Skip to main content

Posts

Showing posts from October, 2016

ரொம்பப் பேசுறீங்க, சமஸ்!

தி இந்துவில் சமஸ் எழுதுகிற கட்டுரைகளை தொடர்ந்து படித்து விடுவேன்.  அதற்கு முக்கியக் காரணம் அவருடைய எழுத்திற்கு பின்னால் இருக்கும் அலைச்சல்.  திரியாமல் கட்டுரை எழுத முடியாது என்று அவரும் நம்புகிறார் என்றே ஒவ்வொரு முறையும் அவரை நினைத்துக் கொள்வேன். இதனால், அவருடைய கட்டுரைகளில் ஒரு அமைதி இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.  இந்த அமைதி, அலைந்து திரிந்து நிறைய மனிதர்களை சந்திப்பதால் ஏற்படும் அமைதி. ஆனால், சமீபகாலமாக, சமஸ் இந்த அமைதியை தனது எழுத்துகளில் இழந்து வருகிறாரோ என்றொரு சந்தேகம் எனக்கு இருந்து வந்தது.  அது, இன்றைய தி இந்துவில் வெளியான காவிரி பற்றிய கட்டுரையில் உறுதிபட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையில் அதிகமான சத்தம் கேட்கிறது, சமஸ்.  திராவிட மேடைப்பேச்சின் சத்தம். நீங்கள் எந்த வகையினரை உங்கள் கட்டுரையில் குற்றம் சாட்டுகிறீர்களோ அவர்களது நாடகப் பேச்சு போலவே உங்களது கட்டுரையும் அமைந்திருக்கிறது. இயற்கையைப் பேணும் குறைந்தபட்ச அறிவு கூட தமிழர்களுக்கு இல்லை என்பதைத் தான் உங்கள் கட்டுரை தனது ஆகப்பெரிய குற்றசாட்டாக முன்வைக்கிறது.  அதனால், தமிழ் நாட்டில் அரசு என்ற ஒன்

கலையெனும் வாதை

(கபாலி கட்டுரையின் மூன்றாம் பகுதி) கட்டக்கடைசியாய் கபாலியை ஆதரித்து சொல்லப்படுகிற ஒரு வாதம் இருக்கிறது: 'ரஞ்சித், சினிமாவை ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதமாக மாற்றியிருக்கிறார்'. இதன் தொடர்ச்சியாக, கபாலி திரைப்படத்தைக் கொண்டாடியும், ரஞ்சித் என்ற திரைக்கலைஞரை ஆதரித்தும் தமிழகத்தின் பல ஊர்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.   அந்தக் கூட்டங்கள் தலித் எழுச்சிக் கூட்டங்களின் சாயலைக் கொண்டிருந்தன. அவ்வாறு நடந்த ஒரு நிகழ்ச்சியில் உன்மத்தம் கரைபுரண்டோடியதை நானே நேரில் கண்டேன்.   இந்தச் சூழலில் என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் இருந்தது. ? ****************************** 1991 ம் வருடம் , கழுகுமலைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் ராஜாராணியாட்டம் அல்லது குறவன் குறத்தியாட்டம் அல்லது தெருக்கூத்து என்று அழைக்கப்படும் தென் தமிழக நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சியை நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது . அப்பொழுது நான் நாட்டுப்புறவியலில் முதுகலை படிப்பை முடித்து விட்டு உயராய்விற்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு கிளம்பிச் செல்வதாக இருந்தேன்.   இத