Skip to main content

Posts

Showing posts from August, 2019

இளையராஜாவை வரைதல் - 4

4
சொற்களால் கட்டப்பட்ட அம்மாவிலிருந்து ஏக்கத்தால் நிரம்பிய அம்மாவை நோக்கி தமிழ் வெகுஜனம் நகர்ந்ததில் ராஜா பாடல்களுக்கே பெரும் பங்கு இருந்தது.  இதை உடனடியாக, எழுத்திலிருந்து பேச்சுக்குத் திரும்பினோம் என்று யோசிக்க வேண்டாம்.  


உண்மையில் தமிழ்ச் சமூகம் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓசையிலிருந்து மெளனத்திற்கே திரும்பியிருந்தது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழகம் ஓசையால் நிரம்பியிருந்தது என்பதற்கு மிக முக்கியமான உதாரணம் திராவிட இயக்க மேடைப் பேச்சுகள்.  ஜோடிக்கப்பட்ட சப்தங்களால் நிறைந்திருந்தன அந்த மேடைகள். தெரு முனைகளெங்கும் அரவம்.  இந்தச் சூழலையே ராஜா பாடல்கள் மெளனத்தால் நிரப்ப முனைந்தன.  
இது ஒரு காலப்பயணம்.  எதிர் நிற்கும் காலத்திற்குள் பயணிப்பதைப் போல, கழிந்த காலத்திற்குள் நிகழ்த்தும் பயணம்.  அதாவது, வரலாற்றுள் நிகழ்த்தும் பயணம்.  மொழிக் குறிகளால் நிரம்பிய தாயிடமிருந்து விலகி, ஏக்கமென நிற்கும் தாயை நோக்கிய பயணம்.  வேட்கைப் பொருளில் பெருத்த மாற்றம் நிகழ்கிறது.  தமிழ்ச் சூழலில் நடைபெற்ற இம்மாற்றத்தை  ராஜா பாடல்களே நமக்குச் சுட்டுகின்றன.  
ராஜாவின் காலத்தில் ‘அம்மா’ பற்றிய பார்வையில் பெரும் மாற…

இளையராஜாவை வரைதல் - 3

மூன்று
திரைப்படங்களில் காதல், பாசம் என்று ஒரு பேச்சுக்குச் சொல்கிறோமே தவிர, அது ஆண்களின் காதல், ஆண்களின் பாசம் என்பது எல்லோருக்கும் தெரியும்.   பெண்களின் காதல் உணர்வுகளைப் பேசுகிற திரைப்படங்களோ அல்லது ராஜா பாடல்களோ இந்த உலகத்தில் இல்லை.
அதே போலத்தான், பாசமும். எல்லா ராஜா பாடல்களும் தாய்ப் பாசப் பாடல்கள் தான். அதுவும் கூட பெரும்பாலும் மகனுக்கும் தாய்க்குமான பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள். சில நேரங்களில் இதைப் பாடுகிறவர்கள் பெண்களாக இருந்து உங்களைக் குழப்பக் கூடும். ஆனால், அவர்களும் கூட ஆண்களின் பாசத்தைத் தான் பெண் குரல்களில் பாடுகிறார்கள் என்பதில் கவனமாக இருங்கள். 
ஆண்களின் காதல், ஆண்களின் தாய்ப்பாசம் என்று பயணத்தை ஆரம்பித்தால் போகிற வழியில் ஒரு புதைகுழி இருக்கிறது. அதற்கு உள-பகுப்பு-ஆய்வு என்று பெயர்.  காதலாவது பாசமாவது, இரண்டுமே ஒன்று தான் என்று நிரூபிக்க அது தயாராக இருக்கிறது. 
*
‘தமிழ்த் திரைப்படங்களில் தாய்ப்பாசம்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறவர்கள், இரண்டு வகைத் தாய்மார்களை நமக்கு அடையாளம் காட்ட முடியும். எம்ஜியார், சிவாஜி போன்ற மந்தமான ஆண்களின் வீரத்தை உசுப்பி விடும் தாய்மார்கள், ரஜ…

இளையராஜாவை வரைதல் - 2

இரண்டு


ராஜா பாடல்களின் திரளும் குணம் அபரிதமானது. திரைப்படம் என்ற காட்சிகளின் நகர்வைத் தான் அது குலைக்கிறதே தவிர, ஒழுங்கையே குலைக்கவில்லை. 
இந்த இடத்தில் தெலியூஸ் சொல்வது நமக்குப் பயன்படக்கூடும். அவரைப் பொறுத்த வரையில் காலத்தை காட்சிப்படுத்துவதே திரைப்படம். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத காலத்தை திரைப்படம் காட்சிகளாக ஓட்டிக் காட்டுகிறது. காட்சிகளை நகர்த்துவதன் மூலம் சினிமா ஒரு அசைவியக்கத்தை உணரச் செய்கிறது; அந்த அசைவியக்கம், காணாத காலத்தைக் கண்ட திருப்தியை நமக்கு வழங்குகிறது.  


துரதிர்ஷ்டவசமாக, திரைப்படம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பிருந்தே இசை இதே வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறது. அது, ஒலியின் மூலமாக காலத்தைக் காண்பதற்கு நம்மை நெடுங்காலமாகப் பழக்கி வைத்திருக்கிறது. நல்ல இசை உங்களை எங்கெங்கோ எடுத்துச் செல்வதாய் கற்பனை செய்கிறீர்களே, அதற்கு இது தான் காரணம். 
ஒரு கூட்டுக் கலைவடிவமாக உருவான திரைப்படம், காலத்தைக் காட்சிப்படுத்தவே இசையையும் பயன்படுத்திக் கொண்டது. என்றாலும், இந்தியத் திரைப்படங்களின் இசை வடிவம் தன்னைத் தனியே நிரூபித்துக் கொள்ளவே பெரிதும் முயற்சி செய்கிறது.  இதன் காரணமாகவே, ரா…

வாரிசு அரசியலுக்கும் பாசிசத்திற்கும் என்ன வித்தியாசம்?

‘உயிர்மை’யில்வெளிவந்திருக்கும்ராஜன்குறையின்கட்டுரைநமக்குஇரண்டுசாத்தியங்களேஉள்ளதாகச்சொல்கிறது.  ஒன்று, வெகுஜனஇறையாண்மை; இன்னொன்று, பாசிசம்.  இவ்விரண்டில்ஏதாவதொன்றைத்தேர்ந்தெடுப்பதேஅரசியல்யதார்த்தம்என்றுநம்கழுத்தில்கத்தியையும்வைக்கிறது.  
உதறுதுதானே?  அதைத்தான்அந்தக்கட்டுரையும்விரும்புகிறது.  
‘இந்தக்கட்டுரையாருக்காகஎழுதப்படுகிறது?’ என்றகேள்வியில்நாம்ஆரம்பிக்கலாம்.  நிச்சயமாய்இதுவெகுஜனங்களுக்கோஅல்லதுபாசிசசிந்தனைகொண்டவர்களுக்கோஎழுதப்பட்டதுஅல்ல.  கட்டுரைநெடுக,  ‘கற்பிதங்களில்மூழ்கியிருப்பவர்கள்’, ‘பித்தர்கள்’, ‘பில்டிங்ஸ்ட்ராங்