற்குள் உங்களுக்கு விளங்கியிருக்கும், நான் குழம்பிப் போயிருக்கிறேன்.   இது கூட சரியில்லை.   எனக்குள் அவநம்பிக்கை பெருகிக்கொண்டிருக்கிறது.   அதை நான் முடிந்த மட்டும் அள்ளி அள்ளி வெளியே கொட்டிக்கொண்டிருக்கிறேன்.   என் படகு மூழ்கிக்கொண்டிருக்கிறது.   ஆரம்பத்தில் கைகளாலும் கால்களாலும், உடலாலும் அத்தனை ஓட்டைகளையும் அடைப்பதற்காகத்தான் முயற்சி செய்து கொண்டிருந்தேன்.   ஆனால், நான் அப்படி செய்திருக்கக் கூடாது.   காலத்தை வீணடித்திருக்கிறேன்.   அந்த நேரத்தில் தான் படகில் அவநம்பிக்கையின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.   அதை அள்ளி வெளியே கொட்டுவதும் அவ்வளவு எளிதாக இல்லை.   அவநம்பிக்கை நீல நிறத்திலும் இரத்தைத்தைப் போல பிசுபிசுப்பாகவும் இருக்கிறது.   கண்ணை மூடிக் கொண்டால், என் படகில் உதிரம் தான் நிரம்பிக் கொண்டிருக்கிறது.   இரத்தக் கடலில் இறங்கியிருக்கக் கூடாது என்று புத்தியுள்ள யாருக்காவது இப்பொழுது