Skip to main content

Posts

Showing posts from April, 2017

நான் ஏன் தலித்தும் அல்ல? - நூல் அறிமுகம், சுரேஷ் பிரதீப்

'நான் ஏன் தலித்தும் அல்ல?' நூல் குறித்து சுரேஷ் பிரதீப் எழுதியிருக்கும் அறிமுகம் அப்புத்தகத்தின் சாரத்தை சுருக்கமாக தருகிறது.  தொடக்க நிலை வாசகர்கள் அந்த நூலை தயக்கமின்றி அணுகுவதற்கு இக்கட்டுரை உதவும்.   அந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள், குறிப்பாக, தலித் அடையாள மறுப்பும், தவிர்க்கவியலாத திணிப்பும்; தலித் அரசியலாளர் - தலித் காதலர்; விடலை - குடும்பன்; தலைகீழாக்கம் குறித்த விவாதங்கள்; போலச்செய்தலும் கலை வடிவங்களும் நகைச்சுவையும்; திரும்பச்செய்தலும் வன்முறையும்; திருவிழாவும் கலவரமும் போன்றவை இன்னமும் உரையாடலாக மாறியிருக்கவில்லை.   தமிழ்ச் சூழலில் அப்படியெல்லாம் உடனடியாக எதிர்பார்ப்பது அதிகம் தான்.  ஆனால்,  புத்தகம் வெளிவருவதற்கு முன்னால் தவிர்க்கவியலாத சூழலில் இந்நூலுக்கான விமர்சனத்தை நானே கூட எழுதுவேன் என்று கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றும் காலகட்டம் இன்னமும் கனியவில்லை என்று தான் நினைக்கிறேன்.   இன்னும் கூட நான் காத்திருக்கிறேன். டி. தருமராஜ் இனி சுரேஷ் பிரதீப் கட்டுரை: டி. தருமராஜின் "நான் ஏன் தலித்தும் அல்ல?

தண்டனைகளின் காலம் (சிறுகதை)

( இந்தச் சிறுகதை 1994ம் வருடம் நிகழ் 27 (ஆகஸ்டு), 28 (டிசம்பர்) இதழ்களில் வெளியானது.  ஏறக்குறைய மறந்தே விட்டேன்.  அதன் பிரதிகள் கூட என்னிடம் இல்லை.  இப்படியொரு கதை எழுதியதை, கோவை ஞானி மாத்திரம் அப்போதைக்கப்போது ஞாபகப்படுத்துவார். இப்பொழுதும் அதன் பழைய பிரதிகளை அவரே தான் நகலெடுத்து அனுப்பினார்.  கோவை ஞானிக்கு நன்றி!)  தண்டனைகளின் காலம் டி.தருமராஜ் 1 குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து நான் அப்பொழுது ஆராய்ந்து கொண்டிருந்தேன். டெல்லியில் உள்ள மிகப் பிரபலமான பல்கலைக்கழகமொன்றில் இதைச் செய்வதற்கு என்னை  அனுமதித்திருந்தார்கள். எனக்கு இருபத்தெட்டு இருபத்தொன்பது வயதிருக்கலாம்.  இந்தியாவில் என்றைக்குமே குற்றங்களுக்கும் தண்டனைகளுக்கும் குறைவில்லையென்பதால், நான் சுழன்று சுழன்று எனக்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிப்பது என்பதே அப்பொழுது முக்கியமாய் இருந்தது. அடிப்படையில் நான் தமிழ்நாட்டின் தென்மூலையிலிருந்து வந்தவன் என்பதால் எனது ஆராய்ச்சிப் பகுதியென நான் தமிழ்நாட்டை மட்டுமே எடுத்துக் கொண்டேன்.  இதனால் சுமார் நான்காண்டு கால வனவாசத்திற்குப் பின் ஓர் அந்நிய மிருகமென நான் தம

காற்று வெளியிடை...

இந்தக் கதை ஒரு வேளை உங்களுக்குத் தெரிந்து கூட இருக்கலாம். ஒரு நாட்டில் ஒரு ராணுவ வீரன் இருந்தான்.  திறமையானவன்.   சண்டைகளில் பராக்கிரமசாலி.  என்ன பிரச்சினையென்றால் அவனுக்கு ஒவ்வொரு சண்டையும், ஒரு சாகச பயணமாக மட்டுமே தெரிந்தது.  இந்த, தேசப் பற்று, மானுட நேயம், தாய் நாடு என்றெல்லாம் ஜல்லியடிப்பார்களே, அது போன்ற எந்த விஷயத்திற்கும் அவனிடம் மரியாதை இல்லை.  தன்னையும் ஒரு போர்க்கருவியாக மட்டுமே அவன் பார்க்கிறான்.  War machine. தனது தொழில் உயிர்களை அழித்தல் என்றே அவன் நம்புகிறான்.   அழிப்பதெல்லாம் ஒரு தொழிலா என்று நீங்கள் விசனப்பட்டால், அவன் சிரிப்பானா இருக்கும். அவன் தோற்றத்தில் மிதமிஞ்சிய பெண் தன்மையும் (லிப்ஸ்டிக் உதடுகள்), செயலில் மித மிஞ்சிய ஆண் தன்மையும் தெரிகிறது.  Ambivalence. அவன் கலவையாக இருக்கிறான்.  Hybrid . ஐரோப்பிய வாழ்க்கை முறை, இந்திய சடங்குகள், சக்ரா என்ற பிள்ளைவாள் அப்பா, அம்மாவின் மீன் குழம்பு, ஒரே வீட்டிற்குள் ஆயிரம் தீவுகள்.   அவனது வாழ்க்கையில் ஒரு பெண் எதிர்ப்படுகிறாள்.  நிறைய பெண்களை அவன் சந்தித்திருந்தாலும், இந்தப் பெண் வேறு மாதிரி - மருத்துவர்;