Skip to main content

காற்று வெளியிடை...




இந்தக் கதை ஒரு வேளை உங்களுக்குத் தெரிந்து கூட இருக்கலாம்.

ஒரு நாட்டில் ஒரு ராணுவ வீரன் இருந்தான்.  திறமையானவன்.   சண்டைகளில் பராக்கிரமசாலி.  என்ன பிரச்சினையென்றால் அவனுக்கு ஒவ்வொரு சண்டையும், ஒரு சாகச பயணமாக மட்டுமே தெரிந்தது.  இந்த, தேசப் பற்று, மானுட நேயம், தாய் நாடு என்றெல்லாம் ஜல்லியடிப்பார்களே, அது போன்ற எந்த விஷயத்திற்கும் அவனிடம் மரியாதை இல்லை.  தன்னையும் ஒரு போர்க்கருவியாக மட்டுமே அவன் பார்க்கிறான்.  War machine. தனது தொழில் உயிர்களை அழித்தல் என்றே அவன் நம்புகிறான்.   அழிப்பதெல்லாம் ஒரு தொழிலா என்று நீங்கள் விசனப்பட்டால், அவன் சிரிப்பானா இருக்கும். அவன் தோற்றத்தில் மிதமிஞ்சிய பெண் தன்மையும் (லிப்ஸ்டிக் உதடுகள்), செயலில் மித மிஞ்சிய ஆண் தன்மையும் தெரிகிறது.  Ambivalence.

அவன் கலவையாக இருக்கிறான்.  Hybrid . ஐரோப்பிய வாழ்க்கை முறை, இந்திய சடங்குகள், சக்ரா என்ற பிள்ளைவாள் அப்பா, அம்மாவின் மீன் குழம்பு, ஒரே வீட்டிற்குள் ஆயிரம் தீவுகள்.  

அவனது வாழ்க்கையில் ஒரு பெண் எதிர்ப்படுகிறாள்.  நிறைய பெண்களை அவன் சந்தித்திருந்தாலும், இந்தப் பெண் வேறு மாதிரி - மருத்துவர்; ஒரு விபத்தில் சாகக்கிடந்தவனுக்கு உயிர் தந்தவள்.    ஏறக்குறைய இரண்டாவது தாய்.   (என்னுடைய முதல் patient அவன்!) அநியாயத்திற்கு அவள் அழகாகவும் இருக்கிறாள்.  

முதலில் அவளிடமிருந்து விலகி ஓடிவிடவே விரும்புகிறான்.  தாய் மாதிரியானவள், காமம் ததும்புகிறவள் - இந்த ஈடிப்பஸ் சிக்கலில் மாட்டிக் கொள்ள அவன் தயார் இல்லை.  Anti-oedipus.  அவளோ அவனை விடமாட்டேன் என்கிறாள்.  துரத்துகிறாள்.

அவன் பிளவுண்டவன் Split போல இரண்டு மனசாக இருக்கிறான்.  அவள் வேண்டும் என்றும் தோன்றுகிறது.  மறுகணமே, அய்யய்யோ என்றும் தோன்றுகிறது.   இதற்கு அவனிடம் வரலாற்றுக்  காரணங்கள் இருந்தன.  அவன் தன் தந்தையை வெறுத்தான்.  அதனால் அவனுக்கு அம்மாவைப் பிடிக்கும்.  அதனால் பாரதியையும் பிடிக்கும்.  பாரதியும் Split தான்.  இரட்டை மனநிலையில் தான் இருந்தான்.  இந்தியப் பாரம்பரியத்திற்கும் ஐரோப்பிய நவீனத்துவத்திற்குமிடையே நாயாய் உளன்றவன்.  அதாவது, ஈடிப்பஸ் சிக்கல் கொண்ட குடும்பத்திற்கும், கலை மனம் ததும்பும் தனி மனித சுதந்திரத்திற்கும் இடையே சிக்கித் தவித்தவன்.  

ராணுவ வீரன் பயந்த சம்பவம் நடந்தே விடுகிறது.   தாய் போன்ற அந்தப் பெண்ணுடன் சம்போகம் கொள்கிறான்.  அவள் தாயும் ஆகிறாள்.  போதாக் குறைக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு அவன் தந்தையாக வேண்டுமென்றும் கேட்கிறாள்.  

அவன் திரும்பவும் தெளிவாகச் சொல்கிறான் - அதற்கான ஆள் நான் இல்லை.  என்னால் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியாது (அல்லது நல்ல தந்தை என்று உலகத்தில் எவரும் இல்லை).  அவளுக்கு இது விளங்குவது இல்லை.  

திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறான் பின் அதை மறந்து விட்டேன் என்கிறான்; தன்னால்  நல்ல தகப்பனாக இருக்க முடியாது என்று சொல்கிறான்; என்ன மனிதன் இவன் என்பது போல பார்க்கிறாள்.  அல்லது இவன் மனிதன் தானா அல்லது வேறு எதுவுமா என்றும் அவளுக்குச் சந்தேகம் வருகிறது.   இதனால் அவனை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறாள்.  அப்பொழுது அவள் வயிற்றில் குழந்தை இருக்கிறது.  தான் ஒரு மருத்துவர் என்பதால் தனக்கு என்ன செய்யவேண்டுமென்று தெரியும் என்று சொல்லிப் போகிறாள்.     

தன்னாலொரு குடும்பஸ்தனாக வாழ முடியாது என்று தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.  சிறு வயதிலிருந்தே அப்படித்தான்.  அவனை அவனுக்கு நன்றாகவே தெரியும்.  சுட்டுப் போட்டாலும் அவனுக்கு அதெல்லாம் வராது.    ஆனால், கதையில் அவனை நிஜமாகவே சுட்டுப் போடுகிறார்கள்.  இந்த முறை சுட்டது பாகிஸ்தான் ராணுவம், கார்கில் போரில்.

பாகிஸ்தான் சிறைச்சாலையில் தான் அவன் ராணுவத்தின் நிஜ முகத்தைப் பார்க்கிறான்.  அவன் தந்தையை விடவும் கொடூரமானதாக இருக்கிறது.    எப்படியாவது தாய் நாட்டை அடைய வேண்டும் என்பது ஒரு வெறி போல அவனுக்குள் ஊறுகிறது.   Oedipul nationalism. தனக்கு உயிர் தந்த, தனது உயிரை சுமந்திருந்த அந்தப் பெண்ணையே நினைத்துக் கொண்டிருக்கிறான்.  அவள் தாய்நாட்டில் தான் எங்கேயோ இருக்கிறாள்.  அவளைத் தேடிப் போய் பார்க்க வேண்டும் என்று தீர்மானம் செய்கிறான்.   ஆச்சரியப்படும் வகையில் இந்தத் தப்பிச் செல்லும் பயணமும் அவனுக்கு சாகச பயணமாகவே தோன்றுகிறது.  

தாய்நாட்டிற்குத் திரும்பியதும் அந்தத் தாய் போன்ற பெண்ணைத் தேடி அலைகிறான்.  குற்றவுணர்வு அவனைக் கொல்கிறது.  இறுதியில் அவளைச் சந்தித்தும் விடுகிறான்.  ஆனால்  அவள் தனியாக இல்லை.  

அவனது சிறு மகளும் அங்கே இருக்கிறாள்.  தன்னையும் மகளையும் அவனுக்குப் பிடிக்கிறதா என்று அவள் பயந்ததாகச் சொல்கிறாள்.  அவர்களை அவன் அணைத்துக் கொண்டு அழுகிறான்.  Electra complex சாத்தியங்களோடு கதை முடிகிறது.  


காற்று வெளியிடை!

Comments

Popular posts from this blog

அம்பேத்கரின் 'தீண்டாமையின் தோற்றம்'

('தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?' என்ற கட்டுரையை முழுமையாக விளங்கிக் கொள்ள இந்தக் கட்டுரை உதவி செய்யும்.  2007ல் எழுதப்பட்ட இக்கட்டுரை, 'அம்பேத்கரின் பன்முகம்' என்ற நூலில் இடம்பெற்றிருந்தது.) தீண்டாமையின் வேர்கள் குறித்து அம்பேத்கர் மேற்கொண்ட ஆய்வுகள் மிகச் சுருக்கமானவை என்றாலும் , தீவிரமான விவாதப் புள்ளிகளை உள்ளடக்கியவை. ' சாதி ' குறித்துப் பரந்த அளவிலும் , தீண்டாமை ', ' வர்ணம் ', ' விலக்கல் ', ' தீட்டு ' என்று குறிப்பாகவும் பல்வேறு வகையான ஆய்வாளர்களால் , வெவ்வேறு தருணங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட சாதிய ஒழுங்கமைப்பு என்ற சொல்லாடலை இரண்டு வகை என்று சொல்ல முடியும். ' சாதி ' என்ற காரணியை அதன் வரலாற்றுத் தன்மையோடும் , நடைமுறை வெளிப்பாடுகளோடும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஆய்வாளர்களால் கட்டமைக்கப்பட்ட சொல்லாடலை முதல் வகை என்று கொள்ளலாம். இவ்வகை ஆய்வாளர்களிலிருந்து திட்டவட்டமாக வேறுபடுகிற இரண்டாம் வகையினர் , சாதியத்தின் வேர்களையும் , நடைமுறைச் சிக்கல்களையும் அலசுவதோடு நிற்காமல் , ' சாதி ' யை அழித்தொழிக்கு...

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

அன்புள்ள தாத்தா பாட்டிக்கு - சிறுகதை

 1985ல் எழுதப்பட்ட சிறுகதை இது.  அப்பொழுது எனக்கு பதினெட்டு வயது.  அந்த வருடம், நண்பர்களுடன் இணைந்து 'நிதர்சனா' என்றொரு கையெழுத்துப் பத்திரிகை கொண்டு வந்தேன்.  அதற்காக எழுதப்பட்ட கதை இது.  இதற்கு வண்ணத்தில் அட்டைப்பட ஓவியம் கூட இருந்தது. பின்னாட்களில் 'கார்ட்டூனிஸ்ட் மதி' என்று அறியப்பட்ட மதி தான் வரைந்து தந்தார்.     அதன் பின் இந்தக் கதையை, எஸ். ஆல்பர்ட் கொடைக்கானலில் நடத்திய 'சிறுகதைப் பட்டறையில்' வாசித்தேன்.    அப்படியே அது சென்னைக்குப் போய், எஸ். வி. ராஜதுரை நடத்திய 'இனி' யில்  பிரசுரமானது.  இன்றைக்கும் இந்தக் கதையை ஞாபகம் வைத்து பேசுகிறவர்கள் இருக்கிறார்கள்.  அப்படிப் பேசும்போதெல்லாம், கதையில் வருகிற தாத்தாவை முத்தமிட்ட பேரனைப் போல நான் சங்கோஜப்படுவது வழக்கம்.   'கர்ணன்' திரைப்படத்தில் பன்றி வளர்க்கும் ஏமராஜா, தன் மதினிக்கு முத்தம் தந்ததைப் பார்த்ததிலிருந்து இந்தக் கதை ஞாபகம் வந்து கொண்டே இருந்தது.  இன்றைக்கு எஸ். ஆல்பர்ட் இதை மீண்டும் ஞாபகப்படுத்தினார். அன்புள்ள தாத்தா பாட்டிக்கு சங்கரன்கோவில் பஸ்ஸ்டாண்டில் காத்...