Skip to main content

Posts

Showing posts from 2017

வெரோணிக்காள் ஒரு நாவல் எழுத ஆசைப்பட்டாள்!

1
நாவலில் தான் நீளக் கதைகளை எழுத முடிகிறது. நீளம் அவளுக்குப் பிடித்த நிறம். கன்னியாகுமரி போய் முதன் முதலாய் கடலைப் பார்த்த பொழுது அவளுக்கு வயது பனிரெண்டு. கடல் பார்த்த மறுகணமே எப்படியாவது ஒரு நாவலை எழுதிவிடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தாள். கடல் அன்றைக்கு அத்தனை நீளமாக இருந்தது. 
அத்தனை அகலமான நீலத்தை அவள் கடலில் தான் பார்த்தாள். கடல் பார்த்து வந்த மறு தினமே கோணங்கியின் கோவில்பட்டி முகவரிக்கு, 'உப்பு நீலமாக இருக்கிறது!' என்று ஒருவரிக்கடிதம் எழுதியிருந்தாள். அவள் எழுதாமல் மறைத்த அடுத்த வரி, ' நீள நாவலொன்று எழுதப்போகிறேன்'.  வெரோணிக்காவிற்கு சின்ன கண்கள். பார்த்தால் தெரியாது. அவள் முகத்தைப் பார்க்கிறவர்கள் அவள் எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொள்வார்கள். உண்மையில், அவள் அப்படியெல்லாம் சிந்திக்கிற ஆளே இல்லை. சின்ன கண்களைக் கொண்ட பெரிய பெண் அவ்வளவு தான். நாவல் தான் எழுத வேண்டும் என்று முடிவு செய்த பின்பு தான், நாவலுக்கும் நீளத்திற்குமான பந்தங்கள் ஒவ்வொன்றாக அவளுக்குப் புலப்படத் தொடங்கின.  ஒரு நாவல் முதலில் வாசகர்களின் கண்களை நீலமாக்குகிறது. அதன் பின் நாக்…

மரணம் - தண்டனை - ஆணவம் - ஜனம்

1
‘பெரியார் பிறந்த மண்’ என்று சொல்கிற எல்லோருக்கும் தெரியும் பிறப்பின் அடிப்படையில் எதுவும் தீர்மானிக்கப்படுவது இல்லை என்று.  பிறகு ஏன் இப்படி தொடர்ந்து சொல்லப்படுகிறது?
உடுமலை சங்கர் படுகொலைக்கான நீதிமன்றத் தீர்ப்பின் வெற்றிக் களிப்பையும் அது சார்ந்த சவடால்களையும் கடந்து ஒரு சமநிலைக்கு வந்திருப்போம் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.


சங்கர் கொலை வழக்கில், ஆறு பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிமன்றம், மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறது - இந்தத் தண்டனை ‘அந்தப்’ படுபாதகச் செயலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.
எது படுபாதக செயல் என்பதில் சட்டப்புத்தகங்களுக்கு  குழப்பங்கள் இல்லை.  கொலை, கொள்ளை போன்ற செயல்கள் படுபாதகங்கள்.  அதிலும், அவற்றைத் திட்டமிட்டு செய்திருந்தால், மாபாதகம்!  அதிக பட்ச தண்டனை உண்டு.
சங்கர் படுகொலையிலும் நீதிமன்றம் வழங்கியிருக்கிற மரண தண்டனை, அந்தப் பாதகத்திற்குத் தானேயொழிய, அதன் பின்னிருக்கிற சாதி ஆணவம் என்ற காரணத்திற்காக அல்ல.  
இதை இப்படி விளங்கிக் கொள்ளலாம் - பாதகத்தில் முடியாத சாதி ஆணவங்களுக்கு சட்டப்புத்தகத்தில் தண்டனைகள் இல்லை.  அல்லது, சாதி ஆணவக் கொலைகள், கொல…

நீட் போராட்டம் - ஒரு ஃப்ளூ ப்ரிண்ட்.

2018, ஜனவரியில் வெளிவரவிருக்கும் 'ஜல்லிக்கட்டு போராட்டம்' பற்றிய புத்தகத்திலிருந்து...... 'நீட் தேர்வுக்கு எதிரான வெகுஜன கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வரைபடம் -  பள்ளிக்கூடங்களை மாலைகளில் அடைக்காதீர்கள்!  வகுப்பறைகளில் நீட் தேர்வின் அநியாயங்களை மட்டுமே பேசுங்கள்! நீட் தேர்வு, ஒரு அராஜகம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அப்படி மாற்றுக்கருத்து இருப்பதாய் சொல்கிறவர்கள் கூட, மாநிலத் தேர்வு முறையிலிருக்கும் கோளாறுகளைச் சுட்டிக் காட்ட வந்த கோபத்தாலேயே நீட் தேர்வுக்கு ஆதரவு போலப் பேசுகிறார்கள். மற்ற படி, இந்த ஒற்றை தேர்வு முறையை ஆதரிப்பதற்கான எந்த முகாந்திரமும் யாருக்கும் இல்லை. இந்தத் தேர்வு முறையின் காரணமாக நேரடியாகப் பாதிக்கப்படுகிறவர்கள், தமிழகப் பள்ளிகளில் படித்த மாணவர்கள். இந்தப் பாதிப்பு, அவர்களது பெற்றோரை உடனடியாகவும், சமூகத்தை பொறுத்திருந்தும், நமது அரசியல் உரிமையை நிதானமாகவும் காவு வாங்கப்போகிறது. மாநில உரிமைகளைப் பேணுவதற்கான எந்தவொரு முனைப்பும் தைரியமும் இல்லாத அரசாங்கமே நமது பலவீனம். நீதிமன்றங்களும் கைவிட்டு விட்ட நிலையில் இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே கேள்வி - ஏ…

மிஷல் ஃபூக்கோ பயிலரங்கம் - தொடரும் உரையாடல்

ஃபூக்கோ மீது பாய்வது எப்படி?மதுரையில் நடைபெற்ற ஃபூக்கோ கருத்தரங்கம் இனிய சந்திப்பாக மாறியிருந்தது.  இத்தனை இளைஞர்கள் இவ்வளவு நாட்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை.  அவ்வளவு உற்சாகம் அவர்களிடம்.  ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து திசைகளிலிருந்தும் இவர்கள் கிளம்பி அவர்களிடம் மதுரைக்கு வந்திருந்தனர்.  
ஃபூக்கோவை, கேள்வி மட்டுமே பட்டவர்கள், காதால் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தவர்கள், கொஞ்சம் நுழைந்து பார்த்து ‘இந்தப் பழம் புளிக்கும்’ என்று திரும்பியவர்கள், பாதி கிணறு தாண்டியவர்கள், ஃபூக்கோவை கொலை செய்ய விரும்பியவர்கள், அதிருப்தியாளர்கள், மருண்டவர்கள்… என்று விதவிதமான நபர்கள்.  கலைடாஸ்கோப்பின் கடைசி தகவலின் படி, கலந்து கொண்டவர்கள் மொத்தம் 65 பேர்.  
‘கலைடாஸ்கோப்’ பிரபாகர் நிச்சயமாய் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.  அவர் முப்பது பேர் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்.    முன்ஜாக்கிரதையோடு, எதற்கும் கூடவொரு பத்து என்று, நாற்பது பேரை சமாளிப்பதற்கான தளவாடங்களோடு மட்டுமே அவர் வந்திருந்தார்.  ஆனால், வெள்ளிக்கிழமை மாலையே பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை எகிறிக் கொண்டிருந்தது.  
வழக்கம் போல இந்தக் கருத்தரங்கி…